பரிபூரண பலவீனத்தினால் விளங்கும் பரிபூரண பலம் Jeffersonville, Indiana, USA 61-1119 1மழையும் பனியும் கலந்த இந்த காலையில் நான் இங்கு திரும்பவும் இருப்பதை நலமாக கருதுகிறேன். உங்களில் அநேகர் மிகவும் அதிக தூரத்தினின்று பிரயாணம் செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை நானறிந்திருக்கிறேன். விலையேறப் பெற்ற எனது நண்பர்களாகிய நீங்கள் சிக்காகோ, அல்பாமா, ஜியார்ஜியா, டென்னசி மற்றும் இல்லினாயிஸ் போன்ற இடங்களிலிருந்து வருகிறீர்கள், தேவன் தாமே உங்களின் பிரயாணங்களில் பாதுகாப்பைத் தந்தருளுவாராக. இப்பனிக் காலத்தில் ரஸ்தாக்கள் வழுக்கும் தன்மையுடையதாகி ஆபத்துக்குள்ளாக்கும் நிலைமையை உண்டாக்குமாதலால், தேவன் உங்களை பாதுகாக்க வேண்டுமென்பதே எங்களுடைய ஜெபமாயிருக்கின்றது. பனிக்காலத்திலும், கோடைக்காலத்திலும் இந்த தேசம் மிகவும் மோசமானதாயிருக்கிறது. ஆனால் இலையுதிர் காலத்திலும், வசந்த காலத்திலும் இது அழகான பிரதேசம். 2அங்கு ஒலிப்பதிவை இன்னும் அவர்கள் ஆரம்பிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். கடந்த ஞாயிறன்று நான் கொடுத்த செய்தியின் பேரில் ஒரு அறிக்கையை கொடுக்க விரும்புகிறேன். ஒலிநாடாக்களை நான் விற்பனைக்கு உடனடியாக விடாமல் இருப்பதற்கு காரணம் உண்டு. ஏனெனில் நான் இங்கு சபையில் கூறும் காரியங்களை மற்ற பொது மக்களுக்கு அதே விதமாக கொடுக்க நினைப்பதில்லை. அநேக சமயங்களில் அது ஜனங்களுக்கு இடறலாயிருக்கின்றது. மேலும் இங்கு கூடாரத்திலும் கூட ஜனங்கள் மத்தியில் கேள்விகள் எழ காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒலிநாடாக்கள் வெளியே போகும் முன்பு நான் அவைகளை முதலில் கேட்க விரும்புகிறேன்... 3நான் வித்தியாசமான கருத்துக்களாக அவைகளை கூறுவதில்லை. ஆனால் அபிஷேகத்தின் கீழ் சில சமயங்களில் ஜனங்களிடத்தில் சொல்லக் கூடாத காரியங்கள் வாய் தவறி வெளிவந்துவிடும். அச்சமயங்களில் அதை உன்னிப்பாக கவனிக்க முடியாது. அவ்விதமாக கூறினவைகளில் ஒன்று, நான் பீட அழைப்பை ஒருபோதும் விசுவாசிப்பதில்லை என்ற காரியத்தை கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டதே! அது ஒரு வேளை சிலரை இடறச் செய்திருக்கும். பாருங்கள்? நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்று நான் அதை உங்களுக்கு தெளிவாக்க விரும்புகிறேன். வேதாகமத்தில் பீடஅழைப்பு என்று ஒன்று எப்பொழுதும் இருந்ததில்லை. வசனங்களிலும் அதைக் குறித்து குறிப்பிடப்படவில்லை. ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு மெத்தோடிஸ்டுகளின் காலம்வரும் வரை மற்றெந்த காலங்களிலும் பீட அழைப்பென்று ஒன்று இருந்ததில்லை, பாருங்கள். பீட அழைப்பின் போது ஜனங்கள், “யோவானே, உன்னை அழைக்கிறேன் வா, உன் தாயார் இறந்து போனார்கள், உனக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது, வா யோவானே, வந்து விடு” என்றெல்லாம் கூறி இணங்க வைக்க முயற்சிக்கிறார்கள். அது சரியான மனந்திரும்புதல் அல்ல. அவ்விதமாக வந்தவர்கள் அதிக தூரம் பிரயாணம் செய்வதில்லை. அவ்விதமான காரியங்களினால் தான் இன்று சபையானது எல்லாவற்றிலும் குழப்பம் அடைந்துள்ளது. 4மனம் குத்தப்படுவதற்கு நீ ஒரு காரியத்தையும் செய்ய வேண்டியதில்லை. அந்த கிரியையை தேவன் செய்கிறவராயிருக்கிறார். “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்” இங்கு பீடஅழைப்பென்று ஒன்றுமில்லையென்பதை கவனித்தீர்களா? பீடமானது, சபைக்கு வரும் ஒவ்வொரு நபரும் அங்கு சென்று முழங்கால்படியிட்டு தங்களுக்காகவும், தங்களுடைய பிரியமானவர்களுக்காகவும், ஜெபத்தையும், தேவன் செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரங்களையும் அமைதியாக ஏறெடுக்கும் இடமாயிருக்கிறது. அவ்விதம் செய்த பின்பு தங்கள் இருக்கைகளுக்கு அவரவர் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும். ''நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங் காலமாயிருக்கிறது“ என்ற வார்த்தைக்கு இணங்க சபையானது, தேவனுடைய வார்த்தையான நியாயத்தீர்ப்பு புறப்பட்டுச் செல்லும் இடமாயுள்ளது. ஆனால் இன்று நாம் அதை அதிகமாக மாறுதலுக்குட்படுத்திவிட்டோம். 5பீட அழைப்பைக் கொடுப்பவர்களுக்கெதிராக நான் இல்லை. நானே அநேக முறை பீட அழைப்பைக் கொடுத்திருக்கிறேன். நான் இன்னுமாக தொடர்ந்து செல்வேனாகில் மேலும் அநேக பீட அழைப்புகளை கொடுப்பேன். பாருங்கள்? ஆனால் என்னை பொறுத்தமட்டும்... அதைக் குறித்து விரோதமானது ஒன்றுமில்லை, அதினால் பாதகமும் இல்லை அது பரவாயில்லை பாருங்கள்? இங்கு இயேசு கூறினதை கவனியுங்கள், “பிதாவானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னைஅனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்''. அது சரியான காரியமாகும். ஆகவே இவ்வசனங்கள் பீட அழைப்பு என்ற காரியத்தை முழுவதுமாக தூக்கியெறிந்து விடுகிறதல்லவா? “வார்த்தையை பிரசங்கி” என்பதே நம்முடைய பொறுப்பாகும். “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” 6ஜனங்களை பயமுறுத்தி இழுத்து கட்டாயப்படுத்தும் காரியம் சரியானதல்ல. முதலாவதாக ஜனங்கள் தெளிந்த புத்தியுடன் மனந்திரும்புதலின் கீழ் கிறிஸ்துவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் இருக்கைகளில் இருந்தவாரே ஜனங்கள் கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்ட பின்னர், தாங்கள் தவறாயிருக்கிறார்கள் என்று நிச்சயப்படுத்தப்பட்ட அப்பாவங்களின் மன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வது இரண்டாவது காரியமாகும். அவ்விதமாகத்தான் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. பாருங்கள். ஏனெனில் அவர்கள் மனந்திரும்பினதையும் “நான் கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக பெற்றுக் கொண்டேன்” என்பதையும் ஜனங்களுக்கு அடையாளப்படுத்துவதற்காக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறார்கள். பின்பு அத்தகைய நபர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள தகுதியானவர்களாகின்றர்கள். அநேகர் ஜனங்களை கட்டாயப்படுத்தி அவர்களை பீடத்தண்டை அழைப்பதை தொடர்ந்து செய்கின்றார்கள். அவ்விதமாக செய்ய விரும்புகிறவர்களைக் குறித்து என்னைப் பொறுத்தவரையில் அது சரியான காரியம்தான் ஆனால் அது வார்த்தையின் படியில்லை பாருங்கள். நான் வார்த்தையின் பேரில் சார்ந்து இருக்க விரும்புகிறேன். 7இதன் காரணமாகத்தான் அந்த ஒலிநாடாவை வெளிவிடாமல் நிறுத்தி வைத்தேன். ஏனெனில் அது ஏன் என்று விளக்கிக் கூறாமல் அதை வெளியே விட்டிருப்பேனென்றால், ஒரு வாரத்திற்கு 500 கடிதங்களுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டியிருந்திருக்கும். யாரோ ஒருவர் செய்த ஒரு சிறு பாரம்பரியத்தின் மேல் கால் வைத்து விடுவோமென்றால் அதையே திரும்பவும் திரும்பவும் செய்ய வேண்டியதாகிவிடும். அவ்விதமான வித்தியாசமான காரியங்களின் பேரில் நான் அநேக சமயங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறவனாக இருக்கிறேன். அவ்விதமாக செய்ய வேண்டுமென்பது எனது நோக்கமல்ல. ஆனால் சில சமயங்களில் நான் வகிக்கும் தொழிலினால் அவ்விதமாக காரியங்களை இழுத்து அதன் பேரில் சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது. ஜனங்கள் அதை புரிந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயத்திருக்கிறேன். 8நம்முடைய தவறுகளை உற்று நோக்கி நம்மேல் அவைகளை சுமத்தாத ஒரு பரம பிதா இன்னுமாக நமக்காக இருக்கிறார் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆபிரகாமின் வாழ்க்கையைக் குறித்த திவ்விய வாசகத்தை பவுல் ரோமர்: 4-ம் அதிகாரத்தில் எழுதியிருப்பதை நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆபிரகாம் நம்மை போல் அனேக சமயங்களில் பதறலுக்குள்ளானார் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவருடைய வாழ்க்கையின் வாசகம் எழுதப்படும்போது அவருடைய குழப்பங்களோ, பதறுதல்களோ அங்கே குறிப்பிடப்படவில்லை. “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்; தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்” அவ்விதமாகவே என்னுடைய காரியங்களும் எழுதப்படும் என்று நம்புகிறேன். என்னுடைய தவறுகளோ மற்ற காரியங்களோ அல்ல. ஆனால் தேவ ஜனங்களுக்காக எதை செய்ய முயற்சித்தேன் என்ற என் இருதயத்தின் நோக்கமே காரியமாகும். 9இந்த காலையிலும் ஜனங்களுக்கு கொடுக்க வேண்டுமென்று கர்த்தர் வைத்த ஒரு சிறு செய்தியை கொண்டுவர முயற்சிக்கிறேன். அது உங்களுக்கும் எனக்கும் நன்மையை உண்டாக்கும் என நம்புகிறேன். ஏனெனில் நாம் ஒருமிக்க இந்த மகத்தான கடைசி காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, தேவ வார்த்தையினின்று சில பகுதிகளை வாசிக்க நான் விரும்புகிறேன். ஒரு பகுதியை ஜெபத்திற்கு முன்பாகவும், அடுத்ததை ஜெபத்திற்கு பின்பும் வாசிக்க விரும்புகிறேன் முதலாவதாக விசுவாசத்தை குறித்ததான எபிரேயர்: 11-ம் அதிகாரம் 32-ம் வசனத்திலிருந்து தொடங்கி வாசித்து இந்த ஆராதனையை திறக்க விரும்புகிறேன். “பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்க தரிசிகளையும் குறித்து நான் விவரஞ் சொல்ல வேண்டுமானால் காலம் போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள் நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களை பெற்றார்கள். சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள். பட்டயக் கருக்குக்குத் தப்பினார்கள். பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள். அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக் கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறு சிலர் மேன்மையான உயிர்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைப் பெறச் சம்மதியாமல் வாதிக்கப்பட்டார்கள். வேறு சிலர்... நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும்... காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள். பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள். செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். இந்த இடைப்பட்ட வாக்கியத்தை கவனியுங்கள். (38-ம் வசனத்தின் முதல் வாக்கியத்தை ஆங்கிலத்தில் இடைப்பட்ட வாக்கியமாக அமைந்திருக்கிறது தமிழாக்கியோன்). உலகம் அவர்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலேயும், மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும்; வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற் போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையான தொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்“. (எபி. 11: 32-40) 10அந்த வீரமுள்ள போர் சேவகர்களைக் குறித்து நாம் படிக்கும்போது, நம்முடைய சிறிய சாட்சி அந்த நாளிலே அந்த ஜனங்களுக்கு இணையாக எங்கே நிற்கும் என்று நான் அதிசயிக்கிறேன். ஜெபிப்பதற்கு முன்னர், உங்களில் யாராவது தேவனிடத்தில் நினைவுக் கூறப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்திக் காட்டுங்கள்; அவர்தாமே உங்கள் தேவைகள் எதுவாயிருந்தாலும், அவைகளை பார்த்துக் கேட்டு, நாம் தலைகளை வணங்கியிருக்கும் இவ்வேளையில் உங்களுக்கு அவைகளை அருள்வாராக. 11கிருபையும் அன்புமான எங்கள் பிதாவே, இக்காலையில் எங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் ஜெபத்தை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் ஏறெடுத்து உம்முடைய சிங்காசனத்தை தாழ்மையுடன் நெருங்குகிறோம். முதலாவதாக கர்த்தாவே, எங்களுடைய அக்கிரமங்களையும் மீறுதல்களையும் மன்னியும், பின்பு மற்றவர்களும் மன்னிக்கப்பட ஜெபிக்கிறோம் கர்த்தாவே. உம்முடைய சபை உம்மிடம் நெருக்கமாக இழுக்கப்படட்டும். உம்முடைய சபையோடு நீர் கிரியை செய்ய ஆயத்தமாயிருக்கிறீர் என்றும், அதை உலகத்திலிருந்து எடுத்து உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் மறுரூபப்படுத்துகிறீர் என்றும் உண்மையாகவே எங்கள் இருதயங்களில் விசுவாசிக்கிறோம். ஆனால் கர்த்தாவே, அந்த மணி நேரத்திற்காக எங்களை ஆயத்தப்படுத்த உதவி செய்யும் கர்த்தாவே. “எல்லா பாரங்களையும், மிக சுலபமாக சூழ்ந்து கொள்ளும் பாவத்தையும் அப்புறப்படுத்தி எங்களுக்கு முன்னிருக்கும் ஓட்டத்தை பொறுமையோடு ஓட” எங்கள் எல்லாருக்கும் இக்காலையானது சரியான நேரமாக அமையட்டும். 12பரம பிதாவே வியாதியுள்ளவர்களையும் உபாதைக்குட்பட்டவர்களையும் இன்றைய தினம் சுகப்படுத்தும் என்று ஜெபிக்கிறேன். மற்ற நாடுகளிலுள்ளவர்கள் அனேகர் வாதைகளினாலும், விஷக்கிருமிகளினாலும், வாதிக்கப்படுகிறார்கள். உம்முடைய சுகமாக்கும் வல்லமை அம்மக்களுக்காக அமையட்டும் என்று ஜெபிக்கிறேன். பின்பு இந்த சிறிய சபைக்காக இக்காலையில் ஜெபிக்கிறேன். அனேகர் இங்கு கூடாரத்திற்கு வருவதற்காக, கடந்த இரவு புறப்பட்டு இரவெல்லாம் பல நூறு மைல்கள் கடினமாக வண்டியோட்டி கடந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வரும் பாதை பனியால் நனைந்திருக்கின்றது. தேவனே, அவர்களை விசேஷித்த விதமாக ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். அனேகர் அடுத்த வாரத்தின் ஆகாரத்திற்கும் அல்லது மற்ற எந்த காரியங்களுக்கும் வைத்திருக்கும் தங்கள் பணத்தின் பெரும்பகுதியை இங்கு வருவதற்கு தேவையான எரி திரவத்திற்காக செலவழிக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. தேவனே உம்மிடத்தில் வெறுமையாய் வருகிறவன் நிறைவுள்ளவனாக செல்வான். அதை நீர் வாக்களித்திருக்கிறீர். ஆண்டவரே, “சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷம்” என்ற விதமாக அவர்கள் கூடைகள் (அவர்கள் ஆத்துமாக்கள்) தேவனுடைய நன்மைகளினால் நிறைந்து வழிந்து இங்கிருந்து செல்ல நான் ஜெபிக்கிறேன். தேவனே, இந்த விசேஷமான ஜனங்களின் பாத்திரங்கள் தேவனுடைய ஆவிக்குரிய நன்மைகளினால் நிரம்பி வழியட்டும். 13கர்த்தாவே, ஒவ்வொரு கரங்களையும் ஆசீர்வதியும், அக்கரங்களின் பின்னால் உள்ள தேவைகளை நீர்அறிந்திருக்கிறீர். விசேஷமாக நீர் அவர்களை ஆசீர்வதிக்க நான் வேண்டிக் கொள்கிறேன். அவசரமான வியாதி, உபத்திரவ நேரங்களில் நீர் எவ்வளவு அற்புதமாக சில நிமிடங்களில் ஜெபங்களுக்கு பதிலளித்தீர் என்பதை கடந்த வாரத்தில் நாங்கள் பார்த்தோம். தேவனே, நீர் எங்கும் பிரசன்னராயிருக்கும் தேவனாக உம்முடைய ஊழியக்காரர்களை தாங்குகிறவராயிருக்கிறீர். இக்காலை நேரத்திலும் தேவனே நீர் அவ்விதமாக செய்யும். தேவனே அவர்களின் இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றும். அவர்களுடைய விண்ணப்பங்கள் சுயநோக்கம் உடையதாகவோ அல்லது தவறான நோக்கம் உடையதாகவோ இருக்கும் என்று நான் விசுவாசிக்கவில்லை. நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன். பிதாவே இன்றைய தினம் என்னை நினைத்தருளும். இங்குள்ள மேய்ப்பனிலிருந்து சிறு பிள்ளைகள் வரை நாங்கள் எல்லோருமாக தேவனுடைய பிரகாரத்தில் எங்களை கிடத்தி பரிசுத்த ஆவியானவர் பேசுவதை கேட்கத் தக்கதாக எங்கள் இருதயங்களைத் திறந்தருளும். சரியான பாதையில் நின்று உம்முடைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள எங்கள் பாத்திரங்களை நிரப்பியருளும். பின்பு உம்முடைய எண்ணெயின் வல்லமையினால் அவர்களை நிறைத்தருளும். வரும் காலங்களில் எங்களுக்கு தேவையாயிருக்கிற பலத்தினால் எங்களை நிறைத்தருளும் கர்த்தாவே இந்த ஆசீர்வாதங்களை எங்களுக்கு அருளுமாறு இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 14(ஒரு தொலைபேசியின் தொடர்பைக் குறித்து யாரோ ஒருவர் பேசியதற்கு சகோ. பிரான்ஹாம் பதிலளிக்கிறார்) அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. நீர் அவருடைய தொலை பேசியின் எண்ணை வாங்கி வைத்துக் கொள்ளும். ஆராதனை முடிந்தவுடன் நான் அவருடன் தொடர்பு கொள்வேன். எனக்காக ஜெபம் செய்யுங்கள். சகோ. ஜாக் மூர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் இந்த வாரம் அங்கிருக்க வேண்டுமென்று நிர்பந்தம் செய்கிறார். பாருங்கள் நான் அதைக் குறித்து சரியான விதமாக உணராததினால் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. நான் சகோ. ஜாக் மூரை நேசிக்கிறேன். அங்கு ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடாகி, பூத் கிளிப்பான் (Booth Clibborn) போன்ற பிரசங்கிகளையும் அவர் அல்லத்தட்டி விட்டு விளம்பரங்களை எல்லாம் அவர் செய்து விட்டு இன்னுமாக அவர் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே நான் அங்கு போகத் தக்கதாக மிகவும் நெருக்கப்படுகிறேன். 15இப்பொழுது, 2கொரிந்தியர்: 12-ம் அதிகாரத்திற்கு திருப்பி வாசிக்க ஆரம்பிப்போம். அதில் ஒரு வசனத்தை படித்து கர்த்தருக்கு மிகவும் சித்தமாயிருக்கும் பட்சத்தில் அதினின்று ஒரு மூல வாக்கியத்தை எடுப்போம். 2கொரிந்தியர்: 12-ம் அதிகாரம் 9-ம் வசனம். அதின் முதலாவது... அல்லது இரண்டாவது பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்கு போதும்; பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். மூல வாக்கியத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளத் தக்கதாக நான் இப்பொழுது அதை திரும்பவும் வாசிக்கிறேன். அதற்கு அவர்: (பவுலிடம் தேவன் பேசிக் கொண்டிருக்கிறார்). என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 16நான் இதை ஒரு மூலவாக்கியமென்று அழைப்பேனென்றால். “பரிபூரண பலவீனத்தினால் விளங்கும் பரிபூரணபலம்” என்னும் தலைப்பினால் இதை உபயோகிக்க விரும்புகிறேன். (ஆங்கிலத்தில் Perfect Strength by Perfect Weakness - தமிழாக்கிறோன்). ஒரு பெந்தெகொஸ்தே சபையில், இத்தகைய மூலவாக்கியமான “பலவீனம்” என்பதை உபயோகிப்பது ஒரு வழக்கத்திற்கு மாறான காரியமாகும். ஏனெனில் நாம் மிகவும் “பலம் உள்ளவர்கள்” என்று எப்பொழுதும் சாட்சிப் பகருகிறவர்களாயிருக்கிறோம். சபையார் முன்பாக எந்தக் காரியத்தைக் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்பதை கண்டு பிடிக்க வாரம் முழுவதும் நான் முயற்சி செய்கிறேன் என்பதை ஏற்கனவே நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். கேட்பதற்கு மட்டும் இங்கு வருகை தருவதாயிருந்தால், இக்காலையில் நான் இங்கு நிற்பதைக் காட்டிலும் யாராவது ஒருவர் பேச அதை நான் அதிகமாக கேட்பேன். 17வெளிப்படையாக கூறப் போனால், இரண்டு நாட்களுக்கு முன்புவரை நான் கென்டக்கியிலுள்ள சகோ. கேபார்ட் ஜனங்களோடு இருந்தேன். இந்த விசேஷமான சகோதரனின் குடும்பத்தாரை விட்டு நான் வந்த பின்பு இந்த எண்ணம் எனக்கு உதித்தது. இவர்கள் இடத்திற்கு செல்வதற்கு முன்பு நான் ஒரு வீட்டிற்குச் சென்றேன். நான் அங்கு வெளியே நின்று கொண்டிருக்கையில், ஒரு பெண்மணி, “நான் அந்த ஊழியக்காரரோடு பேச விரும்புகிறேன்'' என்றாள். பின்பு நான் அந்த வீட்டிற்குள் சென்றேன். அப்பெண்மணி என்னை நோக்கி, நீங்கள் சகோ. பிரான்ஹாமா? என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம், தாயே” என்றேன். அப்பொழுது அவள், “உங்களை உள்ளே அழைத்த போது என்னுடைய வீட்டின் தோற்றத்தை குறித்து நான் வெட்கமுற்றேன்” என்று கூறி அழத் தொடங்கினாள். பின்பு அவள், “ஆனால் சகோதரனே, என்னுடைய மிக அவசிய தேவை ஒன்றிருக்கிறது. நான் உங்கள் மேல் உண்மையான நம்பிக்கை வைத்துள்ளேன்'' என்றாள். பின்பு தான் நான் கண்டுபிடித்தேன். நம்முடைய சிறிய பாட்டியாகிய சகோதரி காக்ஸ் அவர்கள் ஒரு ஒலிபதிவு கருவியுடன் அந்த சுற்றுப் புறத்தில் உருவ சென்று ஒலிநாடாக்களை போட்டு கேட்க செய்கிறார்கள் என்று. அதுதான், அதுதான் காரியம் பாருங்கள்? 18அந்த வீட்டைச் சுற்றி நான் பார்த்தேன். அது நான் வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இடத்தைப் போன்று ஒரு தாழ்மையான வீடாயிருந்தது. ஆனால் அவ்வீட்டின் சுவர்கள் கிறிஸ்துவின் படத்தால் நிறைந்திருந்தது. மேஜையின் மேல் வேதப்புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. பின்பு நான் அத்தாயாரைப் பார்த்து, “இத்தகைய ஓர் வீட்டிற்குள் நான் பிரவேசிக்க, என் வாழ்நாளில் கிடைக்கப் பெற்ற ஓர் உயர்வாக எண்ணுகிறேன்” என்று கூறினேன். யாரோ ஒருவருக்காக ஓர் விண்ணப்பத்தை அவள் கொடுத்தாள். இந்த பாட்டியாகிய சகோதரியும் நானும் 5 மணி நேரம் ஒன்றாக ஜெபித்தோம். அப்பொழுது கர்த்தர் பதிலளித்தார். சகோதரி காக்ஸ் அவர்கள் எடுத்த முயற்சிகளின் மூலம் நாங்கள் ஏதாகிலும் செய்யத் தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கத் தக்கதாக அக்காலையில் நானும் தாயார் காக்ஸ் அவர்களும் மேஜையை சுற்றியிருந்து தலைவணங்கி ஜெபித்தோம். அவ்விதமாக மற்றவர்களும் கேட்ட பொழுது தேவன் வழியைத் திறந்தார். அவர் தேவனாயிருக்கிறார். பாருங்கள்? 19நம்முடைய பலவீனத்தை ஒரு சாக்காக வைக்க நாம் முயற்சிக்கிறோம். நாம் எவ்வளவு பெரியவர்களென்றோ அல்லது எவ்வளவு மகத்துவமானவர்களென்றோ கூற விரும்புகிறோம். அத்தகைய ஓர் காரியத்தை நம்முடைய மனதிலிருந்து எடுத்துப் போடவே தேவன் எனக்கு இப்படியொரு மூல வார்த்தையைக் கொடுத்தார். பாருங்கள்? நம்முடைய தவறு எங்குள்ளது என்று கண்டு அதைச் சரி செய்வதற்காக நாம் ஆலயத்திற்கு வருகிறோம். ஏனெனில் நாம் சிறுசிறு காரியங்களை செய்கிறவர்களாயிருக்கிறோம். வேறு ஏதாகிலும் ஓர் நோக்கத்திற்காக நாம் ஆலயத்திற்கு வருகிறோமென்றால் இங்கிருந்து பிரயோஜனமான ஏதாகிலும் நாம் பெற்றுக் கொள்ள இயலாது என நான் அஞ்சுகிறேன். நம்முடைய தவறான பாகம் எது என்றும், நம்முடைய பலவீனம் எது என்றும் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும் கண்டு நம்முடைய நம்பிக்கையை பலமுள்ள ஒருவரிடம் ஒப்படைக்கும் நோக்கத்திற்காக கண்டிப்பாக சபைக்கு வர வேண்டியவர்களாயிருக்கிறோம். 20நம்மில் அநேகர், “எனக்கு சரியான கல்வியறிவில்லை, என்னில் பலமேதும் இல்லை, நான் இக்காரியங்களைச் செய்ய இயலாதவன்” என்று சாட்சிக் கூற விரும்பி அதையே ஒரு சாக்காக (excuse) வைக்க விரும்புகிறீர்கள். நீங்கள் அவ்விதமாகவே தொடர்ந்து இருப்பீர்களென்றால் அது உங்களுக்கு ஒரு பிரயோஜனத்தையும் உண்டாக்காது. ஆனால் நாம் எந்த பலவீனங்களை சாக்கு போக்காக உபயோகிக்கிறோமோ அந்த காரியத்தையே தேவன் தமது வேலைக்காக பயன்படுத்த எடுத்துக் கொள்கிறார். பாருங்கள்? நாம் அந்த நிலைமைக்குள்ளாக வரும் வரை தேவன் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அது உண்மை. நாம் அவ்வித நிலைமையில் இருப்பதின் காரணத்தினால்தான் அவர் நம்மை தெரிந்து கொள்கிறார். அது வினோதமாக தென்படுகிறது. ஆனால் தேவனுக்குச் சித்தமானால் இன்னும் சில நிமிடங்களில் அதன் காரணத்திற்குள்ளாக நாம் செல்லலாம். நாம் வாசித்தபடி வெளி உலகத்தினால் பலவீனர்கள் என்றும் புறக்கணிக்கப்பட்டவர்களென்றும் கருதப்பட்ட ஜனங்களே, யுத்தத்தின் முதல் வரிசையில் நின்று வீரர்களாகவும், ஜெயிக்கிறவர்களாகவும் இருந்தனர். தேவன் தங்களை தகுதியில்லாதவர்களென்று உணர்கிறவர்களையே அவ்விதம் உபயோகிக்கிறார். 21வடக்கு இந்தியானா அல்லது ஓஹையோ என்னுமிடத்திலிருந்து மூன்று சகோதரர்கள் இந்த சபைக்கு வருகிறார்கள். வெகுநாட்களுக்கு முன்பு அச்சகோதரர்கள் என்னை நோக்கி, “சகோ. பிரன்ஹாமே, நாங்கள் இப்பொழுது தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டோம். இப்பொழுது எங்கள் ஊழியத்திற்கென்று வரங்களை நாடலாமா?” என்று கேட்டனர். அதற்கு நான், “அதை செய்யாதீர்கள், இப்பொழுது இருக்கிற விதமாகவே இருங்கள்” என்று கூறினேன். அம்மூன்று சகோதரரில் ஒரு சகோதரன் (அவர் ஒரு மெத்தோடிஸ்டு சகோதரன்) என்னை நோக்கி, “நான் தற்சமயம் தான் ஒரு குறிப்பிட்ட சகோதரன் எழுதிய புத்தகத்தைப் படித்தேன். அதில், நாம் பரிசுத்த ஆவியைபெற்ற பின்பு, அதன் உபயோகத்திற்காக வரங்களை நாட வேண்டும் என்று கூறியிருக்கிறாரே” என்றார். அதற்கு நான், “திணிக்கப்பட்ட சட்டையைப் போலாகிவிடுமே!” என்றேன். 22வேதாகமத்தை நீங்கள் கவனிப்பீர்களென்றால், தேவன் உபயோகிக்கும் மனிதர்களெல்லாம் எப்பொழுதும் அதனின்று ஓட முயற்சித்தவர்களாகவே காணப்பட்டனர். ஒரு மனிதன் ஏதாகிலும் ஒன்றை செய்ய விரும்பி அதை தன்னுடைய திறமையினால் செய்ய முடியும் என்று எண்ணுகின்ற வரை, தேவன் அத்தகைய மனிதனை ஒருபோதும் உபயோகிக்க மாட்டார். மோசே, பவுல், மற்றவர்களை கவனியுங்கள் இவர்களெல்லாரும் அதை விட்டு ஓட முயற்சித்தவர்களாகவே இருந்தனர். நான் அச்சகோதரர்களைப் பார்த்து, “எதையும் நாடாதீர்கள். உங்களுக்கு கொடுக்க வேண்டுமென்று தேவன் ஏதாகிலும் வைத்திருந்தால், அவர் அதை தருவார்; அதைக் குறித்து அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார்” என்று கூறினேன். மேலும் நான், “இன்றைக்கு எல்லாரும் இதை அதை செய்ய விரும்பி மகத்தானவர்களாக விரும்புகிறார்கள். அதினிமித்தம் இன்றைக்கு நாம் எதைப் பெற்றுக் கொண்டோம் பாருங்கள்'' என்றேன். மகத்தானவர்களாக இருக்க முயற்சிப்பதைக் காட்டிலும், எவ்வளவு சிறியவர்களாக நாம் மாற முடியும் என்பதை முயற்சி செய்ய வேண்டும். பாருங்கள்? அப்பொழுது தேவன் நம்மை உபயோகிக்க முடியும். நான் குறிப்பிடுவதற்காக அநேக வேத வசனங்களை எழுதி வைத்திருக்கிறேன். ஒரு வேளை அவைகள் எல்லாவற்றையும் குறிப்பிடுவதற்கு நேரமில்லாமற் போய்விடலாம். 23கவனியுங்கள், யுத்த களத்தில் தேவன் எப்பொழுதும் கொண்டிருந்த வீரர்கள் எல்லாம் பரீட்சார்த்தமாக பலவீனரும், புறக்கணிக்கப் பட்டவர்களுமாயிருந்தனர். ஒரு மனிதன் புறம்பாக்கப்பட்டவனாக, தான் ஒரு தகுதியும், வல்லமையும் இல்லாதவன் என்று எண்ணும்போது அதுதான் தேவன் உபயோகிக்க ஆரம்பிக்கும் தகுதியான நிலைமையாகும். அது உண்மை. நீங்கள் ஒன்றுமில்லையென்றும், தங்களால் ஏதும் இயலாது என்று உணரும்போது, அப்பொழுது தான் தேவன் அவர்களை எடுத்து அவர்களைக் கொண்டு ஏதாகிலும் செய்வார். ஆனால் நம்மால் அதை செய்யக் கூடும் என்று நாம் எண்ணும்போது தேவன் நம்மை உபயோகிக்க முடியாது. ஏனெனில் நாம், நாமே அதை செய்ய விரும்புகிறோம். பாருங்கள்? 24மாறாக நாம் தகுதியில்லாதவர்களென்பன போன்ற உணர்வுகளைப் பெற்று நாம் அதை செய்ய விரும்பாதவர்களாகலாம். ஆனால் நாம், அத்தகைய நிலைமையில் தேவனுடைய அழைப்பிற்கு செவி கொடுப்போம் என்றால், அந்த ஓர் காரியத்திற்குள்ளாகத் தான் தேவன் நுழைய விரும்புகிறார். அத்தகைய தோற்றமாக நாம் மாறும்போது அவர் நம்மில் காரியத்தை நடத்தமுடியும். நாம் தகுதியில்லாதவர்களென்ற நிலைமைக்குள்ளாகும் போது அவருடைய ஆவிக்கு ஒப்புக்கொடுக்கும் பிரஜைகளாகிறோம். நம்மால் முடியும் என்று நினைக்கும் வரை அதை செய்ய நம்மால் இயலாது. ஆனால் நம்மால் முடியாது என்று அறிந்து அத்தகைய ஓர் இடத்தை நாம் அடைந்து தேவனுக்கு நம்மை ஒப்புக் கொடுக்கும்போது தேவன் அதை நம்மில் செய்கிறவராயிருக்கிறார். ஆகவே, நாமே அதை செய்ய முயற்சிக்கும் போது நாம் தவறுகிறவர்களாயிருக்கிறோம். ஆனால் நாம் தேவனை மட்டும் சார்ந்து ஒப்புக் கொடுக்கும்போது தேவன் ஒரு போதும் தவறாதவராயிருக்கிறார். வழுவாமலிருக்கும் ஓர் காரியத்தை மட்டுமே தேவனால் செய்யக் கூடாது. ஆகவே, நம்முடைய சொந்த திறமைகளை சார்ந்து இருக்கும் வரை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் நாம் ஒன்றுமில்லை என்று அறிந்து அத்தகைய இடத்தை நாம் அடையும்போது அப்பொழுது தான் தேவன் நம்மை உபயோகிக்க முடியும். 25ஒரு காரியத்தை நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது மனதில் இருத்திக் கொள்ளுங்கள். விசேஷமாக வாலிப பிரசங்கிகளே, விசுவாசிகளே, தேவனுடைய விருப்பம் நம்வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் ஒரு காரியத்தை நாம் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். அது என்ன? அதுதான் மனிதத் திறமை. நம்முடைய சொந்த திறமையினால், புத்தி கூர்மையினால் அதை செய்ய கூடும் என்ற இடத்தை அடையும் போது அத்தகைய உணர்வுகளை நாம் மேற்கொண்டு, தேவன் நம்மை உபயோகிக்கத் தக்கதாக அவைகளை முற்றிலும் களைந்து புறம்பாக்கி விட வேண்டும். அதுதான் சரியான காரியமாகும். 26முற்றுமாய் உங்களை ஒப்புக் கொடுங்கள் ஒரு திறமையைக் கூட நம்மால் உபயோகிக்க முடியாது. முற்றுமான ஓர் சமர்பித்தலை நாம் செய்து தேவனிடத்தில் வரவேண்டும். உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் எல்லாவற்றையும் அவருக்கு சமர்பிக்க வேண்டும். அவருடைய சித்தத்தை என்னிலும் உங்களிலும் அவர் செய்யத் தக்கதாக நம்முடைய “நாம்” என்ற எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்பொழுது கவனியுங்கள். அது கடினம் என்று நான் அறிவேன். ஏனெனில் நாம் எப்பொழுதும் நாம் அறிந்த ஒன்றை அல்லது நம்முடைய பாகத்தை முன்பாக வைத்து காரியங்களை செய்ய விரும்புகிறோம். “நல்லது, இதை இந்த பிரகாரமாக செய்ய வேண்டும் என்று நானறிந்திருக்கிறேன்” என்று நாம் கூறுவோம், அத்தகைய வழியில் நீங்கள் அதை செய்யும் போது அது தவறாக போய்விடும். தேவன் அந்த முயற்சியை உபயோகிக்க மாட்டார். “தேவன் உங்களுடைய திறமையை உபயோகிக்கமாட்டார் என்ற காரியத்தை கர்த்தருடைய உதவியினால் இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். 27இன்றுள்ள உலகத்தின் காரியம் இதுதான். நாம் வேத பள்ளிகளின் அனுபவத்தின் மேலும், கல்வியின் மேலும், ஸ்தாபனத்தின் மேலும், ஒருவரையொருவர் அதிகமாக சார்ந்திருக்கிறோம். “ஒருவரையொருவர் உயர்த்துவீர்களென்றால் உங்களில் விசுவாசம் எவ்விதம் உண்டாயிருக்கும்” என்று வேதம் கூறுகிறது. “இந்த மனிதன் மகத்தானவர்; ஆகவே நான் அவர் மேல் சார்ந்துக் கொள்வேன்” என்று நாம் எதிர்பார்க்கும் போது அத்தகைய செய்கை தேவனைப் பிரியப்படுத்தாததாகக் காணப்படுகின்றது. நாம் தேவனை மட்டுமே சார்ந்துக் கொள்ள வேண்டும். நம்முடைய சொந்த திறமையின் பேரிலோ அல்லது எந்த மனுஷனின் மேலோ நம்பிக்கையை வைக்கக் கூடாது. மாறாக தேவனை நிச்சயமாக நாம் சார்த்திருக்க வேண்டும். 28யாருடைய திறமையாயிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அது தேவனுடைய பார்வையில் பிரயோஜனமற்றது. தேவன் தம்முடைய நோக்கத்தை நம்மில் நிறைவேற்றும் முன்பு நம்முடைய திறமைகளையெல்லாம் அவர் நம்மை விட்டு அகற்ற வேண்டியவராயிருக்கிறார். தேவன் நாம் செய்வதற்காக ஒரு காரியத்தை வைத்திருந்து நாமோ, அதை நல்ல விதமாக செய்கிறோம் என்று எண்ணம் கொண்டிருப்போமென்றால், நாம் ஒரு போதும் தேவனால் உபயோகிக்கப்பட முடியாது. “ஓ, பிரான்ஹாம் அவர்களே, பயங்கரமான விசாலமான வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டீர்களே” என்று நீங்கள் கூறலாம். அது அப்படித்தான் ஆனால் நீங்கள் ஆராய்ந்து பார்த்து அது சரியா இல்லையா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். இன்று நம்முடைய மகத்தான சாதனைகள் என்று நாம் செய்த காரியங்களை எண்ணிப் பாருங்கள், இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கிறிஸ்தவம் எங்கே? நாம் பெற்றுக் கொண்ட நம்முடைய சபைகள், ஸ்தாபனங்கள், சுவிசேஷகர்கள், சுகமாக்கும் கூட்டங்கள் இவைகள் எல்லாம் என்ன? ஆரம்பத்தில் இருந்ததைக் காட்டிலும் கேவலமாகிவிட்டது! முன்பு இருந்ததைக் காட்டிலும் இவைகள் இன்றைக்கு மிகவும் மோசமாகிவிட்டது. ஏனெனில் அதை நாம் மனித திறமையின் மூலமாக செய்ய முயற்சித்தோம். அவர்கள் கூட்டமாக கூடி நீண்டதொரு ஜெபம் செய்து பின்பு கலைந்து செல்கின்றனர். அன்றொரு நாள் மிகவும் அதிக எண்ணிக்கையான பிராடெஸ்டெண்டுகளும், கத்தோலிக்கர்களுமாக ஏறத்தாழ 150,000 பேர் கூடி ஏதோ ஓர் ஜெபங்களை ஏறெடுத்தனர். அவ்விதமாக செய்வதற்கு அவர்கள் கூடாமலேயே இருந்திருக்கலாம். அது தேவனுடைய பார்வையில் ஒன்றுமில்லாததாக இருக்கிறது. இப்பொழுது நான் குற்றம் பிடிப்பவனைப் போல் இருப்பேனென்றால், என்னை மன்னியுங்கள். உங்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும். பாருங்கள்? அத்தகைய ஆணியை அடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 29அது என்ன நன்மையைப் பயத்தது? ஒன்றுமில்லை. தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிற ஒவ்வொரு நபரும் தங்களுடைய சொந்த திறமையை மறந்து தேவனிடத்தில் சார்ந்துக் கொள்ளும் வரை அது ஒரு போதும் சரியாயிருக்காது. அவரைச் சார்ந்துக் கொள்ளும்போது தேவன் தம்முடைய நோக்கமாகிய ஒரு எழுப்புதலை அல்ல சகோதரனே... நாம் உயிர்ப்பிக்கப்படத் தக்க ஒரு மரணத்தை அவர் முதலாவதாக அனுப்ப வேண்டியவராயிருக்கிறார். நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு மரணம் அடையவேண்டும். நமக்குள்ளாக ஓர் மரணத்தை தேவன் நாடுகிறார். என்னையும் சேர்த்து இந்தக் கூடாரத்திற்கு ஒரு மரணம் தேவையாயிருக்கிறது. ஒரு புதிய ஜீவனுக்குள், ஓர் புதிய பிடிப்பிற்குள், ஓர் புதிய நம்பிக்கைக்குள், ஓர் புதிய அனுபவத்திற்குள் நாம் எல்லோரும் உயிர்பிக்கப்பட்ட ஒரு மரணம் நமக்கு தேவையாயிருக்கிறது. முதலில் ஒரு நாள் புலம்பல் நமக்கு தேவையாயிருக்கிறது. 30நம்முடைய பள்ளிக்கூடங்களின் மேலும், நம்முடைய திட்டங்களின் மேலும், நம்முடைய கூட்டங்களின் மேலும் அதிகமாகச் சார்ந்திருப்பதைக் காட்டிலும் ஆவியானவருக்கு நம்மை ஒப்புக் கொடுக்கின்ற நிலைமை நமக்கு தேவையாயிருக்கின்றது. நாம் அநேக ஊழியக்காரர்களோடு கூட்டு வைத்துக் கொண்டு அதைச் சார்ந்திருக்கிறோம். “நமக்கு அதிகமான கூட்டு அமைப்பு கிடைக்கவில்லையென்றால் அக்காரியத்தை செய்கிறதில்லை, அத்தகைய அமைப்பு இல்லாமல் நகரங்களுக்குள் நாம் செல்கிறதுமில்லை” அவ்விதம் செய்யும்போது, கரிமிலத்தூள் படிந்த ஒரு மகத்தான பெரிய இயந்திரமாக அதை நாம் ஆக்கிவிடுகிறோம். அத்தகைய மனித் திறமையினின்று நாம் விலகிட வேண்டும். வீட்டு பெண்மணியிலிருந்து, விவசாயி, கைவேலைக்காரன் மற்றும் யாராயிருந்தாலும் நாம் நம்முடைய ஆத்துமாக்களை “நாம் ஒன்றுமில்லை” என்று முழுவதுமாக தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும் இடத்திற்கு வந்து பின்பு அங்கிருந்து தேவன் நம்மில் ஆரம்பிக்க விட்டுவிட வேண்டும். அப்பொழுது அவர் நம்மில் அசைவாடி கிரியை செய்ய ஆரம்பிப்பார். அந்தக் காரியத்தை தான் நாம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். 31தேவன் எப்பொழுதும் ஒன்றுமில்லாதவர்களை தெரிந்துக் கொண்டு அவர்களை விசேஷமானவர்களாக மாற்றுகிறார் என்பதை சரித்திரமானது அன்றும் இன்றும் நிரூபிக்கிறதாயிருக்கின்றது. ஒன்றுமற்ற நபரையே தேவன் தம் கரத்தில் எடுக்கிறவராயிருக்கிறார். ஒரு நல்ல வேதப் பண்டித்துவ பிண்ணனி இல்லாமல் போனால் இன்று நீங்கள் ஒரு நகரத்திற்குள்ளாக நுழையவோ அல்லது ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய முயற்சிக்கவோ முடியாது. ஆனால் உங்களுக்கு அப்படியொரு பிண்ணனியும் மகத்தான பயிற்சிகளும் இருக்குமானால் நீங்கள் எந்த பட்டிணத்திற்குள் வேண்டுமானாலும் சென்று அங்குள்ள ஒத்துழைப்பைப் பெற்று ஒரு மகத்தான கூட்டத்தை அமைக்கலாம். நல்லது, அது ஒரு கூட்டமாக இருக்காது. மற்ற எல்லாவற்றைப் போலவும் அது அமைந்திருக்கும். ஆனால் அது என்ன விதமான நன்மையைப் பயக்கக் கூடும்? பாருங்கள். அக்கூட்டங்களில் சிறு பெண் - பெண் பிள்ளைகளும், பையன்களும், மெல்லும் பசை மிட்டாயை (chewing gum) மென்று, மென்று கொண்டே பீடத்திற்கு செல்லுகிறார்கள். பெரிய பெண்மணிகளும், ஆண்களும், “பீடத்தின் வரை சென்றோம்'' என்ற விதமாக சென்று அறிவுரைகளுக்காக அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட பின்பு தெளித்தலோ, முழுக்கலோ பெறுகிறார்கள். பின்பு அன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து பார்க்கும் போது... 32நம்மிடையேயுள்ள மகத்தான சுவிசேஷகர்களில் ஒருவர், அவருடைய கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தை ஒரு வருடமாவது தான் காக்க அறிந்திருந்தால் அது அவரை சந்தோஷிப்பிக்கச் செய்யும் என்று கூறியிருக்கிறார். ஒரு ஆயிரம் மனம் மாறினவர்கள் அவருக்கு கிடைக்கப்பெறின், அடுத்த வருடம் அந்த ஆயிரம் என்பது பத்தாயிரமாக இருக்க வேண்டும். பாருங்கள், அப்படியானால் நாம் இலக்கையும் நோக்கத்தையும் தவற விடுகிறோம். நம்மில் சிலர் அதை மூளை அறிவின் மேல் கட்டுகிறோம், “ஓ, அது, ”எல்லாம் அறிந்த பயிற்சி பெற்ற பண்டிதர் இவர், நாம் நம்முடைய ஜனங்களை பள்ளியில் சேர்த்து பயிற்றுவிப்போம்'' என்கிறோம். வேறு ஒருவர் அதை உணர்ச்சிகளின் மூலமாக, கைகுலுக்குதல், அழுதல், சத்தமிடுதல், ஆவியில் நடனமாடுதல், மற்றும் வெளிப்பிரகாரமான உணர்வு தூண்டப்பட்ட ஏதாகிலுமொன்றில் மேல் கட்டுகிறார். அது கல்வியின் மூலம் கட்டப்படுவதைக் காட்டிலும் அவலட்சணமானது. பிசாசு உங்களை இந்த பக்கம் இழுக்க முடியவில்லையென்றால், அவன் வேறு பக்கமாக உங்களை தள்ளிவிடுவான். ஆனால் காரியம் என்னவென்றால், நீங்கள் ஒன்றையும் சார்ந்திராமல், உங்களால் செய்ய முடிந்த காரியங்களையும், உங்களையும், எல்லாவற்றையும் உங்கள் பலவீனங்களையும் முற்றுமாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, “இதோ அடியேன்'' என்று கூறுங்கள். எந்த திறமையின் மேலும் நம்பிக்கை வைக்காமல் ஒன்றுமில்லாமலாகுங்கள். 33வேத வாக்கியங்களை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். அத்தகைய வேத வசனங்களை நான் குறிப்பிடுவதற்காக எழுதி வைத்திருக்கிறேன். தேவன் எப்பொழுதும் ஒன்றுமில்லாதவர்களை விசேஷித்தவர்களாக செய்து உபயோகித்தார் என்பதை வேத வாக்கியங்களின் வாயிலாக நாம் காண்கிறோம். இந்த நவநாகரீக உலகம் புறம்பே தள்ளினவர்களை அவர் உபயோகிக்கத் தக்கதாக தம் கரத்தில் எடுக்கிறார். அப்போஸ்தலர்களை பற்றி சிந்தியுங்கள். பேதுரு யோவான் இவர்களைக் குறித்து யோசித்துப் பாருங்கள். அவர்கள் மீன்பிடிப்பவர்கள். போதுமான கல்வியறிவு இன்றி தங்கள் சொந்த பெயரையும் கூட எழுத தெரியாதவர்கள். படிப்பறிவில்லாத அறியாமையுள்ளவர்கள். அத்தகைய மனிதர்கள் தங்களை ஒரு பெரியவர்கள் என்று கருதிய கனவான்களையும், கல்வியறிவு படைத்த ரபீக்களையும், அந்நாட்களின் செல்வமிகுந்தவர்களையும், பண்டிதர்களையும் சபை அங்கத்தினர்களையும் தேவன் தள்ளிவிட்டு, ஒன்றுமில்லாதவர்களை எடுத்து அவர்களை உபயோகித்தார். 34இப்பொழுது கவனியுங்கள். தங்களை பெரியவர்கள் என்று எண்ணுகிறவர்கள் அவருடைய ஜனத்தில் ஒருவராக ஆகலாம். ஆனால் அவர்கள் தாங்கள் பெரியவர்கள் என்பதை மறக்க ஆயத்தமாயிருந்தால் தேவன் அவர்களையும் உபயோகிக்க முடியும். நீங்கள் பெரியவர்கள் என்பதை மறந்து ஒன்றுமில்லாதவர்களாக மாறும்போது தேவன் உங்களை விசேஷமானவர்களாக மாற்றி உபயோகிக்கக் கூடும். பாருங்கள்? ஆனால் நீங்கள் முக்கியமானவர்கள் என்பதை மறக்க வேண்டும்? சில ஜனங்கள், கிறிஸ்தவர்களாக மாறினவுடன் அகந்தையுள்ளவர்களாகவும், வித்தியாசமானவர்களாகவும் மாறிவிடுகின்றனர். நம்மில் அநேகர் நம்முடைய ஜீவியங்களில் அவ்விதமாக செய்கிறோம். அது உண்மை. அவர்கள் மாறான பாதையை எடுத்துக் கொள்ளும்போது, முன் நோக்கிச் செல்வதற்கு பதிலாக பின்நோக்கிச் செல்லுகிறவர்களாயிருக்கிறார்கள். நீங்கள் அதிகமாக உங்களை துறக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வருவதற்கு அங்கே அதிக இடமுண்டாயிருக்கும். எலிசா யோசபாத்தையும் அவனை சேர்ந்தவர்களையும் பார்த்து, “இந்த பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள் (1இரா: 3:16) ஆழமாக தோண்டும் போது தண்ணீர் நிரப்புவதற்கு அதிக இடமுண்டாயிருக்கும்” என்று கூறினது போல நம்முடைய “நாம்” என்ற காரியத்தையும், குப்பையான நம்முடைய திறமைகளையும் அதிகமாக நம்மைவிட்டு வெளியே தள்ளும்போது, தேவனுடைய ஆவியானவர் நிரம்புவதற்கு அதிக இடமங்கேயுண்டாயிருக்கும். 35இரண்டு கொரிந்தியரில் நாம் சற்று முன்பு பவுலைக் குறித்து படித்தோம். அவன் ஒரு மகத்தான மனிதன் என்று நாம் காண்கிறோம். அவன் ஓர் மகத்தான பண்டிதனாக இருந்தான். ஆனால் அவன் கிறிஸ்துவை அறிந்துக் கொள்வதற்காக தான் அறிந்த எல்லாவற்றையும் மறக்க வேண்டியதாயிற்று. என்னுடன் கூட நீங்களும் இந்த வேத வசனங்களில் ஒன்றை படிக்க விரும்புகிறேன். 1கொரி: 2:1-ம் வசனத்திலிருந்து ஆரம்பித்து படிப்போம். இந்த கல்வியறிவு பெற்ற மனிதன் தன்னைப் பற்றியும் தான் என்ன செய்ய வேண்டும் என்ற காரியத்தையும் கூறுகின்றதை படிப்போம். 36இந்த மனிதன் பயிற்சிப் பெற்று, உலகத்திலுள்ள மொழிகளில் ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பேசக் கூடியவனாக இருந்தான். அதைக் குறித்து பெருமையடித்துக் கொள்கிறவனாயுமிருந்தான். அவனுடைய தகப்பனார் ஒரு பரிசேயன். ஆகவே இவனும் கண்டிப்பாக பரிசேய முறைமையில் வளர்க்கப்பட்டிருந்தான். பின்பு அவன், “பரிசேயர்களுக்கெல்லாம் பரிசேயன்” என்ற விதமாக விளங்கினான். அதன் பொருள் என்னவெனில் பரிசேய முறைமைகளில் கண்டிப்பானதொரு பரிசேயன் என்பதாம். அவன் அதிகாரமுடையவனாகவும் சாதுரியமானவனாகவும் இருந்தான். அவனுடைய தகப்பனார் அந்நாட்களில் இருந்த எல்லா பள்ளிகளிலும் உள்ள போதகர்களை விட மிக சிறந்த போதகனாகிய கமாலியேலின் கீழ் பவுலுக்கு கல்வியைப் போதித்தான். பவுல் அத்தகைய விதமாக எல்லா மொழிகளையும் கற்றான். மனோதத்துவம் மற்றும் இன்னும் அந்நாட்களில் இருந்த அநேக கல்விகளையும் அவன் கற்றிருந்தான். தேவாலயத்திலுள்ள மகத்தான, ஆசாரியர்கள் மேல் வைராக்கியமாய் சார்ந்திருந்தான். ஆகவே, தேவ சபையை துன்பப்படுத்தும்படி அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தான். 37இவ்விதமாக தன்னுடைய எல்லா கல்விகளோடும் இருந்த இந்த மனிதன் கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்ட பின்பு அதே மனிதன் பேசின வார்த்தைகளை கேளுங்கள். மகத்தானவனாகவும், வல்லமையுள்ளவனாகவும் இருந்த இவன் - அவைகளை மறக்க வேண்டியதாயிற்று. அவன் பெற்ற கல்வி, பயிற்சிகள் யாவையும் மறந்து தன்பேரில் சார்த்திருத்தலையும் துறந்து விட வேண்டுமென உணர வேண்டியதாயிற்று. இப்பொழுது அவனுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். “சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்த போது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது (கவனியுங்கள்?) அறிவிக்கிறவனாக வரவில்லை. “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்”. மகத்தான மனிதனாகிய பவுலின் சாட்சியை உங்களுக்குள்ளேயிருக்கின்ற திறமைகளை அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். உங்களுக்குள் ஒன்றுமில்லை என்பதை நானறிந்து - உங்களிடத்தில் ஒரு காரியத்தை மட்டும் பார்க்க, அதாவது சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை மட்டும் உங்களில் அறிந்திருக்க தீர்மானித்தேன். அதுதான் காரியம், அப்படிப்பட்ட ஒரு மனிதனின் சாட்சியை கவனியுங்கள்: உங்களுடைய திறமைகளை குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்று நான் தீர்மானிக்கவில்லை, ஏனெனில் உங்களிடத்தில் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன். நான் உங்களிடத்தில் ஒன்றை மட்டுமே காண வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன், அது இயேசுகிறிஸ்து மற்றும் சிலுவையில் அறையப்பட்ட அவரையே. உங்களுக்குள் சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரை, அதை மட்டுமே நான் அங்கீகரிப்பேன். 38கவனியுங்கள்: அல்லாமலும் நான்... (மகத்துவத்தோடா? அல்லது என்னவாக இருந்தேன்) பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். பரிசேயருக்கெல்லாம் பரிசேயனும், போதகர்களுக்கெல்லாம் போதகனும், சிறு பிராயத்திலிருந்தே சாமர்த்தியமாக பேசவும், ஞானமுடையவனாகவும் இருக்கும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்ட (ஊழியத்திற்காக) ஓர் மனிதன். கொரிந்தியர்களைப் போன்ற ஜனங்களிடத்திற்கு வந்து, “நான் பலவீனத்தோடும், பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்'' என்று குறிப்பிடுவதை உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடிகிறதா? முன்பு எப்பொழுதும் அறிந்திராவண்ணம் உலகத்தை தலைகீழாக மாற்றின மகத்தான அப்போஸ்தலன் ”பலவீனத்தோடு வந்தேன்''. பயிற்றுவிக்கப்பட்ட பண்டிதனைப் போன்று அல்ல. ஆனால், “பயம் என்ற பலவீனத்தோடு வந்தேன்” என்று அறிக்கையிடுகிறான். ஏனெனில் எங்கேயாவது வேறு பாதையில் கால்வைத்து விடுவானோ என்ற பயம். “மிகுந்த நடுக்கத்தோடு உங்களிடத்திலிருந்தேன்''. ஏனெனில் தன் சொந்த திறமையின் பேரில் நம்பிக்கை கொண்டுவிடுவானோ என்ற நடுக்கம். 39பயத்தோடும், என்று அவர் குறிப்பிடும் காரணம் ஏதோ ஒன்றிற்காக அவன் பயப்படுகிறான் என்றல்ல. மாறாக, தான் படித்த காரியங்களையும் தன் சொந்த திறமைகளையும் எங்கே கலந்து விடுவானோ என்றும் அதினிமித்தம் தேவனை பிரியப்படுத்தாமல் போய் விடுவானோ என்பதும் தான். “சிறந்த வசனிப்போடு நான் வராமல், (பயம் என்கிற வழியில் நான் வந்தேன்) இயேசு கிறிஸ்துவை சிலுவையில்அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்க நான் வந்தேன்”. “நான் பலவீனத்தோடும், பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், (வசீகரமானதாயிராமல் - என்று ஆங்கிலத்தில் உள்ளது - தமிழாக்கியோன்) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது”. ஓர் போர் வீரனாகிய இந்த மனிதன் தன்னை முற்றுமாக களைந்துவிட்டு பேசுவதை கவனியுங்கள். ஆமென்! நம்முடைய வேதாகம பள்ளிகளுக்கும், சபைகளுக்கும் தேவையானது தங்களை களைந்து விடுதலே. அதாவது தங்கள் சொந்த திறமைகளினின்றும் சொந்த எண்ணங்களினின்றும் களைந்துவிடுதலே. தேவனுக்கு முன்பாக உங்களை களைந்துவிடுங்கள். இல்லையென்றால் உங்களுக்குள்ளே காரியங்களை செய்ய முயற்சிப்பீர்கள். 40நீங்கள் ஒன்றுமில்லாத நிலைக்கு வர வேண்டும் என்பதை நீங்கள் உணரத் தக்கதாக இது உங்களுக்கும், இந்த ஒலிநாடாவை கேட்கப் போகும் உலகத்திலுள்ள மற்றவருக்கும் ஆழமாக செல்லட்டும். எல்லாம் தெரிந்தவர் என்றல்ல, மகத்தான யாரோ ஒருவரைப் போன்றல்ல. “மாறாக ஒன்றுமில்லாத புழுதி என்றவாறு வந்து, அதற்கு மேல் ஒரு போதும் உயர்த்தாமல் இருக்கும் நிலைக்கு வரவேண்டும். ஏனெனில் உங்களை உயர்த்துவீர்களென்றால் அது தேவனுக்கு மேலாக உயர்த்துவதாகும். தமஸ்குவுக்கு போகும் வழியில் உங்களை வைத்து புழுதிக்கு சமானமாக உங்களை கருத வேண்டும். உங்களுடைய உயரமான குதிரைகளினின்று கீழிறங்கி வர வேண்டும். இச்செய்தியானது எங்குமுள்ளவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும். ஒலிநாடா உலகத்திற்கும் உரியதாகும். 41“என் பேச்சு” என்று பவுல் கூறினான். “மனுஷஞானத்திற்குரிய கவர்ச்சியானதாயிராமல், ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது”. இப்பொழுது கவனியுங்கள்! “எதற்காக ஏன் இவ்வாறு செய்தீர்கள் பவுல் அவர்களே?” “தேவ பலத்தில்” உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, “தேவனுடைய பலத்தில் நிற்கும்படிக்கு” ஓ, என்னே விதமான பிரசங்கி இவர்! இத்தகைய மகத்தான மனிதன், தேவனை நாடி, “தேவனே, நான் பலவீனன், என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பலப்படுத்தி இந்த முள் என்னை விட்டு நீங்க செய்யும் அப்பொழுது நான் பலமுள்ளவனாயிருப்பேன்”, என்று ஜெபித்தார். தேவன் பவுலுக்கு மறுமொழியாக, “பவுலே என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்றார். அதன் பின்பு பவுல், “அந்தபடி நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவனாயிருக்கிறேன், ஆம்” என்றான். மேலும் பவுல், “எனக்கு வரும் பலவீனங்களிலும் நான் பிரியப்படுகிறேன்'' என்னிலுள்ள எல்லாம் என்னை விட்டு போனதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். என்னிலுள்ள எல்லாவற்றையும் நான் களையும் போது தான் தேவன் எனக்குள் வர இயலும். ஆனால் இன்னுமாக சில என்னுடையவைகளை நான் வைத்துக் கொண்டிருக்கும் வரை அவர் உள்ளே வர இயலாது, என்றான். அதுதான் காரியம். ஏழையிலிருந்து பணக்காரர் வரை, கீழானவரிலிருந்து மகத்தானவர் வரை, நம்முடைய “நாம்” என்ற காரணத்தினால் தேவனை நம்முடைய ஜீவயங்களிலிருந்து தள்ளிவிடுகிறோம். 42“எனக்குள்ள ஓர் மகத்தான எதிரி வில்லியம் பிரான்ஹாம் தான்” என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த நான் தான் தேவனுடைய வழிகளுக்கு குறுக்காக நிற்பது; அந்த நான் தான் சோம்பேறியாயிருப்பது. அந்த நான் தான் தான் ஏதாகிலும் செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்து அவ்விதம் செய்யும் போது தேவனை காட்சியிலிருந்து அகற்றிவிடுகிறதாயிருக்கிறது. ஆனால் அந்த மனிதனை நான் களைந்து விடக் கூடுமானால், அம் மனிதன் என்னை விட்டு கடந்துவிட்ட நிலைக்கு நான் வரக் கூடுமானால, அப்பொழுது தேவன் அங்கு வந்து வில்லியம் பிரான்ஹாமிற்கு தெரியாத காரியங்களைச் செய்ய கூடும். அப்பொழுது தான் தேவன் உங்களில் எவரையானாலும் உபயோகிக்க முடியும். வழியின் குறுக்கேயிருந்து நாம் விலகுவோமென்றால் அவரால் எந்த மனிதனையும் உபயோகிக்க முடியும். ஆனால், வழியில் நாம் காணப்படும் வரை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 43இப்பொழுது கவனியுங்கள், இந்த மகத்தான பவுல் பிரசங்கிகளில் அவன் ஓர் இராஜ புத்திரனாக இருந்தான். எல்லா, ஸ்தாபனங்களாலும் அவன் மதிக்கப் பெற்றான். எந்த பட்டிணத்திற்குள்ளும் அவன் சென்று எங்கு வேண்டுமானாலும் கூட்டங்களை நடத்தலாம். ஏன்? அவன் உறுதிபத்திரத்தை வைத்திருந்தான். (அதாவது மத சார்புள்ள அங்கீகாரம் பெற்றவன் - தமிழாக்கியோன்). அவன் மகத்தானவனாயிருந்தபடியால் அத்தகைய அங்கீகாரத்தை பிரதான ஆசாரியனிடமிருந்து பெற்று பலவீனராயிருந்த கிறிஸ்தவ ஜனங்கள் ஒவ்வொருவரையும் சின்னாபின்னமாக்க தீர்மானித்தான். சபையிலிருந்த அரசியல் வல்லமையை உபயோகித்து அவர்களை கட்ட தீர்மானித்தான்! ஓ, பரிசேய சதுசேய உபதேச முறைமைகளை ஒப்புக் கொள்ளாத கிறிஸ்தவர்களைக் கட்டி சிறைச் சாலையில் போட வல்லமை படைத்தவனாயிருந்தான். ஆனால், கவனியுங்கள், தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் இழக்கத் தக்கதாக அவனே கட்டுக்குள்ளாக வேண்டியதாயிற்று. தன்னை களைந்து எறிய தானே கட்டுக்குள்ளாக்கப்பட்டான். 44தேவன், ஆசாரியர்களையும், பிரபுக்களையும், முரட்டாட்டமுள்ளவர்களையும் கடந்து பவுல் என்னும் இந்த மகத்தான மனிதனை தெரிந்துக் கொண்டு அந்தக் கிறிஸ்தவர்கள் செய்து கொண்டிருந்த காரியத்தை இவனும் செய்யத் தக்கதாக பூமியின் புழுதியில் விழ வைத்தார். யாரை சிறைபிடிக்கச் சென்றானோ அவர்களைப் போல நடந்துக் கொள்வதற்காக பவுலை மாற்றினார். கிறிஸ்தவர்களை சிறைபிடிக்கத் தக்கதாக அதிகாரத்தினின்று பவுலை விடுவிக்க தேவன் தமது ஆவியினால் பவுலை சிறை பிடித்தார். தேவனுக்கு தான் என்ன செய்கிறார் என்பது தெரியாதா? என்று எனக்கு கூறுங்கள். பவுலுடைய திறமையினின்று அவனை விடுதலையாக்க தேவன் அவனுடைய பலத்தை அவனை விட்டு எடுக்க வேண்டியதாயிற்று. 45ஸ்தாபனங்களின் பலத்தினின்று விடுவிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தையினாலும், அவருடைய வல்லமையினாலும் கட்டப்பட தேவனை அனுமதிக்கும் எத்தனை ஊழியக்காரர்களாயிருந்தாலும் அவர்களை தேவன் இக்காலையில் உபயோகிக்க கூடும். இந்த மகத்தான ஸ்தாபன சபைகளுக்குப் போகும் எத்தனை உண்மையான ஜனங்கள் இக்காலை இந்த பட்டணத்தில் இருக்கிறார்கள்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டத் தக்கதாக எத்தனை பேர் இக்காலையில் இங்கிருக்கிறார்கள்? அவர்களெல்லாரும் பவுலைப் போன்று தேவனுக்கு அன்பின் அடிமையாயிருக்க அவருடைய ஆவியினால் கட்டப்பட்டு தங்களுடைய வல்லமையினின்று விடுபட முயற்சிப்பார்களென்றால் சுவிசேஷ வல்லமையினால் இந்த தேசத்தை கொளுத்தி விட தேவனால் கூடும். தேவன் பவுலை எடுத்து அடிமையாக்கி தமக்குள் சிறைப்படுத்தி அவன் வெறுத்த புறஜாதிகளிடமே அவனை அனுப்பினார். ஆனால் தேவனுடைய வல்லமையினால் பவுல் சிறை பிடிக்கப்பட அவனுடைய மத சம்பந்தமான வல்லமையினின்று அவிழ்க்கப்பட வேண்டியதாயிற்று. தேவனுடைய பலத்தைப் பெற்று, தான் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனிடம் கூறத் தக்கதாக பவுல் தன்னுடைய பலத்தைக் களைந்து பெலவீனமாகி ஒன்றுமில்லாதவன் ஆனான். அதைத்தான் இன்று நாம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். அதுதான் எனக்கு தேவையாயிருக்கிறது. தன்னையும் தன் திறமையையும் இழந்து பரிசுத்த ஆவியானவருக்கு முற்றுமாய் ஒப்புக் கொடுக்கும் காரியம். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையாயிருக்கிறது. வீட்டின் பெண்மணிக்கும், பள்ளிச் செல்லும் சிறுவர்களுக்கும், நம்முடைய சிறிய பிள்ளைகளுக்கும் அதுவே தேவையாயிருக்கின்றது. 46ஒரு சிறு பையனைக் குறித்து நேற்று அல்லது முன்தினம் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த பையன் தன் பள்ளிப் பாடங்களை தனது மூத்த சகோதரியிடம் கொடுத்து எழுதி முடித்துவிட்டு, வெளியே வந்து மற்ற சிறுவர்களை பார்த்து, “வியூ! அந்த கணக்குகள் எல்லாம் மிகவும் சுலபமானவைகள்” என்று கூறினானாம். ஏறத்தாழ ஏமாற்றுவதற்காகவே அப்பிள்ளைகள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாருங்கள். காரியம் வேறுவிதமாக இருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும். அந்த ஜனங்கள் ஒரு சபையின் தூண்கள் என்று மதிக்கப்படுபவர்கள். ஒரு தகப்பனார் காலை உணவின் போது, “யோவான், இன்று தன் பரீட்சையை எழுதப் போகிறான், ஓ, தேவனே, யோவானோடு இருந்து அவனுக்கு உதவி செய்யும்! ஏனெனில் இன்று காலை என் படுக்கையறைக்கு அவன் வந்து, ”தகப்பனே, என்னுடைய பரீட்சைக்காக ஜெபம் செய்யுங்கள் என்று கூறினான்'', என்று கூறி ஜெபம் செய்தால் காரியம் எவ்வளவு நலமாயிருக்கும். பாருங்கள். என்னுடைய பையன் ஏமாற்றி தன்னுடைய தேர்வின் மதிப்பெண் அட்டையில் நேரடியான முதல் தரம் எடுப்பதைக் காட்டிலும் அவன் ஏமாற்றாமல் இரண்டாம் தரத்தை எடுப்பதையே விரும்புகிறேன். ஆம் ஐயா! நம்முடைய தேவையெல்லாம் தேவனை சார்ந்து நம்மை முற்றிலுமாக இழப்பதே காரியமாகும். 47கட்டப்படுதல் பிரபுக்களையெல்லாம் தேவன் தள்ளிவிட்டு பலவீனமானவனை தெரிந்து கொண்டார். தங்களை ஒரு பொருட்டென்று நினைக்கின்றவர்களையெல்லாம் தேவன் கடந்து தம்முடைய நோக்கத்தை மனுஷரின் ஜீவியத்தில் நிறைவேற்ற ஒன்றும் அறியாதவர்களை தேவன் தெரிந்து கொண்டார். அதைத்தான் நாம் பெற்றுக் கொள்கிறோம். தேவன் பவுலிடம், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும், நீ அதிகமாக பலவீனப்படும் போது என்னுடைய பலம் அதிகமாக பூரணப்படும். நீ அதிகமாக என்னை சார்ந்துக் கொள்ளும்போது நான் உன்னை நலமாக உபயோகிக்க கூடும். உன்னுடைய கல்வியையும், ஸ்தாபனத்தையும், உன்னுடைய காரியங்களையும் மறந்து என்னிடம் முற்றும் சார்ந்திருப்பாயென்றால் நான் உன்னை அதிகமாக உபயோகிக்க முடியும். நீ பலவீனமாயிருக்கின்ற காரணத்தினால் என்னுடைய சொந்த நோக்கத்தை உன்னில் பலமாக நிறைவேற்ற முடியும்”, என்றார். பலவீனத்தினின்று பலத்தை விளங்க செய்ய தேவனால் கூடும்! அதன் காரணமாகத் தான் அவர் அவ்விதம் செய்கிறார். தாங்கள் ஒன்றுமில்லை என்று எண்ணுகின்ற சீஷர்களை தேவன் தெரிந்துக் கொண்டார். 48தம்முடைய சொந்த குமாரனின் தாழ்மை. அவர் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார். அது மாட்டின் கழிவுகளைச் சேர்த்து வைக்கும் களஞ்சியமாயிருந்தது. அவர் ஒரு எளிமையான துணிகளில் சுற்றப்பட்டிருந்தார். பாருங்கள். அவர் ஓர் அரண்மனையின் மூலமாக வந்திருக்கலாம். அல்லது தேவ தூதர்களின் வணக்கத்தை பெற்றவாறே வானத்திலிருந்து இறங்கி வந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை நமக்கு உதாரணமாகக் கருதி அவரை தாழ்மையின் சாயலாக கொண்டு வந்தார். இந்த உலகத்தின் பள்ளிகளில் அவரை ஒரு போதும் அவர் பயிற்றுவிக்கவில்லை. மனித எண்ணங்கள் பேரிலோ, அல்லது உலகத்தின் பலத்திலோ சார்ந்திராமல் தேவனுடைய வல்லமையில் முழுமையாக சார்ந்திருக்கத் தக்கதாக தமது சொந்த வல்லமையிலே அவரை பயிற்றுவித்தார். 49நாம் இன்று மகத்தான ஸ்தாபனங்களின் ஆளுகைக்கு நம்மை ஒப்புக் கொடுத்து விடுகிறோம். அதுதான் நம்முடைய காரியமாயிருக்கிறது. ஸ்தாபனம் என்ன கூறுகிறதென அதற்கு நாம் செவிக் கொடுக்கிறோம். ஆனால் அது தேவனுடைய சித்தத்திற்கு முரண்பாடானதாகும். தேவனுடைய ஆவிக்கு நம்மை ஒப்புக் கொடுத்து ஆவியானவர் எங்கு போக சொல்கிறாரோ அங்கு போக வேண்டும். அது தான் சரியான காரியம். தேவனுடைய போர் வீரர்கள் நாம் அதை எபிரேயர்: 11:34-ம் வசனத்தில் சற்று முன்பு தான் வாசித்தோம். பலவீனத்தில் பலன் கொண்டார்கள். அவர்கள் பலமடையு முன்பு பலவீனமாக வேண்டியதாயிருந்தது. அவர்களுடைய பலவீனத்தில் அவர்கள் பலன் கொண்டார்கள். வசனத்தைக் குறித்துக் கொள்கிறவர்கள் எபிரேயர்: 11:34-ஐ குறித்துக் கொள்ளுங்கள். 50நம்மை ஆறுதல்படுத்த, ஊக்குவிக்க இங்கு ஒரு காரியம் பாருங்கள். தம்முடைய ராஜ்ஜியத்தைக் கட்ட தேவன் பலவீனத்தினின்றும் தாழ்மையினின்றும் ஜனங்களை தெரிந்துக் கொண்டார். நாம் எப்பொழுதாவது அவருடைய சபையோடு பரலோகம் சென்று அவருடைய பிரசன்னத்தில் நிற்போமென்றால் அங்கு, உலகத்தால் புறம்பே தள்ளப்பட்ட ஒன்றுமில்லாத பலவீனமான ஒரு கூட்ட ஜனங்களோடு தான் நாம் நிற்போம். தேவன் நம்மை செம்மறியாடுகளுக்கு ஒப்புவமையாக்குவது ஓர் வினோதமானது அல்லவா? ஒரு செம்மறியாடு தன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாத ஒன்றாகும். ஒரு முயலால் ஓடிவிட முடியும். ஒரு அணிலானது ஒரு மரத்தின் மேலேறிவிடும்; ஒரு நாயால் கடிக்க முடியும், ஒரு சிங்கத்தால் கிழிக்க முடியும், ஒரு குதிரையினால் உதைக்க முடியும்; ஒரு பறவையினால் பறந்துச் செல்ல இயலும். ஆனால் ஒரு செம்மறி ஆடோ உதவியற்ற விதமாக நிற்கும். அந்த விதமாகத்தான் தேவன் நம்மை விரும்புகிறார். நாம் முற்றுமாக போதுமானவர்களல்ல என்பதை உணரும்போது தேவன் அத்தகைய நபரை எடுத்து அவனுக்குள் தம்மை உருவாக்குவார்; அந்த நபருடைய கைகளை தம்முடைய கைகள் எதை செய்யுமோ அதை செய்ய உருவாக்குவார். அவருடைய உதடுகளை தேவ உதடுகள் எதை பேசுமோ அதை பேச உருவாக்குவார்; ஏனெனில் அவைகள் அந்நபருடையதல்ல மாறாக அவைகள் தேவனுடையதாயிருக்கின்றது. அவர் அவனுடைய பலவீனத்தை எடுத்து தன்னை அதில் விளங்கச் செய்து தம்முடைய குணாதிசயத்தை அவனுக்குள் கட்ட ஆரம்பிக்கிறார். 51அவர்தாம் நம்மை இவ்வுலகத்தில் கொண்டு வந்தார். ஆனால் நாமோ, கல்வி பயின்று சாதுரியர்களானோம். வம்சங்களை நீங்கள் கவனித்ததுண்டா? உதாரணமாக ஆபேலை எடுத்துக் கொள்வோம். ஆபேலுக்கு பின்பு சேத் வந்தான்; சேத்தின் வம்சத்திலிருந்து நோவாவின் வம்சம் வரை, எல்லா சமயங்களிலும் அவர்கள் தாழ்மையுள்ள விவசாயிகளாயிருந்தார்கள். ஆனால் காயீனின் பிள்ளைகள் சாதுரியவான்களாகவும், தந்திரமுள்ளவர்களாகவும், கல்விமான்களாகவும், மகத்தானவர்களாகவும், கட்டிடம் கட்டுபவர்களாகவும், கைத் தேர்ந்தவர்களுமானார்கள். ஆனால் தேவனுடைய பக்கத்தின் மனிதர்கள் பலவீனரும், தாழ்மையுள்ளவர்களுமாயிருந்தார்கள். அதினால் தான் தேவன் அவர்களை உபயோகித்தார். நாம் பலவீனமாயிருக்கும் போது தான் தேவன் நம்மிடம் வருவதற்குகந்த வழியாகும். அப்பொழுது நாம் ஏதாகிலும் ஒன்றை பெற்றுக் கொள்கிறோம். இத்தகையக் காரியம் நம்மை உற்சாகப்படுத்துகிறதாயிருக்கிறது. ஏனெனில் தேவனுடைய முழு இராஜ்ஜியமும் இத்தகைய ஜனங்களால் தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, அத்தகைய வழியில் நீங்கள் வரும்போது அவருடைய இராஜ்ஜியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது திண்ணம். இங்கு காரியம் என்னவென்றால், நாம் அதிக பலவீனம் அடையாமல் பலமுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் அதிகமாக தலைகனம் பிடித்தவர்களாயிருக்கிறோம். அது சரி நம்முடைய தலையில் நாம் அதிக பலமுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் அதிகம் அறிந்திருந்து அவருக்கு நம்மை ஒப்புக் கொடுக்காமல் நமக்கே நம்மை ஒப்புக் கொடுக்கிறவர்களாயிருக்கிறோம். “நல்லது, நான் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு படைத்தவன்” என்று எண்ணுகிறோம். 52சில இரவுகளுக்கு முன்பு எனது தாயார் வியாதியுற்று மருத்துவமனையில் இருந்தபோது, அங்கே நடந்த ஓர் சம்பவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் தாயாரின் அறைக்கு பக்கத்து அறையில் ஒரு பெண்மணி இருந்தார்கள். அந்த பெண்மணி இங்கிருக்கிறார்களா? சகோதரியே உங்களைக் குறிப்பிட்டு பேசுவதற்காக மன்னிக்கவும். அந்த பெண்மணி கென்டக்கியைச் சேர்ந்தவள். அவளுடைய மாமியாருக்காக அங்கு வந்திருந்தார்கள். நானும் என் மனைவியும் சுமார் காலை ஒரு மணியளவில் அப்பெண்மணியோடு பேசிக் கொண்டிருந்தோம். அப்பெண்மணியின் கணவர், மருத்துவமனையின் தாதியும் (Nurse) மற்றொருவரும் உள்ளே நுழையா வண்ணம் அவ்வறையின் தரையில் கதவிற்கு முன்பாக குறுக்காக படுத்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். ஆகவே, அப்பெண்மணி தன் கணவனை நோக்கி, “இங்கிருந்து வெளியே போய்விடும். நீர் எந்த விதத்திலும் உம்முடைய தாயாருக்கு பிரயோஜனமானவரில்லை” என்று கூப்பாடு போட்டு தன் கணவனை அறையை விட்டு வெளியே விரட்டிவிட்டாள். 53அப்பெண்மணியோடு நான் ஆண்டவரைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்பெண்மணி என்னிடம், “நல்லது, எனக்கு தெரிந்ததெல்லாம், அதிகாலையில் எழுந்து வாத்தின் கழுத்தைப் போன்ற அறிவாளினால் புகையிலைப் பாத்தியிலிருக்கும் களைகளை வெட்டி எடுத்து, புகையிலையை வாயில் சப்பிக் கொண்டிருப்பது தான், என் தகப்பனார் எங்கள் ஒவ்வொருவரையும் பள்ளிக்கு அனுப்பினார். ஆனாலும் இன்னும் எங்களுக்கு போதிய புத்தி வரவில்லை”, என்றார். “சரி, அதுதான் காரணமாயிருக்கும்” என்று நான் நினைத்தேன். உலகத்தின் காரியங்களை உங்களை விட்டு அகற்ற வேண்டும். பாருங்கள். அறியாமையை நான் ஆதரிக்கிறேன் என்று அல்ல. ஆனால் யாராகிலும் ஒருவர் அறிந்ததைக் காட்டிலும் தனக்கு நன்றாகவே அதைக் குறித்து தெரியும் என்று எண்ணுகின்ற இடத்தை நீங்கள் அடையும்போது தான் காரியம் தவறாயிருக்கின்றது என்று நான் எண்ண முயற்சிக்கிறேன். உங்களுடைய அறிவு தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு முரணாகாமலிருக்கும் வரை அது நல்லதுதான். 54நாம் 5 உணர்வுகளால் ஆளுகை செய்யப்படுகிறோம். ஆனால் அவைகள் (பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல்) விசுவாசம் என்னும் உணர்வுக்கு இடையூறாக இல்லாத வரைக்கும் அவைகள் நன்மையானது தான் அவைகள் விசுவாசத்திற்கு விரோதமாக வரும்போது... எது சரியானது என்று உங்களால் எவ்விதம் கண்டுக் கொள்ள முடியும்? விசுவாசமானது தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுமாதலால் உங்களுடைய விசுவாசமானது வார்த்தைக்கு முரணாயிருந்து அல்லது அவ்விதமாக எண்ணுமானால் உங்களிடம் விசுவாசம் இல்லையென்று பொருளாகிறது. மேலும் நீங்கள் படித்த படிப்பைக் குறித்து பெருமை அந்த உணர்வுகளில் இருக்கிறது என்றும் பொருளாகிறது. அப்படியானால் நீங்கள் பெற்றிருப்பது ஓர் பாவனை விசுவாசமே. ஆனால் நீங்கள் அதை விட்டு விட்டு முற்றுமாக விசுவாசத்தில் சார்ந்திருப்பீர்களென்றால் அதுதான் சரியான விசுவாசம். ஏனெனில் விசுவாசமானது தேவனுடைய வார்த்தையின் மேல் மட்டும்தான் கட்டப்படுகிறதாயிருக்கிறது. 55ஒரு சமயம் ஒரு மருத்துவர் என்னிடம் “பில்லி அவர்களே, நீங்கள் ஜனங்களைப் பார்த்து, ”நீங்கள் சென்று அந்த மரத்தையோ அல்லது ஒரு கம்பத்தையோ தொட்டால் சுகமாவீர்கள் என்று விசுவாசித்தால் அவ்விதமே சுகமாவீர்கள்'', என்பது தான் உங்கள் கருத்து என்று நான் நம்புகிறேன், என்றார். அதற்கு நான் இல்லை ஐயா, “இக்காரியத்தில் அப்படியில்லை மருத்துவரே, ஏனெனில் ஜனங்கள் அந்த கம்பமானது சாதாரண ஓர் கம்பம் மட்டுமே என்றும் அதில் வல்லமையோ பலனோ இல்லையென்று அறிந்திருக்கிறார்கள்” என்றேன். ஆனால் சமநிலை மனோபக்குவமுள்ள எந்த மனிதனும் அது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைதான் என்றும், “அது கர்த்தர் சொல்லுகிறதாவது!” என்றிருக்கிறபடியால் அதன் மேல் தனது விசுவாசத்தை வைத்து அதற்கு முரணான காரியம் வருமானால் தனது உணர்வுகளை விசுவாசிக்க மாட்டான். இல்லை ஐயா, அதை அவ்விதம் விட்டுவிட்டு உங்களுடைய மற்றொரு உணர்வான விசுவாசத்தினால் அதை அணுகுங்கள். 56சரி... தாங்கள் ஒன்றுமில்லையென்று ஒப்புக் கொடுக்கின்ற ஜனங்களை தேவன் உபயோகிக்கின்றார். சிக்காகோவிலுள்ள பாஸ்டனை சேர்ந்த டி.எல்.மூடி செருப்புகளைத் தைக்கிற, சாதுரியமில்லாத தன் சுயத்தின் மேல் சாராத ஓர் சிறிய மனிதனாயிருந்தான். இன்று மூடியின் பேரில் இவர்கள் அமைத்திருக்கிற இந்த பள்ளிக் கூடங்களைப் பாருங்கள், டுவைட் மூடி இன்று உயிர்த்தெழுந்து வந்து இந்த பள்ளிகளைப் பார்ப்பாரென்றால், அவன் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா, அவைகளை ஒழித்துவிடுவான். மார்டின் லூத்தர் உயிர்த்தெழுந்து வந்தால் அவன் செய்யும் முதல் காரியம், லூத்தரன் ஸ்தாபனத்தை ஒழிப்பதுதான். ஜான் வெஸ்லியும் அவ்விதமே செய்வான். அம் மனிதர்கள் ஒருபோதும் அந்த ஸ்தாபனங்களை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அவர்களை பின் சென்ற மனிதர்கள் தாம் அவ்விதம் செய்துவிட்டார்கள். 57பவுல் ஒரு போதும் சபையை ஸ்தாபிக்கவில்லை. ஏனெனில் அவனே அதைக் குறித்து, “நான் போன பின்பு... உங்களிலும் சிலர் எழும்பி சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்” என்றான். (அப்: 20:29,30) பவுல் மரணம் அடைந்து 100 வருடங்கள் கழித்து அவர்கள் முதலாவது ஸ்தாபனமாகிய கத்தோலிக்க சபையை உருவாக்கிவிட்டார்கள். மனுஷன் எழும்பினான்! மூடியின் மரணத்திற்குப் பின்பு மூடியின் பேரில் பள்ளியை உருவாக்கினார்கள்; வெஸ்லியின் மரணத்திற்கு பின்பு வெஸ்லி சபையை உருவாக்கினார்கள்; லூத்தரின் மரணத்திற்கு பின்பு லூத்தரன் சபையை உருவாக்கினார்கள். தேவன் தமது வீரர்களை அனுப்பினார் அவர்கள் ஒன்றைக் கட்டினார்கள்... ஆகவே தான் இயேசு, “மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்... தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை சிங்காரிக்கிறீர்கள். தீர்க்கதரிசிகளை கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களை குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்'' என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. இந்த மகத்தான மனிதர்கள் எழுந்து ஞாபக சின்னத்தை அவர்களுக்கு கட்டினார்கள். “தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு... என்று தாவீதைக் குறித்து வேதம் குறிப்பிடுகின்றது. அந்த வழியாகத்தான் காரியத்தை நிறைவேற்றி இந்த ஸ்தாபனங்களை உங்களை விட்டு அகற்றி விட வேண்டும். 58மூடி செருப்பு தைக்கும் ஓர் சிறிய மனிதன். அவன் பலவீனமானவனாயிருந்து பலவீனத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தான். மூடி படிப்பறிவில்லாதவனாயிருந்து அவனுடைய இலக்கணம் மிகவும் பயங்கரமாயிருந்ததாம். ஒரு சமயம் ஒரு மனிதன் மூடியிடம் வந்து, “ஐயா, மூடி அவர்களே, உங்களுடைய இலக்கணத்தைப் போன்ற ஓர் மட்டமானதை என் வாழ்நாளில் கேட்டதேயில்லை” என்றானாம். அதற்கு மூடி, “என்னுடைய படிப்பறிவின்மையைக் கொண்டு ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறேன், நீர் உம்முடைய படிப்பைக் கொண்டு என்ன செய்கிறீர்” என்று கேட்டாராம். அது ஒரு சரியான பதில் என்று நான் எண்ணுகிறேன். நிச்சயமாக! ஆனால் இப்பொழுதோ, நீங்கள் மூடியின் பேரால் அமைத்திருக்கிற பள்ளியில் ஓர் அங்கத்தினனாக இருந்து நிச்சயமாக ஒரு மினுமினுப்பான பண்டிதராக வேண்டுமென்கிறீர்கள். அது சரி. (அப்படியே தலைகீழாகிவிட்டது என்று ஒரு சகோதரன் கூறுகிறார்). ஆம். அவர்கள் அப்படியே வேறு வழியில் சென்று காரியத்தை தலைகீழாக ஆக்கிவிட்டார்கள். 59அதைத்தான் ஜனங்கள் செய்கிறார்கள். இச்செய்தியின் ஆரம்பத்தில் இதைத்தான் நான் குறிப்பிட்டேன்... கிறிஸ்தவர்களாகிய ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்கு அதிக இடம் உண்டாயிருக்கத் தக்கதாக தங்களை தாழ்த்தி ஒன்றுமில்லாதவர்களாக்குவதற்கு பதிலாக, தங்கள் சொந்த புத்தியின் மேல் அல்லது பள்ளிக்கூட அறிவின் மேல் கட்ட முயற்சிக்கும்போது அக்காரியமானது அவர்களை அவர்கள் ஆரம்பத்திலிருந்தது போன்று இல்லாமல் தேவனை விட்டு அதிகமாக வழிவிலக செய்து விடுகின்றது. இந்த செயற்கை முறையான பீட அழைப்பையும் அவ்வாறே நான் கருதுகிறேன். நீங்கள் ஒரு நபரை உள்ளே கொண்டு வருகிறீர்கள். ஆனால் அடுத்த விசை அவரை உள்ளே திரும்பக் கொண்டு வருவதென்பது பத்துமடங்கு கடினமாகிவிடுகின்றது. தேவன் அந்த நபருக்காக காரியத்தை செய்ய அவனை அமர்ந்திருந்து கேட்க விட்டுவிடுங்கள்! பின்பு அந்த நபர் அறிக்கை செய்து பின் கர்த்தருடைய நாமத்தை கூப்பிடட்டும். அது தான் சரியான காரியம். 60படிப்பில்லாதவனாக, பலவீனனாக, சிணுங்கும் தன்மையுள்ள பேச்சாளனாக இருந்த இந்த மூடியை கவனியுங்கள். அவனுடைய சரித்திரத்தை அன்று ஒரு நாள் நான் படித்தேன். அதில், “மூக்கினால் சிணுங்கும் நிலைமையும், சரீரப் பிரகாரமாக சிறிய தோற்றம், வழுக்கை தலை ஆக மொத்தம் அவன் சரீரப் பிரகாரமாக சீர்குலைந்த ஓர் நபராயிருந்தான்” என்று எழுதியிருந்தது. தொடர்ந்து பலவீனத்தைத் தவிர வேறொன்றும் இருந்ததில்லை. ஆகவே அவனுடைய நாளில் தேவன் அவனை உபயோகித்து அன்றிருந்த உலகத்தை குலுக்கிவிட்டார். ஒரு சமயம் ஒரு பத்திரிக்கையாளர் மூடி பிரசங்கியாரின் கூட்டத்திற்கு சென்றார். (நான் அதை குறித்து படித்துக் கொண்டிருந்தேன்). பத்திரிக்கையாளர்கள் அவ்விதம் சென்று, இந்த மனிதன் எப்படிப்பட்டவன் என்றெல்லாம் அறிந்து அறிவிப்பார்கள். (ஒலி நாடாக்களின் இயக்கத்தை நிறத்தும் சிறிய பொத்தான் எங்கே இருக்கிறது? இதுதானா? அதை சற்று நான் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்). 61பிரசங்கியார் ஓர் மகத்தானவர். ஓர் நல்ல மனிதன் ஆகவே அவர் ஜனங்களுடைய கவனத்தை கவர்ந்து வசீகரப்படுத்தக் கூடியவர் என்று கேள்விப்பட்டு அந்த அறிக்கை செய்பவன் (Reporter - பத்திரிக்கையாளர் - தமிழாக்கியோன்). இந்த மூடி எப்படி மகத்தானவர் என்பதை அறியும்படிக்கு அவருடைய கூட்டத்திற்கு சென்றார். இதே பத்திரிகையாளர் மற்றொரு சுவிசேஷகரின் கூட்டத்திற்குச் சென்று, கவனித்துவிட்டு, “அந்த பிரசங்கி ஓர் வேத தத்துவ பண்டிதர், மிகவும் சரளமாக பேசுகிறவர். அவர் உபயோகிக்கும் இலக்கணத்தை போன்று நான் எங்கும் கேட்டதில்லை. அவன் ஜனங்கள் வசியப்படத் தக்கதாக தன்னுடைய மனோதத்துவத்தினால் கட்டிவிடுகிறார்” என்று தன் அறிக்கையை வெளியிட்டிருந்தான். 62இந்த பத்திரிகையாளர், “டுவைட் மூடிப்” பிரசங்கியாரின் கூட்டத்திற்கும் சென்று பார்த்துவிட்டு, “இந்த டுவைட் மூடியிடம் ஜனங்களை கவரத் தக்கதான காரியம் என்ன இருக்கிறது என்பதை என்னால் காண முடியவில்லை. முதல் காரியம் என்னவென்றால் டுவைட் மூடி பிரசங்கியார் எவ்வளவு அவலட்சணமாயிருக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கின்றார். அடுத்தபடியாக சரீரப் பிரகாரமாக அவர் ஒரு சீர்குலைந்த நபர். அடுத்தபடியாக அவருக்கு படிப்பறிவில்லை. அவர் பேசிய இலக்கணத்தைப் போன்று ஒரு மோசமான இலக்கணத்தை இதுவரை நான் கேட்டதேயில்லை. மேலும் அவர் பிரசங்கிக்கும் போது சிணுங்கிக் கொண்டு இழுக்கும் சப்தத்தோடு பிரசங்கிக்கிறார். ஆகவே ஜனங்களின் கவனத்தை கவரத் தக்க ஏதொன்றும் டுவைட் மூடி பிரசங்கியாரிடம் இருப்பதாக நான் காணவில்லை என்றானாம். மூடி பிரசங்கியாரிடம் அந்த பத்திரிகையை கொண்டு வந்தார்கள். அவர் அதை படித்துவிட்டு தனக்குள்ளாக நகைத்துவிட்டு, ''நிச்சயமாக இல்லை ஐயா, அது தேவன் என்றாராம்!'' ஜனங்கள் டுவைட் மூடி பிரசங்கியாரை அல்ல தேவனைதான் பார்க்க வந்தார்கள். நீ எவ்வளவு சாட்சி பகருகின்றாய் என்பதை கவனிக்க ஜனங்கள் வருவதில்லை. மாறாக தேவன் உன் வாழ்க்கையில் இருக்கிறாரா என்ற உண்மைத்துவ நிரூபணத்தைக் காணவே விரும்புகிறார்கள். நீ ஒரு மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, அல்லது பெந்தெகொஸ்தேயினனாகவோ, அல்லது நீ யாராயிருந்தாலும் சரி, ஜனங்கள் உன்னில் தேவனைக் காண விரும்புகிறார்கள். அதுதான் உண்மை. தாங்கள் பலவீனர் என்று உணரும் மக்கள் மகத்தானவர்கள் 63மோசேயை கவனியுங்கள், விவேகமுள்ள ஒரு வாலிபன். ஓ, அவன் ஒரு பண்டிதன். எபிரேயர்களுக்கும், எகிப்தியர்களுக்கும், மற்றவர்களுக்கும் போதிக்கும் அளவிற்கு எகிப்தியரின் எல்லா ஞானத்ததையும் பயின்றவனாயிருந்தான். இவன் ஒரு மகத்தான, சாதுரியமான, வல்லமையை படைத்த மனிதனாயிருந்தான். செசில்-டி-டிமில்லின், 'பத்து கட்டளைகள்' என்னும் திரைப்படத்தில்... (மோசேயின் பாகத்தை ஏற்று நடித்த நடிகனின் பெயரை நான் மறந்துவிட்டேன், சரி ஏதோ ஒரு நடிகன்) இந்த மோசேயை நீண்ட கைகளும் பலமுள்ள மிகப் பெரிய மகத்துவமுள்ள மனிதனாக உருவகப்படுத்தியிருந்தார். ஒருவேளை மோசே அத்தகைய நபராகத் தான் இருந்திருக்க வேண்டும். 64மோசே நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு வல்லமையுள்ளவனாயிருந்தான் என்பதை நாம் அறிவோம். ஆகவே அவன் அந்த நாளின் தேவையை அறிந்து அதை தானே செய்ய முடியும் என்று எடுத்துக் கொண்டான். (ஓ, இது உங்கள் ஆத்துமாவில் தேவன் பதிய செய்வாராக!) மோசே தன்னுடைய நாளின் தேவையை அறிந்தவனாக தன்னுடைய புத்தி சாதுரியத்தாலும், வல்லமையாலும், தன் திறமையினாலும் அதை செய்யலாம் என்று... அவன் ஒரு புத்திசாலியான தந்திரமுள்ள பார்வோனாயிருந்தான். அவனுக்கு மனோ தத்துவம் மாமிச பலம் எல்லாம் இருந்தபடியால், “நான் நன்றாக நிறையப் படித்திருக்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும். யாராகிலும் ஓர் மனிதன் இக்காரியத்தைச் செய்யக் கூடுமானால் அது நான் தான். இந்த மணி நேரத்திற்குரிய மனிதன் நான் தான். ஆகவே நான் காரியத்தில் இறங்குவேன்'' என்று கூறினான். தேவனுடைய சித்தத்தில் இருந்த சரியான வேலையை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய சொந்த இயற்கையான திறமைகளை மோசே வழங்கினான். ஆனால் தேவன் அதை புறக்கணித்துவிட்டார்! மோசேகொண்டிருந்த யாதொரு காரியத்தையும் தேவனால் உபயோகிக்க முடியவில்லை. அன்று அவ்வாறு தேவனால் அதை உபயோகிக்க முடியவில்லையென்றால் இன்றும் காரியம் அவ்விதமாகத்தான் உள்ளது. தேவன் நமது இயற்கையான திறமைகளை உபயோகிக்க முடியாது. நம்முடைய திறமைகள், நம்முடைய 'நாம்' என்ற காரியங்களை வழியினின்று விலக்கி தேவனுடைய வல்லமைக்கும் சித்தத்திற்கும் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். 65“நல்லது சகோதரனே, என்னால் பிரசங்கிக்கக் கூடும்” என்று நீங்கள் கூறலாம். “நீங்கள் பிரசங்கிக்க முடியும் என்று எண்ணும் வரை உங்களை தேவனால் உபயோகிக்க முடியாது” அது பரவாயில்லை, “என்னால் இதைச் செய்ய முடியும், அதைச் செய்ய முடியும்” என்றால், உங்களால் ஒன்றையுமே செய்ய முடியாது. அத்தகைய காரியத்தை தேவனால் உபயோகிக்க முடியாது. ஆனால் உங்களை ஒப்புக் கொடுப்பீர்களென்றால் பின்பு தேவன் கிரியை செய்ய விட்டுவிடுங்கள். “நல்லது சகோ. பிரான்ஹாமே, நான் ஒரு ”போதகன்“ என்று எனக்கு தெரியும்” என்று நீங்கள் கூறலாம். நல்லது, நீங்கள் போதகர் என்று உங்களை நினைத்துக் கொண்டிருக்கும் வரை அதை செய்ய முடியாது ஏன்? நீங்கள் அக்காரியத்தில் அதிக தூரம் செல்ல முடியாது. ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தாம் நமது போதகராக இருக்கிறார். அதுதான் உண்மை! சபைக்கு போதிக்கத் தக்கதாக தேவன் பரிசுத்த ஆவியானவரை அனுப்பியிருக்கிறார். சில மனிதர்கள் பள்ளிச் சென்று பல வருடங்களாக படிக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்கின்றார்கள்? தேசிய ஞாயிறு பள்ளியின், “மேலறை”யைப் பற்றிய கட்டுரையைப் படிக்கின்றார்கள். (ஓ, அது நல்லது தான்) அதற்கு விரோதமாக நான் இல்லை. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருக்கின்றது. ஆனால் அதனோடு மூளை அறிவு சேர்க்கப்பட்டிருக்கின்றதே உங்கள் இயற்கையான திறமைகளின் பேரில் சாரக் கூடாது. மாறாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையில் அது வர வேண்டியதாயிருக்கிறது. 66ஆகவே, இந்த வாலிபமான, ராட்சதன் போன்ற மூளையறிவின் மோசே நல்லக் காரியத்தைச் செய்ய புறப்பட்டான்; ஆனால் தேவனோ, சர்வ சாதாரணமாக, முற்றுமாக அதை உபயோகிக்க மறுத்துவிட்டார். மோசேயுடைய இயற்கை திறமைகளை தேவன் உபயோகிக்கவில்லை. அது போன்று தான் இன்றும் நம்மால்... தேவன் நம்முடைய இயற்கையான திறமைகளை உபயோகிக்க முடியாது. ஆனால் மோசே பெற்றிருந்த ஒரு காரியத்தைக் குறித்து நான் மிகவும் மெச்சுகிறேன். அதாவது தான் தோல்வியுற்றான் என்று அறிந்துக் கொள்ளும் உணர்வு அவனுக்குள் இருந்தது. நாம் அவ்விதம் இல்லை. அதுதான் காரியம். “ஒரு புதிய ஸ்தாபனத்தை உருவாக்குவோம். சுகமாக்கும் வரத்தையுடைய பெந்தெகொஸ்தேயினர் யாரையாகிலும் அழைப்போம்” என்கிறோம். பாருங்கள்? நாம் தவறிவிட்டோம் என்பதை உணராத அளவிற்கு நாம் அறியாதவர்களாயிருக்கிறோம். பெந்தெகொஸ்தே சபை, கூட்டு தேவ சபை, மற்றவர்களும் தாங்கள் தோல்வியுற்றிருக்கிறார்கள் என்பதை உணரும் திறமையை அறியாதவர்களாயிருக்கிறார்கள். அல்லேலூயா! ஓ! இதை ஆழமாக பதிய செய்ய விரும்புகிறேன். அவர்கள் தோல்வியுற்றார்கள். சபை ஸ்தாபனம் தோல்வியுற்றிருக்கிறது. அது போல இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளும், உங்கள் தலைக்கு மேல் குண்டுகள் தொங்கிக் கொண்டிருக்க நடுக்கமும், பயமும், அதைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய வாழ்க்கை நரகத்திற்கென்று நாள் குறிக்கப்பட்டதை அறிந்திருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஆவிகள் சென்றுவிட்டன. அவர்கள் தோல்வியுற்றிருக்கின்றார்கள்; ராணுவத்திற்கென்று ஆட்களை அலசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு என்ன நேர்ந்ததென்பதை பார்த்தறிந்திருக்கிறார்கள். நாமும், சபையும் தோல்வியுற்றவர்களாயிருக்கிறோம். 67மோசே அதை உணர்ந்தான். மனித பலவீனம் என்ன வென்பதை அறிந்துக் கொள்வதற்காக தேவன் அவனை வனாந்திரத்தின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றார். இவைகளெல்லாம் என்னவென்பதை மோசே பார்த்துக் கொள்வதற்காக அவனை அங்கு அழைத்துச் சென்றார். மிக நன்றாகவே மோசே கற்றுக் கொண்டான். ஓ, அவன் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டானா? வனாந்திரத்தில் மோசேயுடன் தேவனுக்கு ஓர் நல்ல தருணம் உண்டாயிருந்திருக்கும்! மோசே முன் கோபக்காரன் என்று உங்களுக்குத் தெரியுமா? சிப்போராள் என்ற பெண்ணை தேவன் மோசேக்கு மனைவியாகக் கொடுத்தார். அவளும் கூட முன்கோபக்காரி. ஆகவே, அந்த வனாந்திரத்தின் பின் பாகத்தில் அடக்க முடியாத அளவிற்கு இருவருடைய கோபமும் இருந்து எல்லாம் நல்ல விதமாக அமைந்திருக்க முடியாது என்று நான் யூகிக்கின்றேன். ஒரு மனிதனை எப்படி அடக்குவது என்ற மோசேயின் மூளையறிவின் மனோதத்துவம் அவனுக்கு அதிகமாக கைக் கொடுக்கவில்லையென்று நான் நினைக்கிறேன். ஏனெனில் மோசே எகிப்திற்கு போகும் வழியில் அவனுடைய மனைவி சிப்போராளுக்கு இன்னுமாக அந்த முன்கோபம் இருந்ததை என்னால் காண முடிகின்றது. தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து அதை மோசேயின் கால்களுக்கு முன்பாக எறிந்து, “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றாள்.(யாத்: 4:25) தேவன் மோசேயின் மேல் மிகவும் கோபம் கொண்டு சுற்றிலும் அவனை தேடினார். தேவன் மோசேயைக் கண்டுபிடித்திருப்பாரென்றால் அவனைக் கொன்றிருக்கக் கூடும். மோசே மனிதன் தான் என்பதையும் சிறு சிறு காரியங்களையும் அங்கு வனாந்திரத்தில் அவனுக்கு தேவன் கற்றுக் கொடுக்க வேண்டியதாயிருந்தது - எகிப்தில் அவன் பெற்ற புத்தியின் வல்லமை, ஞானம் இவைகளில் ஒன்றையாகிலும் தேவன் உபயோகிக்கவில்லை. 68“ஆண்டவரே, நான் 40 வருடமாக பள்ளிக்கூட அனுபவம் பெற்றிருக்கிறேன். நான் ஒரு புத்தி கூர்மையுள்ள மாணாக்கன். என்னுடைய கண்கள் மூடியிருக்க வேதத்திலுள்ள வசனங்களை மனப்பாடமாக சொல்லமுடியும்” என்று நீங்கள் கூறலாம். அதில் ஒரு சிறு காரியத்தையும் தேவன் உபயோகிக்க மாட்டார். பாருங்கள். இல்லை ஐயா. “ஓ, இந்த தேசத்திலேயே மிகப் பெரிய சபையை சேர்ந்தவன், நான் பெரியவன், ஓ, நான் ஒரு பெந்தெகொஸ்தேயினன். கர்த்தருக்கே மகிமை! கடந்த இரவு தான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றேன் அல்லேலூயா! ஆண்டவரே என்னை ஒரு பெரியவனாக்கும்” என்று நீங்கள் கூறலாம். அதில் ஒரு சிறு காரியத்தையும் தேவன் உபயோகிக்கமட்டார். நீங்கள் தோற்கடிக்கப்படும் போதெல்லாம் அதை உணர்ந்து திரும்பவும் வந்து உங்களை தாழ்த்த வேண்டும். நீங்கள் மனிதன் என்று அறியும் பலவீனத்திற்கு வர வேண்டும். உங்களுடைய எந்த புத்தி கூர்மையும் ஒன்றிற்கும் உதவாது. மனித பலவீனங்கள் ஒருபோதும் தேவனால் உபயோகிக்கப்பட்டதில்லை. ஆனால் தேவன் அந்த மனித பலவீனத்தில் தம்மை உங்களுக்குள் ஊற்றி பின்பு தம்மையே உபயோகிக்கின்றார். நீங்கள் வெறுமனே ஓர் கருவியாக ஆகிவிடுகிறீர்கள். நிச்சயமாக உங்கள் வழிகளிலிருந்து நீங்கள் விலக வேண்டும். 69மோசே மனித பலவீனம் என்பதை நன்றாகவே கற்றறிந்தான். தேவன் தமது அழைப்பை அவனுக்குக் கொடுக்கையில் அவன் அதற்கு எதிராக வாக்குவாதம் செய்யும் அளவிற்கு 7 விதமான பலவீனங்களைக் கொண்டவனாயிருந்தான். அந்த 7 பலவீனங்களையும் பற்றி யாத்திராகமம் முதல் பகுதியில் நீங்கள் படித்ததுண்டா? நான் அவைகளை இங்கு எழுதி வைத்துள்ளேன். நீங்கள் அதை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதலாம் பெலவீனம் - அவனிடத்தில் செய்தியில்லாதிருந்தது. இரண்டாம் பெலவீனம - அதிகாரத்தில் குறைவுள்ளவனாயிருந்தான். மூன்றாம் பெலவீனம - பேச்சு வல்லமையில் குறைவுள்ளவனாயிருந்தான். நான்காம் பெலவீனம் - தன்னை சரி செய்து கொள்வதில் குறைவுள்ளவனாயிருந்தான். ஐந்தாம் பெலவீனம் - வெற்றியில்லாதவனாயிருந்தான். ஆறாம் பெலவீனம் - ஒத்துக் கொள்ளாதவனாயிருந்தான் 70இப்பொழுது, இவைகளை உங்களுடையவைகளோடு ஒத்துப் பார்த்து, மோசே பெலவீனமடைந்ததைப் போல் உங்களுடையதும் இணையாயிருக்கிறதா என்று பாருங்கள். “கர்த்தாவே நான் நல்லவன் இல்லை, என்னால் பேச இயலாது. நான் ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றேன். நான் திரும்பவும் எகிப்திற்குச் செல்ல முடியாது... நான் திக்குவாயன் எவ்வளவு பெலவீனனாகிவிட்டான். அவன் ஒன்றுமில்லாதவனாகிவிட்டான் சகோதரனே, தேவன் அவனை சுகப்படுத்திய பின்பு அவனை உபயோகித்தார். பாருங்கள்? ஆம். ஆம் ஐயா, “என்னுடைய பி.எச்.டி., எல்.எல்.டி., மற்றும் இருமடங்கு எல்.எல்.டி., என்ற பட்டப்படிப்புகள் என்னுடைய எல்லாம் ஒன்றுமில்லை” என்ற நிலைக்கு வரும்போது, அவர் அதை சுகப்படுத்தின் பின்பு நம்மை உபயோகிக்க முடியும். அவைகள் ஒன்றையும் தேவன் உபயோகிக்க முடியாது. 71“நல்லது, நான் கூட்டு தேவ சபையை சேர்ந்தவன் ஒருத்துவத்தைச் சேர்ந்தவன், நான் பாப்டிஸ்டு, நான் பிரஸ்பிடேரியன்” என்று கூறும்போது அத்தகைய காரியத்தை தேவன் உபயோகிக்க முடியாது. துரிதமாக அதினின்று நீங்கள் விலகியோடி தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள். “நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்'' (ஏசா: 6:5) என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறின போது, ”சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு இதோ இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்“(ஏசா: 6:6,7) அதன் பின்பு ஏசாயா, ”இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்'' என்று கூறினான். ஆம் ஏசாயா ஒரு தீர்க்கதரிசியாயிருந்தும் தன் உதடுகள் அசுத்தமானவைகள் என்று உணர்ந்த பின்பே அவ்விதம் கூறினான். நீங்களும் நானும் ஒன்றுமில்லையென்றும் இப்பூமியில் தூசி என்றும் உணரக் கூடுமானால், உங்களுடைய பெலவீனங்கள் மோசேயின் பெலவீனங்களுடன் இணையாக முடியாது. அவனுக்கு 6 பெலவீனங்கள் இருந்தது. அவன் மனுஷ பெலவீனம் என்ன என்பதைக் கற்றுக் கொண்டான். 72மோசே தேவனை சந்திப்பதற்கும், மோசே தன் பலவீனங்களை நோக்கிப் பார்ப்பதற்கும்...? இன்றுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். “நமக்கு இன்னார் வேண்டும்! தேசத்திலே நமக்கு எழுப்புதல் வேண்டும்” என்று கூறுகிறார்கள். “நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் சென்று கலைப் பட்டதாரி பட்டத்தை பெறுமட்டும். படிக்கப் போகிறேன். ஆ, ஆ! சட்ட சாஸ்திரத்தால் அபிஷேகிக்கப்படும் வரை நான் படிக்கப் போகிறேன். நான் இதை அதை படித்து இந்த மணி நேரத்தின் முக்கிய மனிதனாகப் போகிறேன். முன்பு இங்கு ஆரம்பித்தவர்களையெல்லாம் மூச்சடைக்கப் போகிறேன். (ஓ, சகோதரனே!) 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள கட்டிடத்தை பெற்றுக் கொள்ளப் போகிறேன். 12 கடிலாக் கார்களை வாங்குவேன்...'', ஓ, சகோதரனே! நீ ஆரம்பிக்காமலிருப்பதே நல்லது. ஏனெனில் நீ ஆரம்பத்திலிருந்தே தோற்றவன் என்பதை உணரவேண்டும். இதில் கஷ்டமான காரியம் என்னவென்றால் அவர்கள் இதை அறியாமலிருப்பதே! 73நீங்கள் சுருட்டை முடியுள்ளவர்களாக இருந்து விலையுயர்ந்த டக்ஸ்டோ உடை அணிந்து (ஒருவகை மேற்கத்திய உடை - தமிழாக்கியோன்) அழகான ஒரு ராஜ குமாரனைப் போன்று காணப்பட்டு, “அந்த மனிதன்” என்று சொல்லப்படும் அளவிற்கு காணப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அது யார் தெரியுமா? அத்தகையோர்கள் பெண்களின் கை பொம்மைகள்! அசைக்கக் கூடிய தேவ மனிதர்களைத் தான் தேவன் விரும்புகிறார். இன்று நாம் ஹாலிவுட்டை விரும்புகிறோம். நம் கண்களுக்கு பிரியமானதை விரும்புகிறோம். புத்திக் கூர்மையாக பேசி ஐந்து நிமிடம் நம்மை ஞாயிறு காலையில் தூங்க வைக்கும் மனிதர்களை நாம் விரும்புகிறோம். பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து அதின் வேர்களை தோண்டியெடுத்து (அது சரியான காரியம்) அக்கினி ஜுவாலையாய் மின்னலைப் போன்று அடித்து பிரிக்கத் தக்கவர்களை தேவன் விரும்புகிறார். ஆனால் நாமோ... புத்திக் கூர்மையுள்ள மேய்ப்பர்களை விரும்புகிறோம். அனேக ஜனங்கள், “ஆம் அன்பானவரே” என்று கூப்பிட்டு கிசுகிசுக்கும் மேய்ப்பர்களை விரும்புகிறார்கள, ஆம், ஐயா. தேவனுக்கு இடிமுழக்கமிடுபவர்களே தேவைப்படுகிறது! ஆம், ஐயா. குட்டை முடியை வைத்து அலங்கரித்துக் கொண்டு இன்னும் பலவிதமாக ஆடைகளை அணிந்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து ஒரு வார்த்தைக் கூட கூறாமல் அவர்கள் பின்னால் தட்டிக் கொடுப்பார்கள். ஒரு மகத்தான மனிதன் அநேக நாட்களுக்கு முன்பு என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, “அவ்விதமாக நீர் பிரசங்கிப்பதற்காக உம் தலையின் மேல் என் கைகளை வைக்க விரும்புகிறேன்!” என்றான். அதற்கு நான், “அவ்விதம் செய்யாதீர்கள், அவ்விதம் செய்யாதீர்கள் ஐயா” என்றேன். அவ்விதம் நீங்கள் செய்வீர்களென்றால் செய்தியை நிறுத்திவிடுவீர்கள். அவ்விதம் நீங்கள் செய்வீர்களென்றால் தேவனையே நீங்கள் நிறுத்திவிடுவீர்கள். ஆம், ஐயா. இத்தகைய காரியத்தை நாங்கள் விரும்புகிறதில்லை. 74தேவன் மோசேயை நோக்கி, பரிதாபமான மோசே, “உனக்கு ஏதோ சம்பவித்துவிட்டது. உன்னுடைய மதிப்பிலிருந்து விழுந்துவிட்டாய். ஓ, நீ ஒரு பெரிய மனிதனல்லவா, புத்தி கூர்மை படைத்தவனல்லவா ஒன்றும் உன்னை நிறுத்தப் போவதில்லையே, உனக்கு தத்துவ ஞான மேதாவி என்ற பட்டம், சட்ட சாஸ்திர மேதாவி என்ற பட்டங்களெல்லாம், உண்டே. ஆனால், நீ இப்பொழுது ஒன்றுமில்லையென்றும் உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் பலவீனன் என்றும்அறிக்கையிடுகிறாயே” என்று தேவன் மோசேயின் பலவீனங்களைக் குறித்து வருத்தப்பட்டிருப்பாரென்று நினைக்கிறீர்களா? இல்லை தேவன் அதைக் குறித்து வருத்தப்படவில்லை. தேவன் மோசேயின் மேல் பரிதாபமும் கொள்ளவில்லை. மாறாக அவைகளினின்று அவனை சுகமாக்கினார். “அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி” என்று வேதம் உரைக்கிறது நீங்கள் அந்த வேத வசனத்தைக் குறித்துக் கொள்கிறீர்களா? அது யாத்: 4:14-ல் உள்ளது. தேவன் அவன் மேல் பரிதாபப்படவில்லை. ஏனெனில் அவன் பலவீனமாயிருந்தான். 75“ஓ கர்த்தாவே, நான் மிகவும் கேவலமாக உணருகிறேன். என்னால் அதை செய்யக் கூடும் என்று நான் விசுவாசிக்கவில்லை'' என்று நீங்கள் கூறலாம். தேவன் அதற்காக பரிதாபப்பட மாட்டார். மாறாக இன்னும் சற்று உங்களை உணரத்தக்க விதமாக வைத்துவிடுவார். பாருங்கள்? நிச்சயமாக அவர் உங்கள் மேல் கோபம் கொள்வார். அவர் உங்களை உபயோகிக்க தக்கதாக நீங்கள் ஒரு உருவகத்திற்குள் வருகிறீர்கள். ஆம் ஐயா. தேவன் உபயோகிக்கத் தக்கதாக மோசே சுகத்தைப் பெற்றுக் கொண்டிருந்தான். சுகத்தைப் பெற்றான். அதன்பின்பு மனித்திறமை என்னும் காரியத்திற்கு அவன் விலகிவிட்டான். அவன் சார்ந்துக் கொள்வதற்காக வேறொன்றிலும் இல்லாமல் ஊழியத்திற்கு ஆயத்தமாகிவிட்டான். 76தேவன், “மனித பலவீனத்தை நீ காண்பாயோ, மாட்டாயோ என்பதற்காக உன்னோடு கூட வாக்குவாதம் செய்ய சிப்போராளை கொடுத்து இந்த 40 வருடம் வனாந்திரத்தில் உன்னை வைத்தேன். நீ அங்கு எகிப்திலே இருந்தபோது, ”வருக, மேதகு, மோசே அவர்களே, காலை வந்தனம் ஐயா, வரப்போகும் ராஜகுமாரன் நீர்தான். நாங்கள் உம்மை வெகுவாக நினைக்கிறோம்'' என்று ஜனங்கள் கூறினார்கள். இப்பொழுது, “ஒரு கூட்ட ஆடுகளோடும், உச்சக்கட்ட கோபக்காரியான மனைவியோடும், இங்கு வனாந்திரத்தில் இருக்கிறாய்” என்றார். பாருங்கள்? அது அவனை சரி செய்துவிட்டது. ஆம் ஐயா, மோசே மிகவும் கேவலமான நிலையில் இருந்தான். அப்பொழுது அவர் அவனைப் பார்த்து, “நீ உன்னை ஒன்றுமில்லை என்று உணர்ந்தபடியால் நான் உன்னை இப்பொழுது உபயோகிக்க முடியும். இங்கு இந்த எரிகிற முட்செடியண்டையில் வா, நான் உன்னை அங்கு அனுப்ப விரும்புகிறேன்” என்றார். ஓ, என்னே! தேவனே, அத்தகையோரை, அத்தகைய அதிகமானவர்களை, பெலவீனர்களை எங்களுக்குத் தாரும். பெலவீனர்களானவர்கள் தாம் எங்களுக்குத் தேவையாயிருக்கிறது, நிச்சயமாக! 77இந்த யாக்கோபை உங்களுக்கு தெரியுமா? ஏமாற்றி அதை சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த ஒரு மகத்தானவன் என்று தன்னை ஒரு காலத்தில் நினைத்திருந்தான். தன் மாமனாரின் கர்ப்பமுற்ற ஆடுகள் தண்ணீரண்டைக்கு வரும் போது புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து அவைகளின் முன்பு போட பிரசவிக்கும் போது புள்ளியுள்ள ஆடுகளாக பிறக்கும் (இந்த வர்த்தமானத்தை ஆதியாகமம்: 3-ம் அதிகாரம், 35-40-ல் காணலாம்) காரியம் என்னவென்றால், “யாக்கோபு மகத்தான மனிதனானான். அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா?” (ஆதி: 27:36) என்று ஏசா கூறினான். அவனை, “எத்தன்” என்று ஏசா அழைத்தான். ஆகவே அவன் ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான். எல்லாம் அவனுக்கு சரியாயிருந்தது. லாபமும், மகத்தான மந்தைகளும், ஆடுகளும், எருதுகளும் மனைவிகளும் உண்டாயிருந்தன. 78ஆனால் ஒரு இரவு, (ஓ, என்னே!) அவன் ஒரு ஆற்றை அடைந்தான். அந்த ஆற்றை அவன் கடக்க வேண்டியவனாயிருந்தான். அங்கு ஒரு தேவதூதன் அவனைப் பிடித்துக் கொண்டான். பழைய சகோதரன் யாக்கோபு முழு இரவும் அங்கிருக்க வேண்டியதாயிற்று. அவர் அவனை நிச்சயமாக முழு இரவும் பிடித்து வைத்திருந்தார். ஆனால் அவன் தன்னை ஒப்புக் கொடுத்தபொழுது, அவன் மிகவும் பலவீனமானபோது அதற்கு மேலும் அவன் தன்னை பிடித்து வைக்க இயலவில்லை... ஓ, தேவனே சபையானது இந்நிலமைக்கு வரட்டும்... சபையானது தன்னுடைய சொந்த திறமைகளின் பேரில் பிடித்துக் கொண்டிராமல் தேவனிடத்தில் தன்னை கொடுத்து விடுமானால் நலமாயிருக்கும். மெத்தோடிஸ்டுகள் தாங்கள் மெத்தோடிஸ்டுகளாக இருப்பதற்காக வெட்கமுறட்டும். பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர் அவ்விதமிருப்பதற்காக வெட்கமுறட்டும். தங்களை சார்ந்து கொள்ளுதலை நிறுத்திவிட்டு ஆவியானவருக்கு ஒப்புக் கொடுக்கட்டும். யாக்கோபு தன்னை ஒப்புக்கொடுத்த பின்புதான், “தேவகுமாரன்” என்று மாற்றப்பட்டான். அவனுடைய பேர் மாற்றப்பட்டது என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? இந்த பக்கத்தில் அவன் ஒரு மகத்தான வல்லமையுள்ள புத்தி கூர்மையுள்ள மனிதனாயிருந்தான். ஆனால் மறுபக்கம் அவன் ஒரு பலவீனனாகவும் களைப்புற்றவனாகவும்... ஆனால் நொண்டும் ராஜகுமாரனாக தேவனுக்கு முன்பாக வல்லமையுள்ளவனாக மாறினான். 79உங்களுடைய ஸ்தாபனம் உடைந்து சிதறி போகலாம். “பழைய காலத்து காகம்” என்று உங்களை அயலகத்தார் கூறி அதினிமித்தம் உங்கள் மதிப்பை இழக்க நேரிடலாம். ஆனால் நான் உங்களுக்கு கூறுகிறேன், தேவனுக்கு முன்பாக நீங்கள் வல்லமையை பெற்றுக் கொள்வீர்கள். நான் அவ்விதமேயிருந்து அத்தகைய வழியையே எப்பொழுதும் தெரிந்துக் கொள்வேன். “அவருடைய நாமத்திற்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் புறப்பட்டு போனார்கள்” என்று சீஷர்களைக் குறித்து வேதாகமம் எழுதியிருக்கிறது. (அப்: 5:41). நிச்சயமாக! உங்களை “பரிசுத்த உருளைகள்” என்று அழைப்பார்கள். 80“நல்லது, நான் ஒரு மெத்தொடிஸ்டு, பிரஸ்பிடேரியன், கூட்டு தேவ சபை, ஒருத்துவன், ஏன், உம்மைப் போன்று நானும் நல்லவன் தான்'' என்ற காரியங்களையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு அதிலிருந்து வெளி வந்து, வழியையுண்டாக்குங்கள். தேவ தூதனானவர் சத்தியமாகிய செய்தியை உங்களுக்கு கொண்டு வரத் தக்கதாக அவர் உங்களை பிடிக்க ஒருவிசை விடுங்கள். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்திற்காக உங்களை தாழ்மைப்படுத்தி மற்ற எல்லா சத்தியங்களுக்காகவும் உங்களை தாழ்மைப்படுத்துங்கள். அவ்விதம் தாழ்மைப்படும்போது நீங்கள் அவ்விதமாக நிச்சயம் செய்வீர்கள். உங்களுடைய எல்லா புத்திசாலித்தனங்களையும் மறந்துவிடுவீர்கள். 81சில நாட்களுக்கு முன்பு, ஒரு பேட்டி முடிந்து நான் அறையை விட்டு வெளியே வந்தபோது, எனக்கு இனிமையான நண்பர்களில் ஒருவர் என்னை பார்த்து, “சகோ. பிரான்ஹாமே”, என்று அழைத்தார். அப்பொழுது நடந்து கொண்டிருந்த கூட்டங்களுக்கு இந்த நண்பர் பொருளுதவி செய்பவர்களில் ஒருவராக இருந்தார். அச்சமயத்தில் அக்கூட்ட செலவுகளுக்கு தேவையான பணத்திற்காக என்ன செய்வது என்று நான் அறியாதிருந்து, கர்த்தரை சார்ந்திருந்தேன்; இந்த நண்பரால் அந்த செலவை முற்றிலுமாக சந்திக்கக் கூடும். ஆம் ஒரு நல்ல நண்பர், இந்நண்பர் பெரிய பட்டிணத்திலிருந்து வந்திருந்து அன்றைக்கு என்னைப் பார்த்து, “சகோ. பிரான்ஹாமே, நான் உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். அதாவது எனக்குத் தெரிந்தவரை உங்களை நேசிக்காதவர்கள் ஒருவருமில்லை”, என்று கூறினார். அதற்கு நான், “அதைக் குறித்து நான் சந்தோஷப்படுகிறேன்”, என்றேன். மேலும் அவர், “சகோ. பிரான்ஹாமே, ஒரே ஒரு காரியம் மட்டுமே தவறாயிருக்கிறது” என்றார்கள். அதற்கு நான், “அது என்ன சகோதரியே?” என்று கேட்டேன். “நல்லது சகோ. பிரான்ஹாமே, நீங்கள் கொண்டிருக்கிறதான அந்த சிறிய உபதேசத்தின் பேரில் சிறிது ஒத்துப் போவீர்களென்றால், எல்லா ஸ்தாபனங்களும் உங்களை வரவேற்பார்கள்” என்றார். அப்பொழுது நான் விழித்துக் கொண்டு, “என்ன உபதேசம் சகோதரி?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஓ, இயேசுவின் நாமத்தினால் கொடுக்கும் ஞானஸ்நானமே” என்றார். “ஓ!” அதற்கு நான், “சகோதரி, தேவனுடைய வார்த்தைக்கு மாறான கருத்திற்கு இணங்கி சென்று பின்னும் நான் ஒரு தேவ ஊழியக்காரனாக இருக்க முடியாது மேலும் அத்தகைய காரியத்தை நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கவும் வேண்டாம்” என்று கூறினேன். 82அவர்கள் மேலும், “நல்லது, ஒரு பெரிய பட்டணத்தினின்று நான் வந்து இங்கேயுள்ள ஒரு கூட்ட ஊழியக்காரர்களுக்கு பிரதிநிதியாக இருக்கிறேன், உங்களுக்கு தரிசனங்களைத் தரும் கர்த்தருடைய தூதனானவர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கச் சொன்னார் என்று அந்த ஊழியக்காரர்களுக்கு கூறுவீர்களென்றால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள விருப்பமாயிருப்பார்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அவர்களுடைய அனுபவம் கழுவப்படும் தட்டின் தண்ணீரைக் காட்டிலும் பெலவீனமானது. ஒரு தூதன் கூறும் காரியம் தேவ வார்த்தையோடு பொருந்தவில்லையென்றால் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தூதன் வார்த்தைக்கு புறம்பானதொரு காரியத்தை கூறுவானென்றால் அந்த தூதனை நான் நம்பமாட்டேன். அவனுக்கு செவிக் கொடுக்கவும் மாட்டேன்'' என்றேன். அது சரியானதாகும். தேவனுடைய வார்த்தை எல்லா தூதர்களையும் விட உயர்ந்தது. அதற்கே முதலிடம். ஆம் ஐயா, அந்த பெண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்பு அவள், “இத்தகைய காரியத்தை நான் ஒருபோதும் கேட்டதில்லை. அதைக் குறித்தும் எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். ஆகவே நான் சில வேத வாக்கியங்களை அச்சகோதரிக்குக் கொடுத்தேன். அவர்கள், “நான் இப்பொழுது வீடு சென்று புதிய ஏற்பாட்டை படிக்கப் போகிறேன். ஏனெனில் நான் இதுவரை அதை படிக்கவில்லை'' என்றார்கள். அதுதான் காரியம் ஓ, அதைதான் நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் அதை பிடித்துக் கொண்டிருக்க முயலாதீர்கள். அதை அவிழ்த்துவிடுங்கள். அதை தான் நீங்கள் செய்ய வேண்டும். யாக்கோபு தன்னை அவிழ்த்து விட்ட பின்பு அவன் சரியான நிலைமைக்கு வந்து தேவனோடு வல்லமை பெற்ற ராஜ குமாரனாக மாறினான். 83சிறிய தாவீது சவுலின் மார்க்க சம்பந்தமான உடைகளை அணிந்து கோலியாத்துடன் சண்டையிடச் சென்றான். பெரிய கவசங்களையும் மற்றவைகளையும் அணிந்து சுற்றும் முற்றும் பார்த்து அவனுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசமில்லாதிருந்தது. “ஆகவே இதில் ஏதோ தவறிருக்கிறது”, என்று கூறினான். நீங்கள் உலகத்தைப் போன்று இருந்து உலகக் காரியங்களோடு இணக்கமாயிருந்து உலகம் செய்வதையே நீங்களும் செய்வீர்களென்றால், அங்கு ஏதோ தவறிருக்கிறது. “இத்தகைய உடைகள் அதிக பாதுகாப்பை கொடுப்பது போல் காணப்படுகிறது. மேலும் இவைகள் பரமார்த்த வித்தியா மேதாவி, தத்துவ மேதாவி, (D.D - Ph. D) போன்ற படிப்புகளைப் படித்து ஒரு மகத்தான ஸ்தாபனத்தை சேர்ந்தது போலிருக்கிறது. இத்தகைய அமைப்புடன் நான் சென்று எப்படி சண்டையிடுவது? ஏனெனில், இவைகளைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இதை என்னிலிருந்து அகற்றிவிடுங்கள்” என்று தாவீது கூறினான். அது சரியான வார்த்தை. “நான் தேவனுக்காக யுத்தம் செய்ய போவதானால், எல்லா கவசங்களாலும், ஈட்டிகளாலும் தரிப்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த ஒரு கூட்ட கோழைகளைப் போல காணப்பட நான் விரும்பவில்லை. என்னால் கூட்டம் நடத்த இயலாது. 84அநேக கூட்டங்களில் அனேக ஜனங்களும், ஊழியக்காரர்களும் என்னிடத்தில் வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது தான் சரியான முறை என்று அறிக்கையிடுவார்கள். ஆனால், “எங்களுடைய ஸ்தாபனம் எங்களை வெளியே தள்ளிவிடுமே” என்று கூறுவார்கள். பரிதாபமானவர்களே அது ஒரு சாக்கு அல்ல! சவுலின் கவசத்தை அகற்றிவிடுங்கள்! தேவனே பரிசுத்த ஆவியின் வல்லமையையும் பெலனையும் எனக்குத் தந்து ஒரு சிறிய கவணை என் கையில் கொடுத்து, அது என்னவாயிருந்தாலும் சரி அதினால் சத்துருவை கீழே விழத் தள்ள என்னை அனுப்பும். அது உண்மை. மற்றவர்களைப் போன்று சட்ட சாஸ்திர மேதாவி, தத்துவ மேதாவி (L.L.D - Ph. D) போன்ற பட்டங்களால் நான் உடுத்த அனுமதியாமல், என்னை அனுப்பும் தேவனே. 85“இந்த காரியம் சரியாக எனக்கு தென்படவில்லை, இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியவுமில்லை. ஒரே ஒரு காரியம் மட்டும் நான் அறிந்திருக்கிறேன். என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிற போது, ஒரு விசை ஒரு சிங்கமும், ஒரு விசை ஒரு கரடியும் வந்து மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டது. (எனக்குத் தெரியும், அது என் தகப்பனுடைய ஆடு என்று, நான் அப்பொழுது ஆயுதங்களால் தரிப்பிக்கப்பட்டிருக்கவில்லை) நான் கவணை மட்டும் எடுத்துக் கொண்டு அதை தொடர்ந்து போய் அதை அடித்து ஆட்டை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்'' என்று தாவீது கூறினான். (இந்த வர்த்தமானத்தை 1சாமுவேல்: 17:34, 35-ல் வாசிக்கலாம் - தமிழாக்கியோன்). ஓ, அங்கிருந்தவர்கள், ஈட்டிகளை வைத்து நின்றுக் கொண்டிருந்தாலும் அத்தகைய காரியத்தை செய்திருக்க முடியாது. இன்றுள்ள காரியமும் அதுதான். தேவனுக்கு அனேக வழிதவறின ஆடுகள் உண்டு. ஸ்தாபனங்கள் அவைகளை திருடிக் கொண்டன. மனோதத்துவத்தினால் அவைகளை வசியப்படுத்திவிட்டது. தேவனே, தேவ வார்த்தையோடும், வல்லமையோடும் உள்ள தாவீதுக்களை எங்களுக்குத் தாரும். புத்திசாலிகளான ராட்சதர்களை சந்திக்கத் தக்கதாக நாங்கள் செல்லும் போது (தத்துவ மேதாவி, சட்ட சாஸ்திர மேதாவி, போன்ற படிப்பாளிகள்) அதை பிரயோகிக்கட்டும். தேவ வார்த்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையையும் எனக்குத் தாரும். இப்பொழுது பாருங்கள், களத்திலுள்ள ஒவ்வொரு ராட்சதனையும் நாங்கள் கொல்லுவோம். உண்மை. அத்தகைய மனிதர்கள் எங்களுக்குத் தேவை... 86அந்த ராட்சதனோடு (கோலியாத்) போரிட அக்களத்திலிருந்த மிக பரிதாபமான ஒரு மனிதனைப் போன்று தாவீது இருந்தான். ஏனெனில் அவன் ஒரு சிறு பையன். ஒருவேளை தோள்கள் சரிந்த தோற்றமுடையவனாக ஆட்டுத்தோலைப் போர்த்தியவனாக இருந்திருக்கக் கூடும். பட்டப் படிப்புகளோ, சாதுர்ய பயிற்சிகளோ அவனிடத்திலில்லை. பட்டயத்தைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. சவுலின் பயிற்சிகள் எல்லாம் அவனுக்கு ஒன்றும் தெரியாது. கண்காணி (Bishop) சவுல் தான் அன்றைக்கு அவர்கள் பெற்றிருந்த மிக சிறந்த மனிதன். சமஸ்த ராணுவத்திலுள்ள எல்லாருடைய தோள்களுக்கும் மேல் அவன் உயரமாயிருந்தான். அவன் தான் கோலியாத்துடன் சென்று சண்டையிட்டிருக்க வேண்டும். ஆனால் அவனோ பயந்திருந்தான். 87இன்றைக்கு நமக்கு ஓர் எழுப்புதல் தேவை என்று நாமறிவோம். அதற்கு ஒரு பரமார்த்த மேதாவி (D.D) தேவையில்லை, மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையில் தேவனுடைய வார்த்தையை எடுக்கும் ஒரு பலவீனனே தேவை (அல்லேலூயா) அவன் அதை எடுத்து கொள்ளட்டும். அத்தகையக் காரியம் கிறிஸ்துவை தேசத்திற்கு கொணர்ந்து குருடருடைய கண்களை தேவன் இன்றும் திறக்கிறார், சுகமாக்குகிறார், மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். ஜெயித்தவர் இங்கிருக்கிறார் என்பதை அவர்கள் பார்க்கட்டும். ஆமென். வேத கல்லூரிகளில் பயிற்சி பெறாத தாவீது நமக்குத் தேவை. பார்ப்பதற்கு ஒன்றுமில்லாதவனாக தோள் சரிந்த ஒரு சிறியவனாக, ஒரு சிறிய உழவனோ அல்லது யாராயிருந்தாலும், அவர் வேத கல்வியின் பயிற்சியை அறியாதவனாக இருந்து, ஆனால் தேவ வல்லமையோடு வீதிகளில் நடந்து வரும் மனிதனே நமக்குத் தேவை. 88மரித்துக் கொண்டிருந்த என் தாயார் என்னை நோக்கி, “பில்லி, நான் உன் மேல் சார்ந்திருந்து உன்னை நம்பினேன். இவ்வளவு காலமும் நீ எனது ஆவிக்குரிய பெலனாக இருந்து என்னை தேவனிடத்தில் வழிநடத்தினாய்” என்றார்கள். அதற்கு நான், “என் தாயாரே, நான் சிறுவனாக இருந்த போது... (எங்களுடைய குடும்ப பிண்ணணியின் படி சிறிதளவு கத்தோலிக்கம் கலந்திருந்தது). கத்தோலிக்க சபை கூறியது; தாங்கள் ஒரு சரீர ஜனங்கள் என்றும் அவர்களுக்கு எல்லாம் இருக்கிறதென்றும் அவர்கள் செய்வதெல்லாம் சரியானது”, என்றும் கூறினார்கள். அதை நான் நம்பவில்லை ஏனெனில், லூத்தரன்களும், பாப்திஸ்துகளும், மற்ற அனேகரும், ஏறத்தாழ 900 வித்தியாசமான ஸ்தாபனங்களும் அதையே கூறினார்கள். ஆகவே, தாயாரே, “அவர்களில் யார் உண்மை? ஆகவே நான் அவைகளின் பேரில் என் நம்பிக்கையை வைக்கவில்லை” என்றேன். 89காரியம் எனக்குத் தெரிய வந்தது. இதை நான் மிகவும் பணிவாக இனிமையாக கூறுகிறேன். அது உண்மை, நான் தேவ வார்த்தைக்கு திரும்பிச் சென்றேன். முற்காலத்தில் அது என்ன செய்தது என்று பார்த்தேன். (அப்படியானால், தேவனே, நாங்கள் இங்கு திரும்பிச் செல்லட்டும்) பலவீனத்தோடு, ஸ்தாபனங்களின் ஆதரவு இன்றி, மத சம்பந்தமான ஆதரவு இன்றி எளிமையான விதத்தில், பெந்தெகொஸ்தே தினத்தில் ஆவியானவர் இறங்கி வந்தபோது பேதுரு பிரசங்கித்த, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” (அப்: 2:38) என்ற காரியத்தை கண்டு பிடித்தேன். குதிரைக்கு சேணம் கட்டினது போன்ற, கலைப் பட்டப் படிப்புகளால் (BA) தங்கள் கழுத்துப் பட்டைகளை தூக்கிவிடும் வேத சாஸ்திரிக்காரர்களை போல் நீங்கள் இருக்க வேண்டாம். மாறாக, சகோதரனே, உன்னுடைய கரங்களில் ஏதோவொன்றிருக்கிறது. தேவ ஆவியானவர் வார்த்தைக்குள்ளாக போகத் தக்கதான நிலைமையுள்ளவரை அது ஜெயமெடுத்து, வழித்தவறி காணாமற் போன ஆடுகளைத் திரும்பவும் கொண்டு வரும். ஆமென்! நம்முடைய பலவீனங்களை அறிக்கையிடுவோமாக! பரமார்த்த மேதாவி (D.D) பட்டங்களைத் தூக்கியெறியுங்கள். உங்கள் அங்கத்தினர் சீட்டுகளையும், எல்லாம் தெரியும் என்ற காரியங்களையும் தூக்கியெறியுங்கள். உங்களை தேவனுக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் ஆக்கி (ஆவிக்குரிய விதமாக பேசுகிறேன்) “தகுதியற்றவர்கள்'' என்று உங்களை அழைத்திடுங்கள்” அப்பொழுது தேவன் உங்களை உபயோகிக்கக் கூடும். “உதட்டளவில் அதைக் கூறாமல் அதை உங்கள் இருதயத்திலிருந்து கொண்டு வாருங்கள்”. 90யாக்கோபு... தாவீது, இவர்கள் தங்களை ஒன்றுமில்லாதவர்களாக்கினார்கள். அந்த முழு கும்பலிலும் தாவீது மிகவும் பலவீனனாயிருந்தான். ஆயிரமாயிரமாக அந்த மலையில் யுத்த வீரர்கள் இருந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அவர்கள் எல்லாரும் பயிற்சிவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும், தத்துவ மேதாவிகளாகவும்,(Ph. D) ஈட்டிகளையுடைவர்களாகவும், காலாட்படையின் உத்தியோகஸ்தர்களாகவும், தனிப்பட்ட உத்தியோகஸ்தர்களாகவும் சேனைத் தலைவர்களாகவும் இருந்தார்கள். “மதிப்பு மிக்க ஐயா” என்று அழைக்கப்பட்ட நான்கு நட்சத்திர பிரபுவாக, கண்காணி சவுலோடும் நிறைந்திருந்தார்கள். ஆனால் சத்துரு மலையின் மேல் நின்று கொண்டு, “கோழைக் கூட்டமே” என்று கொக்கரித்தான். 91அங்கே யுத்த களத்தினிடமாக, தோள் சரிந்தவனாக (ஓ, தேவனே!) சிவந்த மேனியுள்ள ஒரு சிறுவன், தன் தோளின் மேல் கவண் தொங்கிக் கொண்டிருக்க, தன் சகோதரர்களுக்காக காய்ந்த திராட்சைகளையும், பணியாரங்களையும் எடுத்துக் கொண்டு அங்கே வந்தான். அந்த கோலியாத் அவ்வப்பொழுது அங்கு வந்து நின்று சவால் விடுகிறவனாக இருந்தான். “பயிற்றுவிக்கப்பட்ட மேதாவிகளாகிய நீங்கள் இங்கே நின்றுக் கொண்டு, விருத்தசேதனமில்லாத அந்த பெலிஸ்தியன் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை நிந்திக்க விட்டிருக்கிறீர்களே, நீங்கள் அவனைக் குறித்து பயப்படுகிறீர்களா?” என்று தாவீது சவுலின் சேவகர்களைப் பார்த்துக் கூறினான். சவுல் தாவீதை நோக்கி, “நீ சண்டையிடச் செல்ல விரும்பினால் இங்கு வந்து இன்றிலிருந்து 20 வருடங்கள் படிக்கத் தக்கதாக ஒரு பள்ளிக்கு உன்னை அனுப்பி உனக்கு ஒரு தத்துவ மேதாவி (Ph.D) என்ற பட்டத்தை சூட்டுவேன். உனக்கு என்னுடைய பட்டத்தை சூட்டுவேன்” என்றான். அதற்கு தாவீது, “அந்த காரியத்தை எடுத்துப் போடுங்கள். அக்காரியத்தைக் கொண்டு நான் ஒன்றும் செய்ய விரும்பவில்லை'' என்றான். தேவன் பேரில் சார்ந்திருக்க அவன் விரும்பினான். தாவீது மேலும், எனக்காக தேவன் இந்த கவணை வைத்து என்ன செய்தார் என்பதை நானறிவேன். எல்லாவற்றையும் எதிர்க்கத் தக்கதாக நான் தேவனை சார்ந்திருக்க ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். ஆமென்! ஒரு கிறிஸ்தவனுடைய அனுபவம் அதுதான். 92சவுல் எனப்பட்ட பவுலும், தன்னுடைய கவசத்தை எடுத்துப் போட, மார்க்க சம்பந்தமான கவசத்தை களைய வேண்டியதாயிற்று. அவன் தாவீது செய்தது போல் செய்தான். பவுல் தன்னுடைய ஊழியப் பாதையின் முடிவில் வரும்போது “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன், இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதை தந்தருளுவார்'' (11தீமோ: 4:7, 8). அது பவுல் ஜெயிக்க வேண்டிய கடைசி சத்துருவாயிருந்தது. ஓ, மரணம் அவனைப் பார்த்து, “இன்னும் சில நிமிடங்களில் உன்னைப் பிடித்து விடுவேன் என்றும் பாதாளம் அவனைப் பார்த்து உன்னை உருக்குலைத்து விடுவேன்”, என்றும் கூறின. அதற்கு பவுல், “மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? இந்த ரோம இருட்டறையில் கைகள் விலங்கிடப்பட்டவனாக 39 சவுக்கடிகள் என் முதுகில் சுமந்தவனாக கிடத்தப்பட்டிருக்கிறதை நானறிவேன். கண்ணீரானது என் கண்களை மறைக்கும் அளவிற்கு வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. என் இயற்கை கண்களை கொண்டு நான் பார்க்க முடியாவிட்டாலும், ஒரு நீதியின் கீரிடம் எனக்காக வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். என் கால் மூட்டுகள் களைத்துவிட்டன. அவர்கள் தூக்கியெறியும் ரொட்டியினால் நான் போஷாக்கு இழந்துவிட்டேன். எலிகள் என் மீது ஓடுகின்றன, சிலந்தி பூச்சிகளும் மற்றவைகளும், என் மீது ஓடுகின்றன. நான் மிகவும் பலவீனமாயிருக்கிறேன்” ஆனாலும் விலங்கு தன் கைகளில் ஆடிக் கொண்டிருக்க மரணத்தின் முகத்திற்கு நேராக பவுல் நின்று, “மரணமே, உன் கூர் எங்கே?, பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று பவுலால் கூற முடிந்தது. அல்லேலூயா! அதுதான் நமக்கு தேவை. “பாதாளமே உன் ஜெயம் எங்கே?” பாதாளம் பவுலைப் பார்த்து, “நான் உன்னை அழுக வைத்துவிடுவேன் பவுலே” என்றது. அதற்கு பவுல், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஏற்கனவே ஜெயம் பெற்றுவிட்டேன்”, என்றான். 93பவுல் பலவீனமான போது, அவனுடைய மார்க்க சம்பந்தமான சடங்காச்சாரங்கள் எல்லாம் அவனைவிட்டு கரைந்து போய்விட்டன. அவனுடைய நியமனப்பத்திரங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு போயிற்று. இனிமேலும் அவன் தேவ கூட்டு சபையைச் சார்ந்தவனல்ல... இனிமேலும் அவன் வேறெந்த அமைப்பையும் சார்ந்தவனல்ல. அந்நாட்களிலிருந்த கண்காணிகளுக்கு விரோதமாக அதிகமாக அவன் சாடினான். ஆகவே அவர்கள், “20 வருடங்கள் ரோம சிறைச்சாலையிலிருந்த இந்த மனிதன் சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்” என்று நமக்கு கூற வேண்டுமோ? ஆ, அவ்விதமாக எங்களுக்குச் செய்யாதிரும், “எங்களுக்கு நன்றாகவே தெரியும்”, “இதை செய், அதை செய் என்ற கூற யார் இவன்?”, “நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்து அறிந்திருக்கிறோம்” என்றார்கள். அதனால் தான் பவுல், “உங்களிலும் சிலர் எழும்பி சீக்கிரமாகவே ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி, தேவ ஆவியில்லாதவர்களாக விசுவாசத்தை விட்டு வழுவிப் போகச் செய்வார்கள். அவர்கள் ஏற்கனவே நம்மை விட்டு சென்று நம்முடையவர்களல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள்” என்று கூறினான். 94பின்பு நடந்த காரியம் என்ன? கத்தோலிக்க மார்க்கம் பிறந்தது; அதனின்று லூத்தரன்; பின்பு அதனின்று கடைசியாக தேவ கூட்டு சபை என்ற விதமாக அமைப்பை பெற்றது. அதுதான். அதே காரியத்தைத் தான் எப்பொழுதும் அது நடப்பிக்கிறதாயிருக்கிறது. ஒரு மனிதனோ, அல்லது பெண்மணியோ, முற்றிலும் பெலவீனமாகி உங்களுடைய பெலவீனத்தை உணர்ந்து தேவனை கிரியை செய்ய அனுமதியுங்கள். நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன்... நான் நீண்ட பிரசங்கம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். 95இப்பொழுது கவனியுங்கள். அது என்ன? அங்கு இருந்த கூட்டத்திலே தாவீது தான் மிகவும் படிப்பறிவில்லாதவன். சண்டையிடுவது எப்படியென்பதைப் பற்றிய பள்ளிப் படிப்பு அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த யுத்தத்திற்காக பள்ளிப் படிப்பு ஏதும் இல்லாதவனாயிருந்தான். ஆனால் தேவன் ஒருவர் உண்டு என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்களுக்கெல்லாம் ஈட்டியும், கவசமும், வில்களும் இருந்தன. ஆனால் தாவீது ஒரு கல் வைக்கப்பட்டிருந்த பலவீனமான சிறிய கவணை மட்டும் வைத்திருந்தான். தான் எதின் மேல் சார்ந்திருக்க வேண்டும் என்பதை தாவீது அறிந்திருந்தான். தன்னுடைய பலவீனத்தை அவன் அறிக்கை செய்திருந்தான். ஆனால் தன்னுடைய விசுவாசத்தை தேவனில் வைத்திருந்தான். “தடுத்து நிறுத்தி பாதுகாக்கத் தக்கதான கேடயம் ஏதும் என் மீது வேண்டாம்” என்றான் தாவீது. “சகோதரரே, நீங்களெல்லாரும் என்னோடு ஒத்துழைக்க வருகிறீர்களா?” தேவ கூட்டு சபையை சேர்ந்தவர்கள் என்றும், பிரஸ்பிட்டேரியன் என்றும், மெத்தோடிஸ்டு என்றும், பாப்டிஸ்டு என்றும், அழைத்துக் கொள்பவர்களே நீங்களெல்லாரும் என்னோடு ஒத்துழைக்க வருகிறீர்களா? என்று கேட்க நான் வரவில்லை. “அத்தகைய சரக்குகள் ஒன்றாகிலும் நான் விரும்பவில்லை”, என்று தாவீது கூறினான். “நான் என் பையைக் காண்பிக்கட்டும். தாவீதே எனக்கு கலைக்குரியப் பட்டமிருக்கிறது (BA). அந்த கல்லூரியினின்று நான் வந்திருக்கிறேன், அங்கு தான் நான் மேதாவியானேன். ஓ!என்னால் பேச முடியும்! ”அத்தகைய சரக்கெல்லாம்“ தாவீது விரும்பவில்லை. தாவீது விரும்பினதெல்லாம், “என் தேவன் பேரில் நான் விசுவாசம் கொண்டுள்ளேன். இதோ நான் போகிறேன்'' என்றான். அதுதான் காரியம் ஐயா. அந்த ராட்சதன் விழுந்து போனான். அது உண்மை. இதுதான் இன்றைக்கு நமக்கு வேண்டும் சகோதரனே, நமக்கு இன்று தேவையெல்லாம் கல்லூரியின் அனுபவம் அல்ல, மாறாக தாவீதைப் போன்ற மனிதர் தாம். 96இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் சிறிய மனிதன் உண்மையாய் தேவனுக்காக நின்றபடியால் ஸ்தாபனங்களினால் புறம்பாக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டான். ஆனால் யோசபாத் என்னும் தேவனுடைய மனிதன் அங்கு வந்து, “உண்மையான தேவனுடைய வார்த்தையை நான் அறிய விரும்புகிறேன்” என்றான். அதற்கு ஆகாப், “நீர் ஒருபோதும் அறிந்திரா வண்ணம் என்னிடையே 400 சிறந்தவர்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாரும் இங்கு பள்ளியில் பயிற்சிப் பெற்று தங்களுடைய பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நீர் ஒரு போதும் கேட்டிராத வண்ணம் அவர்கள் மிக சிறந்த பிரசங்கியார்கள். இப்பொழுதே நான் அவர்களை அழைக்கிறேன். உமக்காக தேவனிடத்தில் அவர்களை விசாரிக்கச் சொல்லுகிறேன்” என்றான். யோசபாத் சுற்றிலும் அந்த போதகர்களைப் பார்த்துவிட்டு, “சரி, ஒருவன் ஒன்றை கூறுகிறான், மற்றொருவன் இன்னொன்றைக் கூறுகிறான். இவர்களையல்லாமல் வேறு யாராகிலும் உண்டா?” என்று கேட்டான். 97தேவன் இந்த உண்மையான இருதயத்திற்கு ஒரு செய்தியை கொடுக்கப் போகிறவராயிருந்தார். அங்கிருந்த கூட்டத்தில் ஒரே ஒரு மனிதன் தான் இருந்தான். அவனுக்காக தேவன் தம்முடைய மனிதனை வைத்திருந்தார். ஆமென், எங்காவது ஒரே ஒரு உண்மையான இருதயம் இருக்குமானால் அவனுக்கென்று தேவன் ஒரு மனிதனை வைத்திருக்கிறார். யோசபாத் ஒரு சரியான மனிதன். தேவ பக்தியுள்ளவன், அவர்களுடைய செய்தி தவறு என்று அறியும் அளவிற்கு உணர்வைப் பெற்றிருந்தான். அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிறது என்பதை அறிந்திருந்தான். ஆமென். (ஓ, சகோ. நெவில்?) யோசபாத் அதை அறிந்திருந்தான். ஆகாப், “நல்லது அவர்களுடைய முழு தஸ்தாவேஜிக்களும் இந்த கல்விச் சாலையில் உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரையும் இங்கு அழைத்திருக்கிறேன். இங்கு பாரும், இவர் இதைப் பெற்றிருக்கிறார்... இவர் பெற்றிருக்கிற பட்டங்களைப் பாரும். இவருடைய காரியத்தை பாரும். இந்த சிதேக்கியாவை பாரும், இவர் தான் இவர்களுக்கெல்லாம் தலைவர் ஏன்? எங்களெல்லாருக்கும் இவர்தான் கண்காணி. ஆகவே அவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளும்” என்று கூறினான். அதற்கு யோசபாத், “அது சரி, நான்... நான்...'' 98“நன்று, இங்கு பாரும், எல்லாரும் அவருடன் இசைந்திருக்கிறார்கள். அவர்களெல்லாரும் ஒரு மகத்தான அமைப்பு! அவர்கள் எபிரேய தீர்க்கதரிசிகள் இல்லை என்று நீர் கூற முடியாது, அதற்கான சான்றிதழ் இதோ, அதுவே அதன் நிரூபணம்” என்று ஆகாப் கூறினான். அதற்கு யோசபாத், “ஆகாபே, அதை நானறிவேன், அதெல்லாம் சரிதான், ஆனால்...” அதற்கு ஆகாப், “எதை எதிர்பார்க்கிறீர்... இதற்கு மேல் என்ன என்னிடம் கேட்க இருக்கிறீர்கள்? என்னுடைய முழு பள்ளிக் கூடமும், எல்லா ஸ்தாபனமும் ஒன்றாக வந்திருக்கிறார்கள் பாரும்” என்றான். அதற்கு யோசபாத், “இந்தக் கூட்டத்தைச் சாராத வேறு யாராகிலும் ஒருவன் உண்டா?” அதற்கு ஆகாப், “நன்று அவ்விதமிருந்தால் அவன் யாராயிருக்க கூடும்? அவன் படிப்பறிவற்றவனாகத் தான் இருக்க வேண்டும்! அத்தகைய மனிதனோடு நீர் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்றான். அதற்கு யோசபாத், “எங்கேயாவது வேறு யாராகிலும் உண்டா?, என்று தான் கேட்டேன் ஆகாப்” என்றான். 99அதற்கு ஆகாப், “ஓ! ஆம், அத்தகையோன் ஒருவன் இங்கு இருக்கிறான்”, (ஓ, அதற்காக தேவனுக்கு நன்றி) மேலும் ஆகாப், “ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை பகைக்கிறேன், மற்ற எல்லாரும் கூட அவனை பகைக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் அவனை இந்த ஸ்தாபனத்திலிருந்து விரட்டியடித்துவிட்டோம். இங்கு அவன் ஒரு கூட்டம் நடத்த வந்தான். ஆனால் நாங்கள் அவனை இந்த பட்டிணத்திலிருந்து விரட்டிவிட்டோம். ஆம் ஐயா, அவனோடு கூட எங்களுக்கு ஒரு காரியமும் இல்லை. அவன் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து வந்த ஓர் பலவீனமானவன், ”அவனுடைய இலக்கணம் மிகவும் கேவலமானது, (ஆ, ஆ, மூடி பிரசங்கியாரைப் போன்று) வேத சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இதுவரை அது போன்று பரிதாபமானதை நான் கேட்டதேயில்லை; ஓ, சடங்காச்சாரங்களையும், அவர்களுடைய அப்போஸ்தலருடைய சமயக் கோட்பாடையெல்லாம் கிழித்துப் போட்டான். அவ்விதமான காரியத்தை நான் ஒருபோதும் கேள்விப்படவில்லை. நானும் அவர்களும் எல்லாரும் அவனைப் பகைக்கிறோம்“ என்றான். “ஓ”, அதற்கு யோசபாத், ராஜா இவ்விதம் சொல்ல வேண்டாம், ஆனாலும் நான் அவன் பேசுவதைக் கேட்க விரும்புகிறேன்“ மிகாயா என்ன கூறுவான் என்பதை யோசபாத் அறிந்திருந்தான். 100தேவன் மகத்தான, பலமுள்ள புத்திசாலிகளான பிரசங்கிமார்களையெல்லாம் புறக்கணித்து விட்டுதான் ஒன்றுமில்லாதவன் என்று உரிமை கொண்டாடும் ஓர் சிறிய மனிதனுக்குள் தம்முடைய செய்தியை வைத்தார். அவன் என்ன செய்தான் பாருங்கள். அவர்கள் அவனைப் பார்த்து, “அவர்கள் என்ன கூறினார்களோ, அதையே நீயும் சொல்” என்ற பரீட்சையை அவனுக்குக் கொடுத்தார்கள். அதற்கு மிகாயா, “கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன்”, என்றான். மிகாயாவை அழைக்கப் போனவன், “நீ பலவானாக விரும்பினால், நீ இங்கு ஒழுங்கற்றவனாக இருக்கிறாய், ஸ்தாபனத்தினின்று நீ துரத்தியடிக்கப்பட்டதை ஞாபகம் கொள் பையனே! இத்தகைய சூழ்நிலையில் நீ அவர்களோடு ஒத்துப் போனால் அவர்கள் ஒரு வேளை உன்னுடைய ஐக்கியத்தை மறுபரிசீலனைச் செய்யகூடும். நாங்கள் இப்பொழுது ஒரு மகத்தான கூட்டங்களை ஒழுங்கு செய்திருக்கிறோம்” என்றான். அதற்கு மிகாயா, “கர்த்தர் என்னிடத்தில் கூறுவதையேயல்லாமல் வேறொன்றையும் கூற மாட்டேன்!” 'ஒத்துப் போகுதல்', வார்த்தைக்கு மாறானக் காரியத்தோடு ஒரு தேவ மனுஷன் ஒத்துப் போவான் என்று எதிர் பார்க்கிறீர்களா? இல்லை, ஐயா, அத்தகைய காரியத்தை அவன் மேல் சுமத்த வேண்டாம். அதற்கு அவன், “நீ பலவீனனும், ஒரு ஏழ்மையான குடும்பத்தினின்றும் வந்திருக்கிறாய், ஒரு வேளை அவர்கள் உனக்கு...'' அதற்கு மிகாயா, “அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை” என்றான். “நன்று, நீ மட்டும் ஒத்துப் போவாயானால், அவர்கள் உன்னை ஆகாய விமானத்தின் மூலமாக தேசம் விட்டு தேசம் உன்னை அழைத்துச் சென்று, எதை வேண்டுமானாலும் உனக்குச் செய்வார்கள்...” அதற்கு மிகாயா, “இல்லை, இல்லை, கர்த்தர் என் வாயில் எதை போடுவாரோ அதையே சொல்வேன்” என்றான். 101தேவன் அந்த கூட்டத்தையெல்லாம் புறக்கணித்தார் (ஆம், ஐயா, அவனுடைய உத்தமமான நிலைநிற்கும் தன்மை அதை செய்தது). 400 பேரை தேவன் புறக்கணித்து, “கர்த்தர் சொல்லுகிறதாவது” என்பதை மிகாயாவிற்குக் கொடுத்தார். பின்பு அவர்கள் அதை விசுவாசித்தார்களா? இல்லை ஐயா! அவர்கள், “அது கர்த்தர் சொல்லுகிறதாவது”, என்றல்ல ஏனெனில் எங்கள் சமயக் கோட்பாடு அவ்விதம் எங்களுக்குப் போதிக்கவில்லை, நன்று இதோ இங்கே எங்கள் கண்காணி நின்றுக் கொண்டிருக்கிறார், அவர் வார்த்தையை கூறிவிட்டார். சடங்காச்சாரத்தை எழுதினவரும் அவரே, நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்களுடைய பள்ளிகளை உருவாக்கியிருக்கிறோம். தேவன் எங்களோடு இருக்கிறார்! காரியம் இப்படி இருக்க கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் அவரைவிட்டு, உன்னோடே பேசும்படி வந்தது?“ அதற்கு மிகாயா, “அதைக் குறித்து சில நாளிலே காண்பாய்” என்றான். அவன் எப்படியிருந்தான்? அவன் பலவீனமாயிருந்தான், ஆனால் அங்கிருந்தவர்களிலெல்லாம் அவன் தான் மிகவும் பலசாலியானவன். ஏன்? ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையை அவன் கொண்டிருந்தான். ஓ, சகோதரனே, “நீ கர்த்தர் சொல்லுகிறதாவது”, என்ற காரியத்தை உன்னிடம் வைத்துள்ளவரை எந்தக் காரியம் வந்தாலும் அது உனக்கு என்ன வித்தியாசத்தை உண்டாக்கும்? 102“சகோ. பிரான்ஹாமே, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் விஷயத்தில் சற்று எங்கள் கருத்துக்கு இசைவீர்களென்றால், நாங்கள் சிக்காகோ மற்றும் பல இடங்களில் மகத்தான கூட்டங்களை ஒழுங்கு செய்யலாம்” என்றார்கள். ஆஹா! அத்தகைய காரியத்தை அவன் செய்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் எங்கு கூடுகிறீர்கள் என்றும் என்ன செய்கிறீர்கள் என்றும் எனக்கு கவலையில்லை. சகோதரனே, “கர்த்தர் சொல்லுகிறதாவது”, என்பதில் நிலைத்திரு. அது தவறு என்று அவர்களில் யாராகிலும் வந்து என்னிடம் கூற விரும்புகிறேன். அது தவறு என்று தேவனுடைய வார்த்தையில் எனக்கு சுட்டிக் காண்பியுங்கள். ஆம், அவர்களால் அதை சமாளிக்க முடியாது. இல்லை ஐயா, ஏனெனில் அது, “கர்த்தர் சொல்லுகிறதாவது”; யார் உங்களை புறக்கணித்தாலும் அதிலே நிலை கொண்டிருங்கள். நீங்கள் எவ்வளவு பலவீனராக ஆனாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. பின்பு நான் பலமுள்ளவனாவேன். அவர்கள் என்னை வெளியே தள்ளினாலும் தேவன் என்னை உள்ளே சேர்த்துக் கொள்வார். ஆஹா... அவர்கள் உங்களை வெளியே தள்ளினால் தேவன் உங்களை உள்ளே சேர்த்துக் கொள்வார். தள்ளப்பட்டவர்களையும், ஒன்றுமில்லாதவர்களையும் தான் தேவன் எப்பொழுதும் தெரிந்து கொண்டு பின்பு அவர்களை தமக்காக விசேஷமாக்குகிறார். இந்த வாழ்க்கையில் ஒரு வேளை அதை அறியாமலிருக்கலாம், ஆனால் வர இருக்கின்ற வாழ்க்கையில் அதை பற்றித் தெரியும். 103“கர்த்தர் சொல்லுகிறதாவது”, என்பதை அவனுக்கு ஏன் கொடுத்தார்? ஏனெனில் அவன் வார்த்தையில் நிலை நின்றான். அவனுக்கு சரியான செய்தி உண்டாயிருந்தது. ஏனெனில் தேவன் அவனுக்கு அதைக் குறித்து தரிசனம் கொடுத்தார். மற்றவர்களுக்கோ தரிசனம் கொடுக்கப்படவில்லை. பாருங்கள்? அவனுக்கு தரிசனம் உண்டாயிற்று ஏன்? ஏனெனில் அவன் வார்த்தையில் நிலை நின்றான். ஆகவே தான் நாம் அற்புதங்களையும், அடையாளங்களையும் பார்க்கிறோம். மற்றவர்கள் அதை போன்று உருவகிக்கிறார்கள். ஆனால் அவனோ வார்த்தையில் நிலை நின்றான். இப்பொழுது சற்று துரிதமாக செல்வோம். 104எலியா, அவனுடைய சபையானது அவனை புறக்கணித்து விட்டு நவநாகரீகமாக உலகத்திற்கு திரும்பிவிட்டது. எலியா, அவர்களை நன்றாகவே சீவி எடுத்திருப்பான் என்று நான் யூகிக்கிறேன். நீங்கள் அவ்விதமாக யூகிக்கவில்லையா? எலியா அவனுடைய ஆரம்ப ஊழியத்தில் எப்படியிருந்திருப்பான் என்று உங்களுக்கு தெரியுமா? அவன் அங்கு நின்றுக் கொண்டு, “பெண்களே உங்களுடைய முதல் பெண்மணியைப் போன்று இருக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்” என்று கூறியிருப்பான் என்று நினைக்கிறேன். நவநாகரீக பெண்களே, உங்கள் தேசத்தின் முதல் பெண்மணியான செல்வி யேசபேலைப் போன்று உடையுடுத்தி, அவளை போன்று நடிக்கிறீர்கள். பிரசங்கிமார்களே! ஓ, அவன் எவ்வளவாக அவர்களை சீவியெடுத்தான்! அங்கே ஒருவருமில்லாமற் போகும் வரை அவன் எப்பொழுதும் கூக்குரலிட்டு கொண்டேயிருந்தான். 105எலியா தன்னுடைய பாதையின் கடைசி கட்டத்திற்கு வர வேண்டியவனாக இருந்தான். அதன் பின்பு அவனோடு யாரும் ஒத்துழைக்கவில்லை. அங்கிருந்த சபைகள் அவனுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை. அவனுடைய சபையும் அவனை விட்டு உலகத்திற்குச் சென்றுவிட்டார்கள் இன்று இருப்பது போல. அது உண்மை. அவர்கள் திரும்பவும் உலகத்திற்கே சென்றுவிட்டார்கள். மிகச் சிலரே, இங்கொன்றும், அங்கொன்றுமாய் அதன் பேரில் சார்ந்திருந்தார்கள். எலியாவைப் பார்க்க வேண்டுமென்றால் தேசத்தைக் கடந்து வந்து அவனை சந்திக்க வேண்டியதாயிற்று. அவன் மிகவும் பரிதாபமான நிலைக்கு வந்து, தன்னுடைய அறிவின் முடிவிற்கு வர வேண்டியதாயிற்று. அவன் ஆண்டவரிடம், “கர்த்தாவே, நான் சத்தியத்தைக் கூறி உமது வார்த்தையில் நின்றேன். எல்லாரும் என்னை விட்டு சென்றுவிட்டார்கள், இங்கே ஒருவராகிலும் இல்லை. பேசுவதற்கு கூட எனக்கு ஆள் இல்லை, ஆம், உம் வார்த்தையில் நான் நிலை நிற்கிறேன், கர்த்தாவே. இப்பொழுது நான் எங்கிருக்கிறேன் பாரும், ஒருவராகிலும் என்னை ஏற்றுக் கொள்வதில்லை. நான் பட்டிணத்திற்குள் செல்வேனானால் ஜனங்கள், ”இதோ வருகிறான் அந்த நிலையில்லாத கிழவன். அவன் வந்து இப்பொழுது நவநாகரீக வாழ்க்கையைப் பற்றி கூக்குரலிடப் போகிறான் என்று கூறுகிறார்கள்“ என்றான். மேய்ப்பர் அவர்களே, “அவனை சேர்த்துக் கொள்ளாதீர்கள், அந்த மனிதனோடு ஒத்துழைக்காதீர்கள்!” வேண்டாம், ஐயா! மேய்ப்பர் அவர்களே, “அந்த பழைய மதவெறியன் இந்த பட்டிணத்தில் திரும்ப வந்திருக்கிறான். அந்த எலியா என்னும் வழுக்கைத் தலையன் இங்கு திரும்ப வந்திருக்கிறான். அந்த மனிதனிடமாக எந்த கவனத்தையும் திருப்ப வேண்டாம். அவனைப் பாரும், அவன் குருக்களைப் போல நீண்ட அங்கியைத் தரித்திருக்கவில்லை”. (தொப்பி, கழுத்துப்பட்டை, இவைகளின் அமைப்பை பற்றி அறிவீர்கள்) “ஓ, அவன் வித்தியாசமானவன் அவன் ஒரு வினோதமானவன்” என்றார்கள். சில மகத்தான மனிதர்கள், “அந்த மனிதனைக் குறித்துத் தெரியுமா? அவன் ஒரு நரம்புத் தளர்ச்சியுடையவன். பெரும்பாலான காலம் அவன் வனாந்திரத்திலும், காடுகளிலும் வசித்திருந்து பின்பு ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டவனாக நம் மத்தியில் வந்து நமது பெண்களை குற்றம் பிடிக்கிறான். அதை போல் ஒரு காரியம் நான் இதுவரை கண்டதில்லை. அவனோடு ஒத்துழைக்காதீர்கள். உங்களுக்கு அவனோடு ஒரு காரியமும் இல்லை” என்று கூறுவதை என்னால் யூகித்துப் பார்க்க முடிகிறது. 106அவர்களுடைய ஊழியக்காரரின் சங்கம் ஒன்றாகக் கூடி, “அவனோடு ஒன்றும் உங்களுக்கு... அவனை அப்படியே விட்டுவிடுங்கள், அவனே முடிவில் தன்னுடைய முடிவைக் கண்டடைவான். தன்னுடைய சொந்த மூளையை அவன் கூக்குரலிட்டு வெளியே கொட்டட்டும். அவ்வளவுதான், அவனை அவ்விதமே விட்டுவிடுங்கள்” என்று கூறுவதை என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் எலியாவோ; தேவனோடு உண்மையுள்ளவனாக நடந்தான். அவருடைய வார்த்தையில் சரியாக நிலை நின்றான். அங்கே அவர்களுக்கு ஒரு சிறிய கூட்டம் உண்டாயிருந்தது, அவன் அங்கு நின்று கொண்டு அந்த ஜனத்தைப் பார்த்து, “யேசபேல்களே!” என்று அழைத்தான். “ஓ, என்னே துணிகரம்! இனிமேல் அந்த மனிதனின் பேச்சை கேட்பதற்கு நான் போகப் போவதில்லை. இல்லை, ஐயா. அத்தகையக் காரியத்தை செய்ய மாட்டேன்!'' என்று ஜனங்கள் கூறியிருக்கக் கூடும். அது எலியாவை நிறுத்திவிடவில்லை. அவன் எப்பொழுதும் இருந்தது போலவே இருந்தான். அவன் தன்னுடைய சபையை இழந்த பின்பு, ஸ்தாபனங்கள் அவனுக்கு விரோதமாக மாறிவிட்டப் பின்பு, அந்த சமயத்தில் தான் (அவன் பலவீனமான போது, அவன், “நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் 1இரா: 19:14) முடிந்தால் அவர்கள் என்னை சுட்டுக் கொல்லவும் செய்வார்கள்”. ஆ, ஆ, “அவர்கள் என் ஜீவனைப் பிடுங்க வகை தேடிக் கொண்டிருக்கிறார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் கர்த்தாவே, நான் என்ன செய்யக் கூடும்” என்று கூறினான். அவன் பலவீனமான போது, அந்த சமயத்தில் தான் (உண்மையாக நிலைநின்று தன்னுடைய பலவீனம் எல்லாவற்றையும் அறிக்கை செய்து கொண்டிருந்தாலும்) தேவன் அவனைப் பார்த்து, “இங்கு மலையின் மேல் ஏறிவா, நான் உனக்கு ஒரு புதிய செய்தியை கொடுக்கப் போகிறேன். இப்பொழுது நான் உனக்கு புதியதொரு செய்தியை அனுப்பப் போகிறேன். நீ சென்று அந்த காரியங்களை எல்லாம் கடிந்துக் கொள் என்று கூறினேன். நீ செய்த காரியம் சரிதான் என்பதை நிரூபிப்பதற்காக நான் உன்னை திரும்பவும் அனுப்பப் போகிறேன், எலியாவே நீ நல்ல வேலையை செய்தாய். அவர்களுடைய முதல் பெண்மணியை யார் என்றும் அவர்கள் காரியங்களை எவ்வாறு செய்தார்கள் என்பதையும் நன்றாக கூறினாய். நீ ஆகாபையும், அவனுடைய நவநாகரீகக் கொள்கைகளையும், நவநாகரீக சபைகளையும், அவனுடைய பிரசங்கிமார்கள் எதை சார்ந்திருக்கிறார்கள், என்பதையும் கடிந்து கொண்டாய். நீ அவர்களுக்கு முன்பாக ஒரு உதாரணமாகத் திகழ்ந்து எந்தவித உதவியுமின்றி, எந்த ஸ்தாபன உதவியுமின்றி, உன்னை பின்னே தாங்கத் தக்கதாக ஏதுமின்றி அங்கு என் வார்த்தைக்காக நிலைநின்றாய். இப்பொழுது நான் உனக்கு ஒன்றைத் தரப் போகிறேன். நீ ஆகாப் என்னும் அந்த மாய்மாலக்காரனிடத்திற்குப் போய், ”கர்த்தர் சொல்லுகிறதாவது! நான் மறுபடியும் அழைத்தாலன்றி இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும்“ என்று கூறு என்றார். மலையின் மேல் அவனைக் கொண்டுச் சென்று எதையோ ஒன்றைக் காண்பிக்கிறார். 107ஓ, அந்த காலை நேரத்தில் எலியா, சமாரியாவின் வீதியிலே நடந்து வருவதை என்னால் காண முடிகிறது. ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு, நரை மயிரும், சுருக்கம் நிறைந்த முகமும், சூரிய வெளிச்சத்தில் அவனுடைய வழுக்கைத் தலை பளப்பளக்க அவன் தோற்றமானது ஒரு கவர்ச்சியானதல்ல. அவன் சரீரம் முழுமையும் மயிரால் நிறைந்திருந்தது, கையில் தடியைப் பிடித்தவனாக வானத்தை அண்ணாந்துப் பார்த்தவனாக, நடந்து அந்த வீதியில் வந்த அவனுடைய தோற்றம் ஒரு குழப்பமானது என்று நான் நினைக்கிறேன். அவன் ஏறத்தாழ 80 வயது சென்றவனாயிருந்தாலும் 16 வயது வாலிபனைப் போன்று நடந்துக் கொண்டான். இதோ அவன் சமாரியாவை நோக்கி நேராக நடந்து வந்துக் கொண்டிருக்கிறான். சகோதரனே, அவனுடைய பலவீனத்தில் பலமுண்டாக்கப்பட்டவனாயிருந்தான். “என் பலன் உனக்குப் போதும், சபை ஸ்தாபனங்களைக் குறித்து கவலைக் கொள்ளாதே எலியா, உனக்குத் தேவையெல்லாம் என் பலன் மட்டுமே”. 108ஒரு சமயம் ஒரு மகத்தான ஆலயத்திற்கு முன்பாக நான் நின்று கொண்டு ஆண்டவரை நோக்கி, “கர்த்தாவே, அவர்கள் என் அலுவலகத்திற்கு வருவதை நான் வெறுக்கிறேன்” என்று கூறினதை ஞாபகம் கொள்கிறேன். அப்பொழுது அவர், “நானே உன்னுடைய பங்காயிருக்கிறேன்” என்றார். பாருங்கள்? “பலவீனத்தில்... என் பலன் பூரணமாய் விளங்கும். நீ வழியை விடும் போது என்னுடைய பரிபூரண சித்தம் அங்கே செய்யப்படும். (பவுல் அல்லது எலியா, வேறு யாரானாலும்) பாருங்கள்? ”உன் பலவீனத்தில், நான் பலமுள்ளவராயிருப்பேன். நான் தான் உன்னை நிரப்புகிற பலமுள்ளவர் நான் மட்டுமே“. 109ஒரு அரை புன்னகையுடன் அந்த சமாரியாவின் வீதியிலே எலியா ஒருவித பார்வையுடன் வருவதை என்னால் காண முடிகிறது. சகோதரனே, அவன் நேரடியாக ஆகாபின் சமுகத்திற்கு வந்தான். அவன் வாய் குழறவோ, நடுங்கவோ இல்லை. இல்லை, இல்லை, இல்லை! அவனுடைய சிறிய மார்பினுள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கின்ற இருதயமானது துடித்துக் கொண்டிருந்தது. ஆம்! நேரடியாக ஆகாபை நோக்கி, “நான் மறுபடியும் பேசினாலன்றி இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும்” (1இரா: 17:1) என்றான். தன் காலை தரையில் உதைத்து திரும்பி வனாந்திர வழியாகச் சென்றுவிட்டான். அப்பொழுது தேவன், “அது ஒரு நல்ல வேலை எலியாவே. இங்கே ஏறி வா. இப்பொழுது உன்னை போஷிக்கத் தக்கதாக எல்லாக் காகங்களுக்கும் கட்டளையிட்டேன். இங்கே சற்று காலம் அமர்ந்து இரு” என்றார். நாம் பலவீனராயிருக்கும் போது அவர் பலமுள்ளவராயிருக்கிறார். ஆம், ஐயா. மழைப் பெய்யாதிருக்க அவன் வானத்தை அசைத்தான். அவன் தன்னுடைய சபையையும் எல்லாவற்றையும் இழந்த பின்புதான் அவன் பலமுள்ளவனானான். ஆனால் தேவனுடைய வார்த்தையில் நிலைநின்றபடியால் வானத்தை அடைக்கத் தக்கதான வல்லமையுடையவனாயிருந்தான். 110யாக்கோபு தன்னுடைய எல்லா பலத்தையும் இழந்த பின்பு அவன் ராஜகுமாரனாவதற்கு தேவன் வல்லமையைத் தந்தார். பவுல் தன்னுடைய கல்வியையும் வேத சாஸ்திரத்தையும் இழந்த பின்பு புறஜாதிக்கு அவனை ஓர் அப்போஸ்தலனாக தேவன் அனுப்பினார். மோசே தன்னுடைய திறமையை இழந்து பலவீனமான போது தேவன் அவனை பலமுள்ளவனாக்கி அவருடைய ஆவியின் வல்லமையினால் அவனை எகிப்திற்கு அனுப்பினார். அவனுடைய எண்பதாவது வயதில் சுருக்கத் தோலுடையவனாக, கோவேறு கழுதையின் மேல் தன் மனைவியும் பிள்ளையும் அமர்ந்திருக்க, தன் கையில் ஒரு தடியைப் பிடித்துக் கொண்டு எகிப்தை ஜெயிக்கச் சென்றான். ஆம், ஒரு படையைக் கொண்டு முன்பு அவன் ஜெயிக்க விரும்பினது போல் அல்ல. மாறாக, ஒரு படைபல பின்னணி ஏதுமின்றி தேவனுடைய ஆவியின் வல்லமையோடு சென்றான். ஆமென்! நீங்கள் பலவீனராயிருக்கும் போது பலமுள்ளவர்களாயிருக்கின்றீர்கள். 111எலியா பயம் ஏதுமின்றி நடந்துச் சென்று ஆகாபின் சமுகத்தில் நின்று, “தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருக்கிறேன்'' என்றான். ஆகாப், “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான் (1இரா: 18:17). அதற்கு எலியா, “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நானல்ல, நீ தான்” என்றான் (1இரா: 18:18). ஆம், ஐயா. ஓ, சகோதரனே! எலியா ஆகாபைப் பார்த்து, “உன்னுடைய புத்திசாலிகளான ஆசாரியர்களையெல்லாம் இங்கே கூடி வரச் செய்யும். தேவன் யாரென்பதை இன்று பார்த்து விடுவோம்” என்றான். (1இரா: 18:19). அதுதான் காரியம். “கர்மேல் பர்வதத்தின் மேல் ஏறி, பெந்தெகொஸ்தே நாளன்று பதிலளித்த அதே தேவன் திரும்பவும் பதிலளிப்பாராக. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் (எபி: 13:8) என்றும் அவர் அதே தேவன் தானா என்றும் பார்ப்போம். அவன் மலையினின்று ஒரு செய்தியோடு இறங்கி வந்தான். ஆம் அதற்கு முன்பாக அவன் உண்மையிலே பலவீனனாயிருந்தான், அதை அவன் செய்யும் முன்பு எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது. அவன் பலமடையும் முன்பதாக பலவீனமடைய வேண்டியதாயிற்று. 112சுவிசேஷத்தின் எளிமை ஜனங்களைத் தடுமாறச் செய்கிறது. அது எளிமையிலிருக்கின்ற போது ஜனங்கள் அதை ஒரு மகத்தான மூளையறிவின் காரியமாக செய்துவிடுகிறார்கள். ஆனால் தேவன் தாழ்மை, பலவீனம், எளிமை, என்னும் கருவியை எடுத்து கிரியை செய்து தமது கிரியையை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் முன்னோடியாக யோவான் ஸ்நானகனின் செய்தி மிக எளிமையாக இருந்து ஜனங்களின் தலைக்கு மேலாகச் சென்றுவிட்டது. சில நிமிடங்கள் கவனியுங்கள் (நான் உங்களை அதிக நேரம் பிடித்து வைத்திருக்கவில்லை என்று நம்புகிறேன். சுவற்றைச் சுற்றி அநேகர் நின்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்). கவனியுங்கள், மேசியாவின் வருகையைக் குறித்து எல்லாத் தீர்க்கதரிசிகளும் சாட்சிப் பகர்ந்தனர். அவர்களில் ஒருவன், “மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும் துள்ளினது” (சங்: 114:4) என்றான். மற்றொருவன், “இலைகள் தங்கள் கரங்களைக் கொட்டின” என்றான். வேறொருவன், “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்படும்” (ஏசா: 40:4) என்று கூறினான். ஓ, அது அத்தகைய நாள்! 113தீர்க்கதரிசிகள் பள்ளி அதைக் குறித்து மூளையறிவின் எண்ணத்தை கொண்டிருந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஓ, அவர்கள் எல்லாவற்றையும் கல்வியாக்கிவிட்டிருந்தனர்! ஆனால் அது நிகழ்ந்த போதோ, வானாந்திரத்திலிருந்து தன் வாழ்நாளிலே ஒரு நாளும் பள்ளிக் கூடத்தை அறியாத ஒரு பிரசங்கி, பரிதாபமான ஓர் இலக்கணத்தோடு அங்கு வந்தான். அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியனாயிருந்தான், ஆனால் தேவன் அவனை அங்கிருந்து புறம்பே கொண்டு சென்றுவிட்டார். (அதைக் குறித்து கடந்த ஞாயிறு பாடத்தில் நாம் படித்தோம்). அந்த ஸ்தாபனங்களோடு அவனை கலக்கவிடாமல் தேவன் அவனை தனக்காக பயிற்றுவிக்க வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றார். அத்தகையோனே தேவ வார்த்தையில் நிலை நிற்க முடியும். 114ஏறத்தாழ 30 வயது மதிக்கத் தக்கவனாக, கருந்தாடி அவன் முகத்தைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்க, ஒட்டக மயிர் உடையைத் தரித்து, முழங்கால்கள் சேராயிருந்த தண்ணீரில் மூழ்கியிருக்க, “ஏசாயாவினால் உரைக்கப்பட்டவன் நான் தான்'' என்றான். அப்பொழுது சில ஸ்தாபன அமைப்புகள் அங்கே வந்தன. யோவான் ஸ்நானகன் அவர்களைப் பார்த்து, ”நாங்கள் இது, அது என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்த கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்!'' என்றான். (மத்: 3:9) ஏன் அவ்விதம் கூறினான்?, “கர்த்தர் சொல்லுகிறதாவது”, என்பதைக் கொண்டிருந்தான். அவன் செய்தியை உடையவனாயிருந்தான். தேவன் தாம் வரப் போவதை முன் அறிவித்தார். அதை அவர்கள் பெற்றுக் கொள்ளாத காரணம்... அவன் மிகவும் எளிமையில் வந்ததினால், அது அவர்கள் தலைக்கு மேல் சென்றுவிட்டது. 115இயேசு வந்த போது அவர் ஜனங்களைப் பார்த்து, “எதைப் பார்க்க வனாந்திரத்திற்கு போனீர்கள், மெத்தோடிஸ்டுகளிலிருந்து பாப்டிஸ்டுக்கும், பாப்டிஸ்டிலிருந்து பிரஸ்பிடேரியனுக்கும், பிரஸ்பிடேரியனிலிருந்து பெந்தெகொஸ்தேக்கும், பெந்தெகொஸ்தேயிலிருந்து வேறு ஏதாகிலுமொன்றிற்கு மாற்றப்படக் கூடிய மூளை அறிவின் பிரசங்கியையா பார்க்கப் போனீர்கள்? (காற்றினால் அசையும் நாணலையா?) அது யோவானல்லவே!மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள், அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், ”தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே'' என்று கூறினார் (மத்: 11:7-9). 116யோவான் ஸ்நானகன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். கவனியுங்கள், அவர்களெல்லாரைக் காட்டிலும் மிகத் தாழ்மையில் வந்தான். ஆனால் அவன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேன்மையுள்ளவனாயிருந்தான். இந்த யோவான் ஸ்நானகன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் ஒரு உடன்படிக்கையின் தூதனாயிருந்தான். ஆம், நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசிக்கு மேலாகச் சென்றுவிட்டான். ஒரு தீர்க்கதரிசி என்பவன் ஞானதிருஷ்டிக்காரனாயிருந்து வரப் போகும் காரியத்தை பார்க்கிறவனாயிருக்கிறான். யோவான் ஸ்நானகனும் கூட அப்படித்தான். ஆனால் அவன் அதற்கும் மேம்பட்டவனாக உடன்படிக்கையின் தூதனாயிருந்தான். இயேசு, “அதெப்படியெனில்; இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்” (மத்: 11:10) என்று கூறினார். அவன் தான் அந்த உடன்படிக்கையின் தூதன் நிச்சயமாக. அவனுடைய எளிமையான வருகை புத்திசாலிகளை குருடாக்கிவிட்டது. 117இன்னும் சில நிமிடங்களில் நாம் துரிதமாக முடிக்க வேண்டும். இங்கு உங்களுக்கு சொல்வதற்காக சில காரியங்களையும், சில வேத வசனங்களையும், குறிப்புகளையும் வைத்திருக்கிறேன். சிறிதளவு மாவை வைத்திருந்த அந்த விதவையைக் குறித்துக் காரியமென்ன? அவள் தன் பலவீனத்தில் இருந்தாள். ஆகவே ஏறத்தாழ மரணத்திற்குச் சமீபமாய் பட்டினிக் கிடந்தாள். அவளிடத்தில் ஆகாரமில்லை. ஆனால் அவள் ஓர் இடத்திற்கு வர வேண்டியதாயிற்று. அவள் ஒரு மகத்தான விசுவாசி. அவளுடைய கணவன் ஒரு மகத்தான தேவ மனிதன். இப்பொழுதோ அவள் ஒரு விதவை. ஒரு பிள்ளையுடைவளாயிருந்தாள். ஒரு கைபிடி அளவுதான் அவளிடத்தில் ஆகாரம் இருந்தது. அந்த ஆகாரம் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்ததினால் மூன்றரை வருடம் அதினால் அவள் வாழ்ந்தாள். ஆனால் அதை அவள் பெற்றுக் கொள்ளும் முன்பு பலவீனமடைய வேண்டியதாயிருந்தது. 118அந்த காலை நேரத்தில் இரண்டு விறகு பொறுக்கி அதை ஒன்றாக சோர்த்தாள். அந்த இரண்டு விறகும் சிலுவை. பாருங்கள், “நான் இரண்டு விறகு பொறுக்கப் போகிறேன்” என்று கூறினாள். “கை நிறைய விறகு பொறுக்கப் போகிறேன்” என்று அவள் கூறாமல் இரண்டு விறகு என்றாள். அதுதான்... அந்த அடையாளத்தைப் பாருங்கள்? பழைய முறையின்படி... இரண்டு கட்டைகளை குறுக்காக வைத்து அதின் நடுவில் தீ வைப்பார்கள். நான் மலைகளில் கூடாரம் அடித்து இருக்கும் போது, இரவு நேரங்களில் பனியினால் உறைந்து போகாமலிருப்பதற்காக ஒரு கட்டையை எடுத்து அதின் மேல் குறுக்காக இன்னொரு கட்டையை வைத்து தீ வைத்துபின்பு கீழ் முனைகள் மேல் நோக்கி தள்ளிக் கொண்டேயிருப்பேன். அப்பொழுது அது ஒரு சிலுவையின் அடையாளம் போல் எரிந்து கொண்டிருக்கும். 119“என்னிடத்தில் இரண்டு விறகு இருக்கிறது. சிறிது கைபிடியளவுள்ள மாவை ஆயத்தம் செய்து அதை சாப்பிட்டு நானும் என் குமாரனும் மரிக்கப் போகிறோம்” என்றாள். அவள் மிகவும் பலவீனத்திலிருந்தாள். இல்லையா? அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். ஓ, அந்த உஷ்ணமான காலை எப்படியிருந்திருக்கும்? அநேக நாட்களாக அவர்களுக்கு மழையில்லை. ஆகவே அங்கு தண்ணீர் இல்லை, எங்கும் கடன் வாங்க முடியாது. ஜனங்கள் கூக்குரலிடுகிறார்கள், ஜனங்கள் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விதவையும் தன்னுடைய முடிவின் பாதைக்கு வந்துவிட்டாள். அவள் தன் பலவீனத்தில் இருந்து, நான் அதை ஆயத்தம் செய்து நானும் என் குமாரனும் சாப்பிட்டு மரிக்கப் போகிறோம்“ என்றாள். அப்பொழுது எலியா, “ஒரு நிமிஷம்” என்றான். அவள் திரும்பிப் பார்த்தபோது, அங்கு அந்த கதவுக்கு குறுக்காக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிற ஓர் மனிதன் நின்றுக் கொண்டு, “கொஞ்சம் அப்பம் எனக்குக் கொண்டு வா” என்றான். ஓ! “நான் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்திலும், கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டு வா. கர்த்தர் சொல்லுகிறதாவது” என்றான். ஓ, அது காரியம் நிகழ்ந்துவிட்டது. அவள் வைத்திருந்த கொஞ்சத்தை தேவனுக்கென்று ஒப்புவித்தாள். தன் மற்ற நாட்களெல்லாம் அவள் போஷிக்கப்பட அது அவளுக்குப் போதுமானதாயிருந்தது. ஆம், அவள் பலவீனமான பின்பு அவள் பலமுள்ளவளானாள். (இந்த வர்த்தமானம் 1இரா: 17:9-16-வசனங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது - தமிழாக்கியோன்). 120எலிசாவின் நாட்களிலிருந்த இன்னொரு விதவை, ஒரு குடம் எண்ணெய் மட்டும் வைத்திருந்தாள். வேறொன்றும் அவளிடம் இல்லை. கடன் கொடுத்தவன் அவளது இரண்டு குமாரரையும் அடிமையாக்கிக் கொள்ள வந்துவிட்டான். இந்த ஒரு குட எண்ணெய் தவிர வேறு ஒன்றும் அவளுக்கு இல்லை... அவள் தனது முடிவின் பாதையில் வந்துவிட்டாள். எலிசா அவளைப் பார்த்து, “வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல்?” என்றான். அதற்கு அவள், “ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை” என்றாள். அதற்கு அவன், “நீ போய் உன்னுடைய அயல் வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கு” என்றான். கவனியுங்கள். அது நடைபெறுவதற்கு முன்பு ஆயத்தத்தைப் பாருங்கள். ஆயத்தமாகு! தாவீது முசுக்கட்டை செடியின் நுனியில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டது போல்; உள்ளங்கை அத்தனை சிறிய மேகம் எழும்புவதை எலியா பார்த்து, “பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது'' என்றான். (11சாமு: 5:24, 1இரா: 18:41, 44) சில வெறும் பாத்திரங்கள் மட்டும் தேவனுக்குக் கிடைக்குமானால் அது உண்மை. எலிசா அவளைப் பார்த்து, “வெறும் பாத்திரங்களால் வீட்டை நிரப்பு”, என்றான். ஆமென்! தேவன் அதை விரும்புகிறார் பாருங்கள்? தேவன் விரும்புவதெல்லாம் வெறும் பாத்திரங்களே. கவனியுங்கள்! பீப்பாயின் அடிப்பாகத்திற்கு வரும் வரை புத்தியீனமான அனேக உபதேசங்களையும், மார்க்க சம்பந்தமான காரியங்களையும் கொண்டிருந்தோம். ஒரே ஒரு காரியம் தான் உண்டு. அது தேவனிடத்திற்கும் அவர் வார்த்தைக்கும் திரும்புவதேயாகும். அவ்விதம் செய்வீர்களென்றால் வெறும் பாத்திரங்களைப் பிடியுங்கள். எல்லா மெத்தோடிஸ்டு, பெந்தெகொஸ்தே, பாப்திஸ்து, உபதேசங்களையெல்லாம் அவர்களை விட்டு எடுத்து விட்டு அவர்களை வெறும் பாத்திரமாக்கி வீட்டில் வைத்து விடுங்கள். பின்பு எண்ணெயுள்ள பாத்திரத்திலிருந்து அந்த வெறும் பாத்திரங்களுக்குள் ஊற்ற ஆரம்பியுங்கள். அவளும் அவளுடைய பிள்ளைகளையும் பாதுகாக்கும் அளவிற்கு அங்கு எண்ணெய் உண்டாகியிருந்தது. மேலும் அவள் கடனையெல்லாம் தீர்த்துவிட்டாள் ஏன்? தீர்க்கதரிசியின் வார்த்தையைப் பின்பற்றி தன்னிடத்திலிருந்த கொஞ்சத்தை தேவனுக்கு ஒப்புவித்தாள். பின்பு எல்லாம் சரியாக இருந்தது. (இந்த வர்த்தமானம் 11இரா: 4:1-7 வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது - தமிழாக்கியோன்). 121தேவ வார்த்தையை எடுத்து பிரயோகித்து, ஏதோ ஒரு காரியத்தையல்ல தேவனே, வெறும் பாத்திரங்களை பெற்றுக் கொள்ளும் ஒரு தீர்க்கதரிசியை எங்களிடமாக அனுப்பும். தேவனுக்கு மட்டும் வெறும் பாத்திரங்கள் கிடைக்குமானால் தம்முடைய வார்த்தையை எடுத்து அந்நபருக்குள் ஊற்றுவார். “ஓ, நான் கை குலுக்கினபோது அதை பெற்றுக் கொண்டேன், அந்நிய பாஷைப் பேசின போது அதைப் பெற்றுக் கொண்டேன். நடனமாடினபோது அதை பெற்றுக் கொண்டேன்'' என்பதையெல்லாவற்றையும் மறந்து விடுங்கள், மறந்து விடுங்கள். அது வரும் வரை அங்கு அமர்ந்திருங்கள். அப்பொழுது பாத்திரம் நிரம்பிவிடும். அதுதான் காரியம். அப்படித்தான் காரியம் நிகழ்த்த வேண்டும். ஆம், ஐயா, “அதன் எளிமையின் அடிப்படையில்!”அந்த பாத்திரங்கள் நிரப்பப்பட்டன. அதிலே எவ்வளவாக நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாம். 122இயேசுவின் சீஷர்கள் ஒரு நாள் சூழ்நிலையின் நிமித்தம் பதைபதைத்தார்கள். அங்கு 5000 ஜனங்கள் இருந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “ஜனங்கள் பட்டினியாயிருந்து மயக்கமுறுகிறார்கள்” என்றனர். ஓ, “5000 பேர் பட்டினியாயிருக்கிறார்கள்” என்பதின் பேரில் ஒரு மணி நேரம் பேசக்கூடும் 1000 கோடி பேர் இன்று பட்டினியாயிருக்கிறார்கள். சீஷர்கள், “ஜனங்களை அனுப்பிவிட வேண்டும்” என்றார்கள். இயேசு அதற்கு, “அவர்கள் போக வேண்டுவதில்லை, நீங்களே அவர்களுக்கு போஜனங் கொடுங்கள்” என்றார். ஓ! சீஷர்கள் தங்களால் இயன்றவரை ஏதாகிலும் திரட்ட முயன்றார்கள். அவர்கள் இயேசுவிடம், “இந்த முழு கூட்டத்தினிடையே சென்று பார்த்தோம். ஒரு சிறு நாணயம் கூட கிடைக்கவில்லை, ஆகவே, இந்த கூட்டத்தை நாம் நடத்த முடியாது'' என்றார்கள். ”ஆகவே இங்கு நம் மத்தியில் இருப்பதெல்லாம் ஒரு சிறுவன் வைத்துள்ள 5 அப்பமும், 2 மீன் மட்டுமே“ என்றார்கள். அந்த சிறுவன் தாவீதைப் போன்று வனாந்திரத்தினின்று வந்தவன். ”அவ்வளவுதான் நம்மிடத்தில் உள்ளது; நம்முடைய முடியாமையின் கட்டத்திற்கு வந்துவிட்டோம்“. யோவானே, ”பேதுருவும், அதுதான் நம்மால் முடிந்தது, நம்முடைய முயற்சியின் முடிவு கட்டத்திற்கு வந்துவிட்டோம்“ என்றார்கள். 123நல்லது, அப். 2:38 என்ற சிறிய வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு கீழ்ப்படிவோம். அதுதான் நமது தேவையெல்லாம். வேதப் பள்ளிக்குச் சென்று இதை அதை நீங்கள் கற்க வேண்டிய அவசியமில்லை. இதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது எண்ணெயால் நிரப்பப்படுவீர்கள்” பாருங்கள்? உங்களை வெறுமையாக்கி அந்த ஒன்றிற்காக ஆயத்தமாகுங்கள். அதுதான் உங்கள் தேவையெல்லாம். ஒரு துளியை விழ விட்டு பின்பு அது நிறைவதை கவனியுங்கள். 124ஒவ்வொரு பாத்திரத்திலும் விடத் தக்கதான அளவு எண்ணெய் அந்த பாத்திரத்தில் இல்லாமலிருந்திருக்கலாம். ஒரு வேளை தன்னுடைய விரலில் தொட்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் இவ்விதமாக சொட்டு சொட்டாக விட்டுபின் திரும்பி பார்த்தபோது எல்லாம் நிறைந்திருந்தது. ஒரு துளியை விழவிடுவதுதான் அவளுடைய தேவையாயிருந்தது. ஏனெனில் அது ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய்யாயிருந்தது. வேதப் பள்ளியின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். தேவ வார்த்தையை எடுத்து அங்கே விழவிடுங்கள். பின்பு அது எவ்விதம் நிரம்புகிறது என்பதை பாருங்கள். நல்லது, “என்னவிதமான துளியை நாம் எடுத்துக் கொள்ளலாம்? சங்கீதப் புத்தகத்தினின்று எடுத்துக் கொள்ளலாமா?” எனலாம். 125நான் என்ன கூறினேனோ அதையே எடுத்துக் கொள்ளுங்கள். “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது துளியால் (Drop) நிரப்பப்படுவீர்கள்” வெறுமனே அதை விழவிடுங்கள். பின்பு அந்த துளியினின்று நீங்கள் நிரப்பப்படுவீர்கள். அத்தகையத் துளியைத்தான் பேதுரு பெந்தெகொஸ்தே நாளன்று உபயோகித்தான். பவுல், மற்றும் எல்லா சீஷர்களும் உபயோகித்தார்கள். மற்ற காரியங்கள் அதனுடன் சேர்க்கப்பட்டன. அந்த ஒருத் துளியை எடுத்துக் கொண்டு அதை பின்பற்றுங்கள். பின்பு மற்றவைகளெல்லாம் சரியாக இருக்கும். பெலவீனமாகி வெறுமையாகுங்கள்! உங்களை வெறுமையாக்குங்கள். பின்பு அதினின்று அது சொட்டு சொட்டாக விழுந்துக் கொண்டிருக்கும். தேவன் மற்ற சொட்டுகளை உங்களில் விழச் செய்வார். உங்கள் முழங்காலை முடக்கி அதை முழு இருதயத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்... உங்கள் இருதயத்தில் அதை விழ செய்து, “தேவனே, நான் என் முழு இருதயத்தாலும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். தேவன் மற்ற துளிகளை உங்களில் விழ செய்து விடுவார், ”அது நிரம்பிவிடும். நீங்கள் மறுபடியுமாக பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவீர்கள்“. 126இப்பொழுது கவனியுங்கள். அவர்களிடத்தில் 5 அப்பமும், 2 மீனும் இருந்தன. இதை வைத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஆகவே அவர்கள் வந்து, “இவ்வளவுதான் எங்களால் சேகரிக்க முடிந்தது. எங்கள் முயற்சியின் முடிவு கட்டத்திலிருக்கிறோம். இதைத் தவிர வேறு ஒரு துண்டு அப்பத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. யாரிடமும் இல்லை. இந்த சிறுபையன் ஒருவேளை பள்ளிக்கூடம் போகாமல் மீன் பிடிக்கச் சென்றிருக்கக் கூடும். அந்த ஓடையின் பக்கத்தில் அவனை நாங்கள் கண்டு பிடித்தோம். அவன் இங்கு பிரசங்கம் கேட்க வந்திருக்கிறான். இதோ அவனிடத்தில் 5 அப்பம் உண்டு” என்றார்கள். அந்த சிறுவனுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஆம் ஐயா, “நமக்கு உள்ள ஜீவன் எல்லாம் இந்த சிறிய துளிதான்” என்றனர். அதற்கு இயேசு, “அது போதுமானது அதை இங்கு கொண்டு வாருங்கள்” என்றார். “இங்கு கொண்டு வாருங்கள், நான் அதைப் பெற்றுக் கொள்ளட்டும், அந்த சிறு துளியை நான் பெற்றுக் கொள்ளட்டும். மற்றதைக் குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன். இப்பொழுது, நான் உங்களிடத்தில் இந்த துளியினின்று கொடுப்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டேயிருங்கள்''என்றார். 127நீங்கள் ஒவ்வொருவரும் இந்த காலை நேரத்திலே அப்: 2:38 என்னும் துளியை உங்கள் இருதயத்தில் விழச் செய்யுங்கள், பின்பு கவனியுங்கள். அவர் ஜீவ அப்பத்தை உங்களுக்கு பிட்டு கொடுக்க ஆரம்பிப்பார். நீங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு பின்பு பரிசுத்த ஆவியானவர் அங்கு வருகிறாரா இல்லையா என்று கவனியுங்கள். அவர் தொடர்ந்து இதன் மேலும், அதன் மேலும், அங்கும், இங்குமாக துளித்துளியாக விழுந்து பின்பு அங்கு பரிசுத்த ஆவியின் நிறைவு உண்டாகும்! உண்மை. நீங்கள் வேத பள்ளிக்கு செல்ல அவசியமில்லை. நீங்கள் சாதுரியவான்களாக இருக்க அவசியமில்லை. நீங்கள் ஒன்றுமில்லை என்ற காரியத்தை உணர்ந்து கொள்வதே காரியமாகும். தேவன் உங்களை சிறைபிடிக்க விடுங்கள். மற்றவைகளையெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். சரி, பின்பு சத்தமானது, “அவைகளை இங்கு கொண்டு வாருங்கள்'' என்றது. ஒரு கூட்ட வெறும் பாத்திரங்களை அவரிடத்தில் கொண்டு வருவதைத்தான் இக்காலையில் தேவன் விரும்புகிறார். மற்றக் காரியங்களை அவர் பார்த்துக் கொள்வார். ஆம், ஐயா. 128குருடனான பர்த்திமேயு கிழிந்த கந்த துணியைப் போர்த்துக் கொண்டு வாசலருகே உட்கார்ந்திருந்தான். ஓ அது அவனுடைய பலவீனமான நேரம், அந்நேரத்தில், “அவனை இங்கு கொண்டு வாருங்கள்” என்ற சத்தத்தை அவன் கேட்டபொழுது... அது உண்மை. அது போன்று உங்களுடைய பலவீனமான நேரத்தில்... கல்லறையின் அருகே மரியாள், அவளுடைய மகன் இயேசு கொலை செய்யப்பட்டுவிட்டார். அவளுடைய நம்பிக்கையெல்லாம் அற்றுபோய் இருதயம் நொறுங்கினவளாக அவரை சுகந்தவர்க்கமிடும்படி அங்கே வந்திருந்தாள். ஆனால் அங்கு அவருடைய சரீரத்தையும் கூடக் காண முடியவில்லை. அப்பொழுது ஒரு சத்தமானது, “ஸ்திரீயே ஏன் அழுகிறாய்” (யோ: 20:15) என்றது. அதற்கு அவள், “என் ஆண்டவரை அவர்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்...” பரிதாபமான சிறிய பெண்மணி அவள். பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் நிழலிட்டு கொண்டு வரப்பட்ட பிள்ளை அது என்று அவள் அறிந்த பின்பு, அவர் தன்மை மேசியா என்று உரிமைக் கொண்டாடினப் பின்பு அந்த குழந்தையானது அவமானப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சிலுவையில் ஆணிகள் கடாவப்பட்டு தொங்கவிடப்பட்டார். அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார். அவருடைய கிரியைகளையெல்லாம் அவள் பார்த்து அறிந்திருந்தாள். அவளுடைய பலவீனமான நேரத்திலும் கூட அவருடைய கிரியைகளை அவள் பார்த்து அறிந்திருந்தாள். 129இயேசுவானவர் அங்கே தீமைக்கு எதிர்த்து நின்றார். ஸ்தாபனங்களுக்கும், பரிசேயருக்கும் எதிர்த்து நின்று பலவீனமாகி, மரணத்திற்கு தம்மை ஒப்புக் கொடுத்து சிலுவையில் ஒரு பாவியைப் போன்று மரித்து நம்முடைய பாவங்களைச் சுமந்தார். சங்கீதங்களிலும், ஒவ்வொரு தீர்க்கதரிசிகளும் விசுவாசித்து வசனித்த வார்த்தைகளான பல நூறு வருடங்களுக்கு முன்பு அதே வார்த்தைகளை அவர் கல்வாரியில் கூறினபோதும் அவர்கள் அதை காணத் தவறினர். அவர்களுடைய மகத்தான மார்க்க அமைப்பு... என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மற்றவர்களை இரட்சித்தான் தன்னை இரட்சிக்க முடியவில்லை“ என்று சங்கீதம்: 22-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகள் கூறின எல்லாம் அங்கு நிறைவேறினது! அங்கு இயேசு எல்லா வார்த்தைகளையும் உடையவராக தேவனுக்கு தம்மை ஒப்புக் கொடுத்தவராக மரித்துக் கொண்டிருந்தார். இம்மானுவேல் மிகவும் பலவீனமாக தன்னை மரணத்திலூற்றி நரகத்திற்கு தம் ஆத்துமாவில் சென்றார். பலவீனம், ஆனால் முழுமையான ஒப்புக் கொடுத்தலினால்... ஈஸ்டர் காலையிலே மிக கீழ்த்தரமான நரகத்தினின்று சுழன்று கொண்டு வெளி வந்தார். அவர் மிகவும் உயர்ந்தவராயினும் தாழ்மையானவராக மாறினார். அவர் கீழ்த்தரமான ஜனங்களிடத்திற்கு வந்து கீழ்த்தரமான பட்டிணத்திற்கு சென்றார். அங்கே மிகவும் சிறிய மனிதன் (சகேயு - தமிழாக்கியோன்) அவரை மேலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தான். அங்கிருந்து மரணத்திற்கும், மரணத்தினின்று கல்லறைக்கும், பின் கல்லறையினின்று பாதாளத்திற்கும், எவ்வளவு தாழ்வாகப் போகக் கூடுமோ, அவ்வளவு தாழ இறங்கிச் சென்றார். ஆனால் பின்பு நடந்ததென்ன? தேவன் அவரை உயிர்பிக்க ஆரம்பித்தார். பரதேசினின்று கல்லறைக்கும் பின்பு கல்லறையினின்று மகிமைக்கும் அழைத்துச் சென்று, பரலோகத்தையும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய சிங்காசனத்தை வானங்களுக்கு மேலாக உயர்த்தினார். 130இவைகளையெல்லாம் அறியாதவளாக அந்த தாய் அங்கு இருதயம் நொறுங்குண்டவளாக நின்றுகொண்டு, “என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்” என்றாள். அவள் பெற்ற மிக பெலவீனமான நேரம் அது. அவளுடைய ஆண்டவர் சென்றுவிட்டார். அவர்கள் அவரை சிலுவையில் அறிந்து ஜனங்களுக்கு முன்பாக நிர்வாணமாக்கி அவமானத்தால் நிறைந்தவராக பக்கத்தில் ஈட்டியினால் குத்தப்பட்டு இரத்தம் பீறிட்டு அடிக்க கதறினவாறு தொங்கவிட்டார்கள். அப்பொழுது பூமி அதிர்ந்தது. முழு பரலோகமும் அவர் மரித்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டது. அவரை சிலுவையினின்று இறக்கினார்கள். அவர் குளிர்ச்சியாகவும், விரைத்தவராகவும், இருந்தார். அவரை கல்லறையில் வைத்தார்கள். மரியாள், யோசித்தாள், “சுகந்தவர்க்கமிட்டு என்னுடைய பிரியமான குழந்தைக்கு என்னுடைய கடைசி மரியாதையைத் தெரியப்படுத்துவேன். ஆனால் இப்பொழுதோ அவர்கள் அவரை எடுத்துச் சென்றுவிட்டார்களே” இவ்விதமாக அவள் யோசித்தும் அழுது கொண்டும், கதறிக் கொண்டும், நின்றுக் கொண்டிருந்தாள். அந்த சிறிய தாயார், ஒரு பலவீனமான நேரம்! 131“ஸ்திரீயே ஏன் அழுகிறாய்” என்ற சத்தம் அவள் பின்புறத்திலிருந்து வந்தது. அவள் அவரைத் தோட்டக்காரரென்று எண்ணி, திரும்பாமலேயே “என் ஆண்டவரை அவர்கள் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்” என்றாள். அவள் மிகவும் பலவீனமாயிருந்தாள். அவள், நான் இங்கு மூன்று நாள் இரவும் பகலுமாக இருந்துக் கொண்டிருக்கிறேன். சிலுவையிலறைந்த சம்பவத்தை நான் பார்த்தேன். என்னுடைய பிரியமானவர் மரிக்கிறதை நான் பார்த்தேன். அவர் தேவனுடைய குமாரன் என்று நன்றிவேன். (இன்னுமாக அவள் வேறு பக்கமாக பார்த்து பேசிக் கொண்டிருக்கிறாள். அவர் அவள் பின்பாகத்தில் நின்றுக் கொண்டிருந்தார்). அவரை அவர்கள் எடுத்து சிலுவையிலறைந்தார்கள் கல்லறையினின்று மரித்தோரை அவர் எழுப்பினதையும், அற்புதத்திற்கு மேல் அற்புதங்களை அவர் செய்ய நான் கண்டிருக்கிறேன். கர்த்தர் என் உள்ளத்தை அறிவார்... நான் ஒன்றும் அறியாதவளாக இருந்தேன்... மனுஷனை அறியாதிருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் அந்த குழந்தையை எனக்குத் தந்தார். அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியும்! அங்கே அவர் அவமானத்தினால் நிறைந்து, அவர் ஆடைகள் உரியப்பட்டவராக தொங்கவிடப்பட்டு பயங்கரமான மரணத்திற்குள்ளானதை நான் கண்டேன். நான் அவரை நேசிக்கிறேன். அவருக்கு என்ன செய்யப்பட்டது என்பதை குறித்து ஓ, எனக்கு கவலையில்லை, இருந்தாலும் அவரை புதைக்க விரும்புகிறேன். அவருக்கு சரியான வித புதைப்பைக் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதோ அவரை அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள். என்னுடைய இருதயம் நொறுங்கியிருக்கிறது. நான் இத்தகைய நிலைமையில் நின்றுக் கொண்டிருக்கிறேன். என் ஆண்டவரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லையே! என்றாள். அப்பொழுது இயேசு, “மரியாளே'' என்றார். அதன் பின்பு அவள் பலமுள்ளவளானாள் ஆமென்! ”கலிலேயாவில் சீஷர்களை சந்திப்பேன் என்று போய் சொல்லு“ என்றார். அவர்களுடைய பலவீனத்தில் பலமுள்ளவர்களாக்கப்பட்டார்கள். நீங்கள் பலவீனமாயிருக்கும் போதுதான் நீங்கள் பலமுள்ளவர்களாக்கப்படுகிறீர்கள். 132பேதுரு அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தொழில் அதுவாயிருந்தது. அவனுடைய தொழிலை நான் விரும்புகிறேன். தான் கிறிஸ்துவை மறுதலித்ததை அறிந்தவனாக மிகவும் அதைரியப்பட்டவனாக அவன் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். ஓ! அப்பொழுது அங்கு அந்த தீர்க்கதரிசி நின்று கொண்டு, “பேதுருவே நீ என்னை நேசிக்கிறாயா”, என்றார். அதற்கு அவன், “ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர், உமக்காக மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். அதற்கு அவர், “இந்த இராத்திரியிலே, சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்”, என்றார் (மத்: 26:34). அவன் அங்கு நின்று கொண்டு, “அந்த மனுஷனை நான் அறியேன், அந்த பெந்தெகொஸ்தேயினரைக் குறித்து ஒன்றும் எனக்குத் தெரியாது” என்றான். அது நிறைவேறுவதை அவன் கண்டான். 133(இப்பொழுது பிரசங்கத்தை முடிக்கும் நேரமல்ல, என் கடிகாரம் பெற்றுக் கொண்ட ஒரு மயக்கமாயிருக்கிறது). நான் பிரசங்கத்தை முடிக்க வேண்டியவனாக இருக்கிறேன். (ஆனால் இப்பொழுது அதை முடிக்கிறதாயில்லை. ஏனெனில் இக்காரியத்தை நான் பேசி முடிக்க வேண்டும்). நான் அவரை மறுதலித்தேன். பிலாத்துவின் சமூகத்தில் அவரை நான் மறுதலித்தேன். அந்த சிறிய பெண் என்னிடத்தில் வந்து, “நீயும் இயேசுவோடு கூட இருந்தாயல்லவா” (மத்: 26:7) என்றபொழுது நான் அவரை சபித்தேன்! ஓ, அவன் மிகவும் பயங்கரமான நிலைமையிலிருந்தான். அவன் மறுதலிக்கும்போது, இயேசு திரும்பி அவனைப் பார்த்ததை அவன் கண்டிருந்தான். (லூக்: 22:61) அவன் மிகவும் அதைரியப்பட்டவனாக வெளியே சென்று தனக்குள்ளாக, “இனிமேலும் நான் எதற்காக ஜீவிக்க வேண்டும்?” என்று பேசிக் கொண்டான். அது மட்டுமின்றி அவன், “நான் திரும்பவும் மீன் பிடிக்க சென்றுவிடவா? ஏனெனில் இனிமேல் என்னால் பிரசங்கிக்க இயலாது. ஆகவே திரும்பிச் சென்று மீன் பிடிக்க ஆரம்பிக்கலாம்” என்று யோசித்தான். ஆகவே தன்னுடைய வலையை கடலில் போட்டு இரவு முழுவதும் மீன் பிடிக்கச் சென்றான். ஆனால் ஒரு மீனையும் பிடிக்கவில்லை. அவன் அங்கு பலவீனமான பகுதிக்கு வந்து அதைரியப்பட்டு தன் திறமையின் முடிவிற்கு வந்துவிட்டான். 134பிரதான ஆசாரியனுடைய மகனுடைய காதுகளை வெட்டுமளவிற்கு அவன் தன்னை மகத்தானவன் என்று நினைத்திருந்தான். தான் ஏதோ கற்றது போல் தன்னை யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் எதும் கற்கவில்லை. அவைகள் எல்லாவற்றையும் அவன் மறக்க வேண்டியதாயிற்று. அவன் அங்கே நின்றுக்கொண்டு, “நல்லது எனக்கு ஒன்று தெரியும், அது மீன் பிடிப்பது, ஆகவே மீன்பிடித்து என் வாழ்க்கையை நடத்த முடியும்” என்று நினைத்தவனாக தன் வலையை போட்டான். ஆனால் முழு இரவும் ஒன்றையும் பிடிக்கவில்லை. என்னே ஓர் ஏமாற்றம்! ஒவ்வொரு தடவையும் அவன் இழுத்த போதெல்லாம் காலியான வலை. மிகவும் ஏமாற்றம் அடைந்தான். தன்னுடைய மிக பலவீன பகுதிக்கு அவன் வந்து, “இந்த படகினின்று குதித்து விட வேண்டும் போல் எண்ணம் எனக்கு உண்டாகிறது, நான் எதற்கும் தகுதியற்றவன், எந்த விதத்திலும்” என்று யோசித்தான். அந்நேரத்தில், “பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா'' என்ற சத்தம் உண்டானது. (யோவா: 21:5). பேதுரு கரையை நோக்கிப் பார்த்தான். அங்கே ஒரு மனிதர் நின்றுக் கொண்டிருந்தார். பேதுரு, “இரவெல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. நான் ஒரு மீன்பிடிப்பவன் என்று என்னை நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றான். “சீமோனோ அது நீ தானா?” “ஆம், இரவெல்லாம் கஷ்டப்பட்டேன், ஒன்றையும் பிடிக்கவில்லை, ஓ, இந்த பகுதியில் மீன்கள் இல்லை போலிருக்கிறது” என்றான். அதற்கு அவர் “நீங்கள் படவுக்கு வலது புறமாக வலையைப் போடுங்கள்” என்றார். “நாங்கள் அதை ஏற்கனவே செய்துவிட்டோம்... என்ன? வலது பக்கமா? அதை நாங்கள் செய்தோமே! “வலது பக்கமாக வலையைப் போடுங்கள்” அவன் அவ்விதமாக செய்து வலையை இழுத்தான். அப்பொழுது அவன் பலமுள்ளவனானான். ஓ, அவன் தன்னுடைய பழைய மீன் பிடிக்கும் ஆடையை எடுத்துக் கட்டிக் கொண்டு, “சகோதரரே, அவர்தான் அது! என்று கூறியவாறு மற்றவர்களைக் காட்டிலும் துரிதமாக நீந்தி கரைக்கு வந்தான். மற்றவர்களோ தண்டு வலித்து எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாக கரை வந்து சேர்ந்தார்கள். அவன் பலமுள்ளவனாயிருந்த போது அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் அவன் பலவீனமானபோது அப்பொழுதுதான் அவன் பலமுள்ளவனானான். ஆம் ஐயா. 135ஓ, வெறுமையான பாத்திரங்களை எடுத்து அவர்களைக் கொண்டு இந்த உலகத்தை அசைப்பது தான் தேவனுடைய வழியாயிருக்கிறது. (இன்னும் கொஞ்சம் பேசி பின்பு நாம் முடித்துவிடலாம்). பெந்தெகொஸ்தே நாளன்று அவர் என்ன செய்தார்? அவர்கள் தங்களை வெறுமையாக்குவதற்கு 10 நாட்கள் பிடித்தன. ஆனால் அவர்கள் அங்கு தங்களுடைய பாத்திரங்களை திருப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களை நிரப்பினார். அவ்வளவுதான்! அவர்கள் உலகத்தைக் கலக்கினார்கள். இன்றுள்ள தேவை அதுதான். நம்மை வெறுமையாக்குவதே நமக்குத் தேவையாயிருக்கிறது. அப்பொழுது தான் தேவன் நம்மை நிரப்ப முடியும். இங்கு அநேக காரியங்களை நான் பேசாமல் விட வேண்டியதாயிருக்கிறது. நாம் ஏற்கனவே நிரம்பியிருக்கிறோம் என்றால் அத்தகையோரை தேவன் நிரப்ப முடியாது. வேத சாஸ்திர பயிற்சியினால் நீங்கள் நிறைந்திருப்பீர்களென்றால் தேவன் உங்களை உபயோகிக்க முடியாது. தேவன் நிரப்பத் தக்கதாக அவருக்கு வெறும் பாத்திரங்களே தேவையாயிருக்கிறது. 136எலிசா, “நீ போய் சில பாத்திரங்களை வாங்கி பின் நிறைய எண்ணெய்யை கடன் வாங்கிவா, அது எவ்வளவுக்கு விற்பனையாகும் என்று பார்த்த பின்பு இன்னும் சிறிது எண்ணெய்யை கடன் வாங்கி வா, அதன் பின்பு அயலகத்தாருக்கு கடனை செலுத்திவிடலாம் என்று கூறாமல் வெறும் பாத்திரங்களை மட்டும் வாங்கி வா” என்று கூறினான். அதுதான் தேவையாயிருந்தது. பெந்தெகொஸ்தே தினத்திலும் அவ்வாறே இருந்தது. தேவன் நிரப்பத் தக்கதாக அவர்களிடம் காலிப் பாத்திரங்கள் உண்டாயிருந்தன. சகோதரனே, இந்தக் காலமும் அந்த தேவையை தேடுகிறதாயிருக்கிறது. அவ்விதம் இல்லையென்றால் நாம் அழிந்து போவோம். நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன். கவனியுங்கள், நாம் அவ்விதம் தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அழிந்துவிடுவோம். ஆம், ஐயா. 137மார்க்க சம்பந்தமான பெரிய அமைப்புகளையும், ஆவிக்குரிய உதைப்பைப் பெற்று கரிமில வாயு நிறைந்த பெரிய சபைகளை பெற்றிருக்கிறோம். (சகோ. காலின்ஸ்சும், சகோ. ஹிக்கர் சன்னும், இங்கேதான் எங்கோ இருக்கிறார்கள்) இயந்திர கைப்பிடி தண்டு பழுதடைந்து இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஏதோ ஒன்று தவறாயிருக்கிறது. தவறான எரி திரவத்தை உபயோகிக்கிறார்கள். ஆகவே அது முழுவதும் கரிமில வாயுத் தூளினால் நிறைந்திருக்கிறது. பரிசுத்த ஆவிக்குப் பதிலாக அவர்கள் வேதபள்ளியின் அனுபவத்தை உபயோகிக்கிறார்கள். நம்முடைய மகத்தான மனிதர்கள் தோல்வியுற்றார்கள். நம் தேசத்தின் எழுப்புதல், சுகமாக்கும் கூட்டங்கள் எல்லாம் தோல்வியுற்றன. அவ்விதமாக அது தோல்வியுற்றன என்பதை நாமறிவோம். நம்முடைய மேன்மை பொருந்திய சுவிசேஷகர் சகோ. பில்லி கிரகாமை பாருங்கள். அவர் தேசத்தை எத்தனைத் தடவைக் கடந்து சுவிசேஷத்தை அறிவித்தார். அதினால் என்ன நன்மை கிடைத்தது? சகோ. ஓரல் ராபர்ட்ஸ் அவர்களின் சுகமாக்கும் கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றது. ஆனால் நிலைமை எப்படியுள்ளது? எல்லா நேரமும் அது மோசமாகிக் கொண்டு தான் செல்கின்றது. ஏன் அவ்விதமாகியது? பலவிதமான ஸ்தாபனங்களாகிய பாப்திஸ்து, தேவ கூட்டு சபை, எல்லாம் ஒன்றாக கூட்டுச் சேர்ந்து ஒரு மார்க்க சம்பந்தமான மகத்தான அமைப்பை உருவாக்கிவிட்டார்கள். ஆகவே, தேவன் அதில் நிறைய கரிமில வாயுவின் தூள்களை உங்களுக்கு நிரப்பியிருக்கிறார். இப்பொழுது அவள் முக்கி, முக்கி, அடைத்து, அடைத்து, இங்குமங்குமாக ஓடுகிறாள். அவள் முடிந்துவிட்டாள். அதிலிருந்த எரி திரவம் தீர்ந்துவிட்டது. நீங்கள் அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றுகிறீர்கள். எல்லாம் போய்விட்டது (ஆம், ஐயா). இரண்டு பக்க சக்கரங்களும் தட்டையாகிவிட்டன. மார்க்கச் சம்பந்தமான அமைப்பு நின்றுவிட்டது. நாம் மிகவும் கேவலமான நிலையில் இருக்கிறோம். 138சகோதரனே, நரகத்தின் மேலிருந்த மூடியானது நீக்கப்பட்டுவிட்டது. அது உண்மை. எல்லா பக்கத்திலிருந்தும் பிசாசின் வல்லமை ஓடைகளாக கொட்டப்படுகின்றது. அது தேசங்களை ஜெயித்துவிட்டது. நம்முடைய அரசியல் அழுகி போகும் அளவிற்கு அதை ஜெயித்துவிட்டது. நம்முடைய சபைகள், ஸ்தாபனங்கள் என்ற ஒன்றுமில்லாத அமைப்பாக மாறும் அளவிற்கு ஜெயிக்கப்பட்டுவிட்டது. “நீர் கிறிஸ்தவனா?” என்று கேட்டால், “நான் ஒரு மெத்தோடிஸ்டு'', என்கிறான். “நீங்கள் கிறிஸ்தவரா?” என்று கேட்டால் “நாங்கள் பெந்தெகொஸ்தேயினர்” என்று கூறுகிறார்கள். நான் அன்று ஒரு நாள் கூறினேன். இந்த அமைப்புகள் ஒரு பன்றி, ஒரு குதிரை மற்றும் அப்படிப் போல அமைந்திருக்கின்றன. அத்தகைய அழைப்புகளோடு நமக்கு ஒன்றுமில்லை. நீங்கள் மனந்திரும்பி பரிசுத்த ஆவியினால் நிறையப்படும் வரை நீங்கள் கிறிஸ்தவர்களல்ல. ஆவியானவருக்கு முற்றிலும் ஒப்புக் கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அவ்விதம் ஆவியானவருக்கு ஒப்புக் கொடுக்கவில்லையென்றால் நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களல்ல. பரிசுத்த ஆவியானவர் உங்களில் இல்லை. நீங்கள் ஒருவேளை அந்நிய பாஷை பேசி, நடுக்கமுற்று குதித்து, ஓடி பலவிதமான காரியங்களையெல்லாம் செய்யலாம்... 139பவுல், “நான் விசுவாசத்தினால் மலைகளை பெயர்க்கக் கூடும், வியாதிகளை சொஸ்தமாக்க முடியும், வேதாகமத்தின் எல்லா இரகசியங்களையும் அறியக் கூடும். வேத பள்ளிக்குச் சென்று எல்லாவிதமான காரியங்களையும் கற்க முடியும். இருந்தாலும், ”நான் ஒன்றுமில்லையென்றான்“, அல்லேலூயா! பாத்திரத்தின் மேலுள்ள மூடியை எடுப்பதைக் குறித்து பேசுங்கள்! கிறிஸ்தவம் என்ற பெயரால் பிசாசின் வல்லமை சுற்றி வந்து மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்துக் கொண்டு வருகிறான். வேதாகமத்தை விட்டு வேத பள்ளிகளின் உபதேசங்களை போதித்துக் கொண்டிருக்கிறான். மெத்தோடிஸ்டு, பாப்திஸ்து, பெந்தெகொஸ்தே என்னும் பிரசங்கிகளின் பெயரால் நம்முடைய பெண்களை ஆடை அவிழ்த்திருக்கும் இந்த லேகியோன் பிசாசை கட்டுப்படுத்த யார் வல்லமை, ஞானம், பெலம், பொருந்தியவராயிருக்கிறார்கள்? பெண்கள் தங்கள் முகங்களை யேசபேலைப் போன்று வர்ணம்தீட்டி, முடிகளைக் கத்தரித்து, ஆணைப் போன்று உடை உடுத்துகிறார்கள். நம்முடைய பிரசங்கிகள் அதைக் குறித்த பேசும் அளவிற்கு பலமில்லை. பிசாசினால் பீடிக்கப்படுதல்! லேகியோன் தான் அம்மனிதனின் ஆடைகளை கிழித்து விட்டிருந்தான். இந்த கர்ஜிக்கும் பிசாசு யார்? 140யார் பலமுள்ளவராயிருக்கிறார்கள்? அற்புதங்கள் அடையாளங்களின் காலம் கடந்துவிட்டது, பரிசுத்த ஆவி நமக்குத் தேவையில்லை என்று அலறி கல்லரைகளாகிவிட்ட ஸ்தாபனங்களினூடாக மேலும் கீழும் நடந்துக் கொண்டிருக்கின்ற எவர் அவனை ஜெயிக்க முடியும்? யார் இந்த பிசாசைக் கட்டுப்படுத்த முடியும்? தேவன்! ஸ்தாபனத்தின் உதவியால் அதை நாம் செய்ய முடியாது. மார்க்க சம்பந்தமான வல்லமையினால் நாம் அதை செய்ய முடியாது. ஆனால் ஒரு சமயம் ஒரு சத்தமானது (Voice) அதை செய்தது. ஆமென், அந்த சத்தமானது பிசாசுகளை கட்டுப்படுத்தி மனுஷரை அவர்களுடைய சொந்த புத்திக்கு கொணர்ந்து தங்கள் ஆடைகளை உடுத்துக் கொள்ளச் செய்தது. அதே சத்தம் நமக்கு வாக்குத்தத்தத்தை அருளிச் செய்திருக்கிறது. “நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்” (யோ. 14:12) என்றது. கரிமில வாயுவின் தூள்படிந்த மார்க்க சம்பந்தமான எரி திரவத்தினால் இயங்கும் ஊர்தியைக் கொண்டு நீங்கள் ஒருபோதும் செய்ய முடியாது. ஒரு ஸ்தாபனத்தில் அதை ஒரு போதும் செய்ய முடியாது. உங்களை வெறுமையாக்கி பலவீனமாக்கி ஊற்றிவிட்டு பரிசுத்த ஆவியானவரை உள்ளே அனுமதித்து அவர் உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிறகடித்து ஒவ்வொரு மூடலையும் நீக்கும்போது உங்களால் அதைச் செய்ய முடியும். நமக்கு ஸ்தாபனம் ஏதும் தேவையில்லை. 141எங்களுக்கு என்ன தேவை? ஓ, தேவனே, இங்கே அது இப்பொழுது சுற்றிலும் ஊற்றப்படுகின்ற உணர்வை உணர்கின்றேன். தேவனுடைய இடி முழக்கத்தோடும் ஆவிக்குரிய மின்னலோடும் இவ்வுலகை அசைத்து அவமானத்திற்குட்படுத்த எழும்பும் ஓர் தீர்க்கதரிசிதான் தான் நமக்குத் தேவை. அல்லேலூயா! வெறுமையான பாத்திரம் தான் அவருடைய தேவை. அது உண்மை. ஒரு பிரித்தெடுக்கப்பட்ட சபை, சிறுபான்மையான சிறிய சபை தேவனுடைய வல்லமையையும், ஆசீர்வாதங்களையும் அவருடைய செய்தியையும் பெற்றுக் கொள்ளும். அல்லேலூயா! அதுதான் நமக்குத் தேவை. பலமாகத் தக்கதாக பலவீனமாகுங்கள். அது எல்லா பிசாசையும் ஜெயிக்கும். அது படித்தவர்களை அவமானத்திற்குட்படுத்தும். அது தேவனால் அழைக்கப்பட்டவர்களான ஆணையும், பெண்ணையும் மட்டும் கொண்டு வரும். 142“நோவாவின் நாட்களில் நடந்ததைப் போல மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும். எட்டுப் பேர் மட்டும் இரட்சிக்கப்பட்டார்கள்” என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எலியாவின் நாட்களில் 7000 பேர் மட்டும் அதைப் பெற்றுக் கொண்டார்கள். ஓ, நாம் இப்பொழுது எங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். யோவான் ஸ்நானகன் வந்த போது அந்த சபை ஒரு சிறுபான்மையோராகத் தானிருந்தார்கள். நிச்சயமாக, ஆனால் அங்கே எண்ணெய் ஊற்றப்பட்ட தக்கதாக வெறும் பாத்திரங்கள் இருந்தன. தேவனே நாங்கள் வெறுமையாகட்டும். வெறுமையாகுங்கள் நண்பர்களே! பலவீனமாகுங்கள் உங்கள் சொந்த திறமையை மறுதலியுங்கள். இந்த ஒலி நாடாவைக் கேட்பவர்களே, நீங்கள் எங்கிருந்து வந்தவரானாலும் சரி உங்களை வெறுமையாக்குங்கள். தேவனுடைய பலபீடத்தில் உங்களை பலியாக ஊற்றிவிடுங்கள். தேவ தூதன் நெருப்புத் தழலைக் கொண்டு வந்து சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையினால் பாத்திரத்தை நிரப்பட்டும். அப்பொழுது அவர் உங்களை பலப்படுத்துவார். நீங்கள் நிலை நிற்பதற்கு கிருபையைத் தருவார். 143ஒரு நிமிஷம் நம் தலைகளை வணங்குவோம். ஓ கர்த்தாவே, மற்றுமொரு ஞாயிறு காலை கழிந்துவிட்டது. இந்த பயபக்தியான கூட்டத்தில் அமர்ந்திருக்கும் ஆண்களும், பெண்களும், உம்மை அறிந்தவர்களாக தங்களுடைய இருதயங்களில் உம்முடைய ஆவியை தங்கப் பெற்றவர்களாக உம்மை விசுவாசித்து, நீர் நடந்துக் கொள்ளக் கூறின கட்டளையின்படி ஒவ்வொரு வார்த்தையின் மேலும் இவர்கள் கிரியை புரிகின்றார்கள். இந்த ஜனங்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த ஒலிநாடாக்கள் மற்ற தேசங்களுக்குச் செல்லக் கூடும். அங்குள்ள தாழ்மையுள்ள பெண்மணிகளும், ஆண்களும், இதை வீடுகளுக்கும், கோத்திரங்களுக்கும் மற்ற தேசங்களுக்கும் எடுத்துச் செல்லக் கூடும். அவர்கள் இதைக் கேட்டு கர்த்தாவே, புரிந்துக் கொண்டு, பரிசுத்த ஆவியானவர் அவர்களை நிரப்பத் தக்கதாக தங்களை வெறுமையாக்கட்டும். கர்த்தாவே, இக்காலையில் நாம் பேச ஆரம்பித்த நேரத்திலிருந்து இங்கும் சிலர், தங்கள் சுய எண்ணங்களின் மேலும், திறமைகளின் மேலும் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்களென்றும், தேவனே, உம்முடைய பார்வைக்கு முன்பாக அசுத்தமாகவும், ஒன்றுமில்லாததாகவும் காணப்படும். சாதாரண மனுஷ புத்திசாலித்தனத்தின் மேல் சார்ந்திருந்தார்களென்றும் உணர்ந்திருந்தால், தேவனே, இந்நேரத்தில் அவர்கள் தங்களை வெறுமையாக்கி, ஒப்புக் கொடுத்து பரிசுத்த ஆவியின் நிறைவிற்காக வரட்டும் கர்த்தாவே. 144“வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்?” (அப்: 2:41) என்று வேதம் கூறுகிறது. பிதாவே, இந்த காலையில் இந்த கட்டிடத்திற்குள், ஒரு சிறிய பெண்மணி பின்னால் அமர்ந்திருக்கிறார்கள். அந்த சகோதரி ஹிக்ஸ் ஒரு இரவு என்னிடத்தில் வந்தார்கள். அச்சமயம் அவர்களுடைய சரீரத்தில் எலும்புகளேயன்றி வேறு ஏதும் இல்லை. ஒரு தோல் போர்த்தப்பட்ட சரீரம், புற்று நோய் அவளை தின்று விட்டிருந்தது. அச்சமயம் அவள் கணவன் இன்னும் கிறிஸ்தவனாயிருக்கவில்லை. அந்த இரவிலே நான் செய்த ஜெபத்தை நினைவு கூறுகிறேன். நான் இவ்விதமாக ஜெபம் செய்தேன்.“தேவனே, நீர் சிறிய தாவீதுக்கு ஒரு சிறு கவணைக் கொடுத்து ஒரு சிங்கத்தின் பின்னால் அனுப்பினீர். அவன் அந்த ஆட்டைத் திருப்பிக் கொண்டு வந்தான். இந்த புற்றுநோய் என்னுடைய சகோதரியை பிடித்துக் கொண்டிருக்கிறது. பிசாசு என்று நனறிவேன். தேவனே, நீர் தேவனென்று அறிவேன். நான் உம்மை பார்த்திருக்கிறேன். உம்மோடு நான் பேச நீர் என்னோடு திரும்ப பேசியிருக்கிறீர். நான் இந்த தேவ ஆட்டிற்காக வந்திருக்கிறேன்; புற்று நோயே அவளை விட்டு விலகு என்று கூறி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவள் வீடு செல்லுமாறு கட்டளைக் கொடுத்தேன். கிறிஸ்தவனாகாத அவளுடைய கணவன் அந்த நேரத்தில் வார்த்தையை விசுவாசித்து தன் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதோ இக்காலையில், ஒரு மகத்தான சுகதேகியாக அப்பெண்மணி புற்று நோய் நீங்கினவளாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வந்துள்ளார்கள். ஓ, தேவனே, நிரப்பப்பட தக்கதான அந்த வெறும் பாத்திரத்திற்காக நன்றி. தேவனே, அந்த ஆத்துமாவை நீர் ஆசீர்வதிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். அனேக முன்மாதிரிகளுள் இதுவும் ஒன்று கர்த்தாவே. உம்முடைய ஆசீர்வாதம் இந்த ஜனங்களின் மேல் தங்குவதாக. 145ஒரே ஒரு காரியம் விடப்பட்டிருக்கிறதை நான் காண்கிறேன் பிதாவே. அது, சில வெறும் பாத்திரங்களை நீர் எங்காவது எழுப்பி இந்த உலகம் தன்னைக் குறித்து அவமானப்படச் செய்யும் அல்லது இயேசு கிறிஸ்துவின் வருகையை துரிதமாக்கும் என்பதே. இரண்டு காரியம் விடப்பட்டிருக்கிறது கர்த்தாவே, நாங்கள் அதை இப்பொழுதே பார்த்தாக வேண்டும். ஏனெனில் இது கடைசி காலம் என்பதை நாங்கள் அறிகிறோம். ஒன்று, இப்பொழுதே வல்லமையான ஒன்று எழும்புவதைக் காணச் செய்யும் அல்லது கர்த்தரின் வருகையை நாங்கள் காணச் செய்யும். எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டன. சபை உயிர்த்தெழுவதற்கு முன்பு வெளிப்படுத்தின விசேஷம்: 3-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி சபை எடுக்கப்படும் முன்பு, லவோதிக்கேயா சபைக்கு ஒரு தூதன் அனுப்பப்பட்டு, பிள்ளைகளின் இருதயத்தை அவர்கள் முற்கால பிதாக்களிடத்திற்குத் திருப்பும் ஊழியமானது அவர்களை பெந்தெகொஸ்தேயின் அனுபவத்திற்குள் கொண்டுச் செல்லும். நோவாவின் நாட்களில் நடந்தது போல ஆயிரமாயிரமான ஆத்துமாக்கள் இழக்கப்பட்டு போவார்கள். கர்த்தாவே அனேகர் இழக்கப்படுவார்கள். பிதாவே அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது என்பதை காண்கிறோம். 146கர்த்தராகிய இயேசுவே உம்முடைய சபையை எடுத்துக் கொள்ள வாரும். உமக்கு சித்தமானால் கர்த்தாவே, சபை எடுக்கப்படுவதற்கு சற்று முன்பதாக உம்முடைய வல்லமையை எழுப்பட்டும். ஓ, தேவனே, இந்த பாத்திரங்களை நிரப்பும், எழுப்பும் கர்த்தாவே. இந்த உலகத்தை இன்னும் ஒரு விசை அசையும்! காலம் கடந்துவிட்டது என்று எங்களுக்குத் தெரியும். இனி மனந்திரும்புதல் இருக்காது. அப்படியானால் இது அவர்களுக்கு மிகவும் காலம் கடந்துவிட்டதாயிருக்கும். ஆனால் கர்த்தாவே உம்முடைய வல்லமையை காண்பியும். இந்த பாத்திரங்களை நிரப்பி முன்பு ஒருபோதும் இருந்திரா வண்ணம் இந்த உலகை அசையும்! அதன் பின்பு உம்முடைய சபையை எடுத்துக் கொண்டு இந்த உலகை அழிவிற்கு விட்டுவிடும். ஓ, தேவனே, அவர்கள் தத்தளிப்பார்கள். அதன் பின்பு மகத்தான பரிசுத்த ஆவியானவர் யூதர்களிடம் வருவார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். 1,44,000 பேர் ஆட்டுக்குட்டியானவருடன் சீனாய் மலையின் மேல் நிற்பதை காண முடிகிறது. அச்சமயம் மணவாட்டி பரலோகத்தில் இருப்பாள். ஆட்டுக் குட்டியானவர் திரும்பவும் வந்து (யோசேப்பு) தம்முடைய ஜனங்களுக்கு தம்மை தெரியப்படுத்துகிறார். அந்நாட்களில் அவர் அங்கு நிற்கும்போது அங்கு அவர்கள் மத்தியில் ஒரு புலம்பல் உண்டாயிருக்கும் என்று வேதம் கூறுகிறது. அவர் தம்மை தெரியப்படுத்தும் போது அவர்கள், “உம் கையில் இருக்கும் இந்த வடுக்கள் ஏது?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், “என் சிநேகிதனின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள்” என்பார், என்று வேதம் கூறுகிறது. அப்பொழுது அவர்கள், “இவரைத்தான் நாம் சிலுவையிலறைந்தோம்” என்பார்கள். யோசேப்பு கூறியது போன்று அவரும், “கவலைக் கொள்ளாதீர்கள், ஏனெனில் புறஜாதியாரின் ஜீவனைக் காப்பதற்காக தேவன் இதை செய்தார். இது உங்களுடைய தப்பிதமல்ல” என்று கூறுவார். அதன் பின்பு ஒருவன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறது போல அழுது புலம்புவார்கள். வம்சம், வம்சமாக புலம்புவார்கள். 147ஓ, பிதாவே, அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் 70 வாரங்களின் முடிவாயிருக்கிறது. நேரம் வெகு விரைவிலிருக்கிறது, கர்த்தாவே. ஓ, தேவனே, நவநாகரீக சபை வேதசாஸ்திரம் என்னப்பட்ட இந்த நவநாகரீக ஸ்திரீக்கு விரோதமாக உண்மையான தீர்க்கதரிசிகளின் சத்தம் கூக்குரலிட்டும்... சத்தியத்தைக் கூறபயப்படும், இந்த பிரசங்கிகளை அசையும் ஓ தேவனே, இதுவரை இருந்திராவண்ணம் இந்த மனிதர்களை எடுத்து அசைத்து தங்களைக் குறித்து அவமானமடையச் செய்யும். ஆனால் ஒரு காரியத்தை அறிந்திருக்கிறோம். அதின் மேல் நாங்கள் இளைப்பாறி முழு நம்பிக்கையாயிருக்கிறோம். அது, “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்பதே (யோ: 6:44). நீர் எந்த அளவிற்கு நெருங்க வேண்டுமென்று விரும்புகிறீரோ அந்த அளவிற்கு அவர்கள் நெருங்குவார்கள். ஆனால், “பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்: 12:32) என்று கூறினர். அது உண்மையென்று நாங்கள் அறிவோம். அந்த நேரம் வரும்போது மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே ஆயத்தமாய் இருப்பார்கள் என்று எங்களுக்கு எச்சரித்திருக்கிறீர். பின்பு எல்லாக் காலங்களிலும் மீட்கப்பட்டவர்கள் - உயிர்த்தெழுந்து வருவார்கள் என அறிகிறோம். ஆகவே பிதாவே, இவைகளை நாங்கள் பார்த்து, இந்நாட்களின் செய்தியையும் காண்கிறோம். இன்றுள்ள புறக்கணித்தலையும் ஒத்துழையாமையும் நாங்கள் காண்கிறோம். உம்முடைய ஜனங்கள் தங்களை, “ஒன்றுமில்லை'' என்று அறிக்கையிடுவதை காண்கிறோம். கர்த்தாவே, அவர்கள் உம்மால் நிரப்பப்பட விரும்புகிறார்கள். அவர்களைக் கொண்டு கர்த்தர் வருவதற்கு சற்று முன்பு இந்த உலகத்தை அசையும் என்று ஜெபிக்கிறேன். 148இப்பொழுது எங்கள் மத்தியில் வியாதியுண்டு, சரீர சுகத்திற்காக இங்கு ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் விட்டுவிடவில்லை கர்த்தாவே, ஏனெனில் உம் வசனத்தில், “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி” (சங். 103:3) என்று கூறப்பட்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொருவர் மீதும் உம்முடைய சுகமாக்கும் வல்லமை வருவதாக என்று ஜெபிக்கிறேன். இருதயமானது உம்மை நோக்கியிருக்கும் போது ஒருவித சிறு அசைவுமின்றி அந்த ஆத்துமாவை அங்கே உம்மால் இரட்சிக்கக் கூடுமானால் சரீரத்தை சுகமாக்குவது எவ்வளவு நிச்சயமானதாயிருக்கும். இங்கே கைக்குட்டைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மகத்தான அப்போஸ்தலன் பவுல் செய்ததைப் போன்று அவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கின்றேன். இந்த கைக்குட்டைகள் யார் யார்பேரில் போடப்படுகிறதே அவர்களெல்லாம் சொஸ்தமாகட்டும். உடைந்துபோன குடும்பங்கள் திரும்பக் கூடட்டும். தகப்பனாரும், தாயாரும், பிரிந்து போய் பெற்றோரற்ற சிறிய பிள்ளைகளின் குடும்பம் ஒன்று சேரட்டும். அனுக்கிரகியும் கர்த்தாவே, வியாதிகளை சொஸ்தப்படுத்தி, தொல்லைப்படுகிறவர்களை விடுதலையாக்கி உமக்கு மகிமையை எடுத்துக் கொள்ளும். 149கர்த்தாவே, உலகத்தோடு உள்ள உறவை மறுதலித்து எங்களுடைய இருதயமும், கண்களும், எங்கள் பாத்திரங்களும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். வேத வசனம், “ஆபிரகாம் தன்னுடைய வீட்டை விட்டு, தேசத்தை விட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போல் சஞ்சரித்து இவ்வுலகத்தைச் சார்ந்தவனல்ல என்று அறிக்கையிட்டான். ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், அவர்கள் இவ்வுலகத்தாரல்ல என்று அறிக்கை செய்தார்கள். ஏனெனில் தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்திற்கு அவர்கள் காத்திருந்தார்கள்” என்று கூறுகிறது. 150நான் இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருக்கையிலே இருதயங்கள் மாறட்டும். பிதாவே, அவ்விதமான தன்மைகள் உருவாகட்டும். ஞானஸ்நான ஆராதனை வரும்போது ஜனங்கள் மத்தியில் ஓர் பெரிய எழுப்புதல் உண்டாகி ஜனங்கள் முன்பு நினைத்திரா வண்ணம் காரியங்கள் வெளிப்படட்டும். நீர் யாரை அழைத்தீரோ அவர்களை அனுப்புவீர் என்று கூறியிருக்கிறீர். கர்த்தாவே ஒன்றுமில்லாத இந்த பாத்திரத்தினின்று வெளி வந்த சிறிய உடைக்கப்பட்ட செய்தியோடு எல்லாவற்றையும் உமக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த வார்த்தைகளை நீர் எடுத்துக் கொண்டு ஜனங்களுடைய இருதயங்களில் உருக்கி ஊற்றி அதினின்று அவர்கள் விலகாமல் செய்ய ஜெபிக்கிறேன், அருளிச் செய்யும் கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இப்பொழுது உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 151[ஒரு சகோதரன் ஒரு செய்தியை அளிக்கிறார்; “ஆம், என் ஜனங்களாகிய உங்களிடம் இன்றைய தினம் நான் உரைக்கிறதாவது. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை நீங்கள் கேட்டீர்கள் என்று நான் சொல்லுகிறேன். உங்களில் அநேகர் தீர்மானம் செய்யக் கூடிய பள்ளதாக்கில் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்கு சொல்லுகிறேன். இன்றைய தினத்திலே என்னுடைய தீர்க்கதரிசி கொண்டு வந்த எனது வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவீர்களாகில், வரப்போகிற நாட்களிலே நீங்கள் என்னுடனே கூட மகிமையில் இருப்பீர்கள். நான் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கும் வழியிலே நடவுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதில் பிரவேசிக்கிறவர்கள் சிலர், என்று நான் சொல்லுகிறேன். ஆனாலும் என் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்படி இந்த நாளிலே உங்களை நியமித்திருக்கிறேன் என்று நான் சொல்லுகிறேன். இந்தக் காலையிலே, என் தீர்க்கதரிசியிடம் நான் உரைக்கிறதாவது, எனது ஜீவ அப்பத்தை நீ நன்றாக பிட்டுக் கொடுத்தாய் என்று நான் சொல்லுகிறேன். நீ தனியாக நின்று கொண்டிருப்பது போல உன் இருதயத்தில் தோன்றுகிறது, ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன், அந்த நாளிலே என்னுடைய வருகிற ஒரு கூட்ட ஜனங்களை நான் கொண்டிருப்பேன். மேலும் நான் கூறுகிறதாவது, இவர்களெல்லோரும் அந்த சிங்காசனத்தை சுற்றிலும் வந்து கூடும்போது, கலியாண விருந்தானது ஆயத்தப்படும், அப்பொழுது உனக்கு முன்னர் கடந்து சென்ற உன்னுடைய அன்பானவர்களோடு நீ இருப்பாய்”, என்று கர்த்தர் உரைக்கிறார்.] நீங்கள் தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நிச்சயித்துக் கொள்ளுங்கள். “இரு நினைவுகளால் ஏன் நீங்கள் தடுமாற வேண்டும்”? எலியா சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவன் “யேகோவா, தேவனானால் அவரை சேவியுங்கள், உலகம் தேவனானால் உலகத்தை சேவியுங்கள்” என்றான். பாருங்கள்? ஸ்தாபனத்தின் வழி சரியென்றால் அதன் பின்னே செல்லுங்கள்; ஆனால் வேதாகமம் உண்மையானால் அதனிடம் வாருங்கள். யாரை சேவிப்பது என்பதைக் குறித்து இந்த மணி நேரத்தில் தெரிந்தெடுங்கள். 152இப்பொழுது ஆவியிலே இருந்து ஒரு பாடலைப் பாடுவோம். “அவர்கள் ஸ்தோத்திரப் பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டு போனார்கள்” என்று வேதம் உரைக்கிறது. நம்முடைய இருதயங்களும் தலைகளும் குனிந்தவாறு இருக்க “நேசிக்கிறேன்'' என்ற பழையப் பாடலை பாடுவோமாக. நேசிக்கிறேன் (இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தீர்மானியுங்கள்) நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில். (சகோ. பிரான்ஹாம் “நேசிக்கிறேன்” என்ற பாடலை தாழ்ந்தக் குரலில் பாடுகிறார்) கிறிஸ்துவுக்காக நீங்கள் தீர்மானம் எடுப்பீர்களா? தீர்மானம் என்ற விதமாக இல்லை. உங்களை காலியாக்கி கர்த்தாவே 'நான் நல்லவன் இல்லை' என்று கூறுங்கள். “என்னிடத்தில் எந்த நன்மையும் இல்லை. நான் அறிந்ததையெல்லாம் மறக்கச் செய்யும். இது என் தலைக்கு மேல் செல்லவிடாமல் என்னிடத்தில் வாரும் கர்த்தராகிய இயேசுவே . நான் அதைப் பெற்றுக் கொண்டு உம்முடைய ஆவியினால் நிறையட்டும். இந்த நாளிலிருந்து நான் உம்முடையவனாக இருக்கட்டும். இப்பொழுது ஜெபியுங்கள், இந்த சிறிய எளிமையான ஜெபத்தை தேவனிடத்தில் கூறுங்கள். பிள்ளைகள் எல்லாரும் கூட. கல்வாரியின் ஆட்டுக் குட்டியே தெய்வீக இரட்சகரே; (உங்கள் இருதயத்தில் மனந்திரும்புங்கள்) நான் ஜெபிக்கையில் கேளும், என் பாவங்கள் யாவும் அகற்றும் ஓ, இந்நாளிலிருந்து நான் உமக்கே முழு சொந்தம்! வாழ்க்கையின் இருளான தத்தளிப்பை நான் கடக்கும் போது சஞ்சலம் என்னை சுற்றிக் கொள்ளும் போது என் வழிகாட்டியாயிரும், இருளை வெளிச்சமாக்கும் சஞ்சலம் பயம் போக்கும், வழி என்றும் விலகாமல் உம் பக்கத்திலிருத்தும் 153(சகோ. பிரான்ஹாம் “என் விசுவாசம் மேல் நோக்கி உம்மை காண்கிறது” என்ற பாடலை தாழ்வான குரலில்பாடுகிறார்). எத்தனை பேர் விசுவாசித்தீர்களோ, அவர்களெல்லாம், தேவனுக்கு முன்பாக உங்களை வெறுமையாக்கி, இனி ஒன்றும் உங்களை தடுமாறச் செய்யாத தீர்மானம் எடுத்து, எந்த வித திறமையையும் இனி ஒருபோதும் வராத வண்ணம் உண்மையான தீர்மானத்தை தெளிவாக தேவனோடு செய்து ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகுங்கள். குளத்தில் தண்ணீர் உண்டு, பெண்மணிகளெல்லாம் எனக்கு வலது பக்கமும், ஆண்கள் எனது இடது பக்கமும் வாருங்கள். ஞானஸ்நான ஆராதனை இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பித்து விடும். உங்களை வெறுமையாக்கினவர்கள், ஊழியர்கள் கூறுவதையோ, மார்க்கம் கூறுவதையோ, ஸ்தாபனம் கூறுவதையோ விசுவாசிக்க வேண்டாம். மாறாக, கர்த்தருடைய வழியைத் தெரிந்துக் கொண்டு, “கர்த்தர் சொல்லுகிறதாவது”, என்பதை விசுவாசியுங்கள். இப்பொழுது வாருங்கள். வாழ்க்கையின் இருளான தத்தளிப்பை நான் கடக்கும் போது இங்கேயிருக்கும் அப்பெண்மணி, அங்கு இருக்கும் ஓர் மனிதன் அதுதான் உனக்கு பீட அழைப்பு. “விசுவாசித்தவர்கள் யார் யாரோ அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்'' ... வழிகாட்டியாயிரும் இருளை வெளிச்சமாக்கும் சஞ்சலம் பயம் போக்கும், வழி என்றும் விலகாமல் உம் பக்கத்திலிருத்தும். 154இங்குள்ள எத்தனை பெண்கள் இக்காலையில்... நான் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூறுகிறேன் எத்தனைப் பேர் குட்டை முடியை வைத்திருப்பதைக் குறித்து வெட்கமுற்று, அவருடைய கிருபையால் அதை வளரச் செய்ய விட்டு விடுகிறீர்கள்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எத்தனை ஆண்கள் உங்களுக்கு சொந்தமான மனைவிமார்கள் சிகரெட் பிடிப்பதையும், ஆணின் ஆடையை அணிய அனுமதித்ததைக் குறித்து வெட்கமடைகிறீர்கள்? “அது கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாயிருக்கிறது” என்று வேதம் கூறுகிறது. தேவன் மாறாதவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் மாறுவதில்லை, ஒரே ஒரு சுபாவம் தான் அவருக்கு உண்டு; அது பரிசுத்தம். அதை அவர் மாற்றுகிறதில்லை. நீங்கள் அவரைப் போல் ஆகாவிட்டால் அவரைக் காண முடியாது. “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது”, ஆணின் சட்டையை அணிந்துக் கொள்ளும் போது தேவன் தம் வயிற்றில் குமட்டல் கொண்டு வாந்திப் பண்ணுவார். அருவருப்பும் அசுத்தமான ஆவியம் உன்னிலிருந்தால் பரலோகம் எப்படிச் செல்வாய்? குட்டை முடியுடன் பரலோகம் எப்படிச் செல்வாய்? ஏனெனில், “தலைமயிர் கத்தரிக்கப்படுகிறது ஸ்திரீக்கு வெட்கமானால்?” என்று தேவன் கூறினார். மனைவி என்ற அடிப்படையையே அவள் மறுதலிக்கிறாள் என்று அர்த்தம். தேவன் மாறுவதில்லை. அது அவர் வார்த்தை. நண்பனே, நீ செவிக் கொடுத்தால் நலம். உங்கள் மனைவிகள் அவ்விதம் செய்வதை (குட்டை மயிர் - மயிரைக் கத்தரித்துக் கொள்ளுதல்) நீங்கள் அனுமதிக்கிறதைக் குறித்து உங்களுக்கு வெட்கமுண்டாகவில்லையா? உங்களுக்கு வெட்கமாயில்லையா? 155தேசத்தின் முதல் பெண்மணியைப் (யேசபேல்) போல் இருக்க வேண்டாம். தேவனைப் போல் இருங்கள்! நவநாகரீக உலகத்தின் போக்கினின்று விலகி உங்களை வெறுமையாக்குங்கள். அப்பொழுது கிறிஸ்து தம்மை உங்களுக்குள் ஊற்றுவார். பின்பு நீங்கள் உண்மையிலேயே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பீர்கள். அவரால் அதை செய்ய இயலாது. அவருடைய அடிப்படைக்கு விரோதமாக அவரால் அதை செய்ய முடியாது. அவருடைய வார்த்தையோடு நீங்கள் ஒன்றிப் போகாமலிருக்கும் வரை அவர் அதைச் செய்யமாட்டார். அவர் எதையாகிலும் நமக்கு செய்யும் முன்பு நாம் அந்நிலைக்கு வரவேண்டும். நீங்கள் அதை அறிவீர்கள் நம்மில் ஒவ்வொருவரும் அதை அறிவோம். இதை எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இப்பொழுது அதைக் குறித்து ஒன்றைச் செய்வோம். 156தேவனே எங்கள் மேல் கிருபையாயிரும் நமக்கு அவர் எவ்வளவாக தேவையாயிருக்கிறார். இப்பொழுது நாமெல்லாருமாக சேர்ந்துக் கொள்வோம். நியாயத்தீர்ப்பின் நாளில் நான் பேசின ஒவ்வொரு வார்த்தையையும் நான் முகமுகமாக சந்திக்க வேண்டும். அதை நான் சந்திக்க வேண்டும். இப்பொழுது அக்கிரமமானது என்னுடைய கரங்களினின்று, மனச்சாட்சியினின்று, ஆத்துமாவினின்று, தேவனிலிருந்து கடந்துவிட்டது. ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் அங்கு இந்நிலைமைகளில் நின்று கொண்டு இன்னுமாக உங்கள் ஆத்துமாக்களில் குற்றப்படுத்தப்படாமலிருப்பீர்களானால், என்ன செய்ய போகிறீர்கள்? அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ளலாம். தேவன் உங்களோடு இடைப்படவில்லையென்று நீங்கள் அதை கடந்துவிட்டீர்கள் என்றும் அறிந்துக் கொள்ளலாம். பாருங்கள்? ஒரு வேளை நீங்கள் பக்தியுள்ளவர்களாகவோ, சபைகளை சார்ந்தவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அதை கடந்துவிட்டீர்கள். தேவ வார்த்தையானவர் இறங்கி சென்று ஒரு மனிதனை கொண்டு வருகிறார். அதுதான் அவர்களை திரும்பவும் கொண்டு வருகிறது. பாருங்கள், ஆகவே அது தேவ வார்த்தை. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக அதை மறுதலிக்க முடியுமா என்று அந்த ஊழியக்காரனையும், எந்த மனுஷனையும் எங்குமுள்ளவர்களையும் கேட்கிறேன். அது உண்மை. அது அவ்விதம் இல்லை, பாருங்கள். 157ஆகவே உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்போம். அவ்விதமாக இருக்க முயற்சிக்கும் யாவருக்கும் வெந்து வெட்டப்பட்ட நிலை தேவையாயிருக்கிறது. ஆம், ஐயா. எல்லாருக்கும் அது தேவை. தேவனே என் மேல் கிருபையாயிரும், என்னை எடுத்து உருவாக்கும். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அறியத் தக்கதாக தேவனுக்கு முன்பாக செல்வதே எனது நோக்கமாயிருக்கிறது. தேவனே, என்னை பொறுப்பெடுத்துக் கொள்ளும். என்னைப் பற்றியவைகள் நன்மையானதல்ல (இன்னும் அதிகமாக) தேவனே, அதை வெட்டிவிடும் என்பதே எனது இக்காலை ஜெபமாயிருக்கிறது. என் இருதயத்தை விருத்தசேதனம் செய்யும். காதுகளையும் என் முழு சரீரத்தையும் கூட கர்த்தாவே, நீர் விரும்பும் வண்ணம் என்னை உருவாக்கும். அதுவே எனது ஜெபம். என் சுயம் வெட்டப்படுவது தான் எனது தேவை. கர்த்தாவே, வேதத்திலிருந்து எனக்குக் காட்டி என்னோடு பேசும், நான் போய் அதை செய்வேன். கர்த்தாவே சொல்லட்டும். நான் அதனோடு ஒன்றிபோக ஆயத்தமாயுள்ளேன். வேத வார்த்தை என்ன கூறுகிறதோ அவ்விதமே நானிருக்க விரும்புகிறேன். வேதவார்த்தையில் நான் கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன். “எந்த மனிதனின் வார்த்தையும் பொய், தேவனின் வார்த்தையே மெய்”, இந்த காலத்தின் போக்கு அவ்விதமாயில்லையா? அவ்விதமாக விசுவாசிக்கிறீர்களா? 158(மகனே, ஞானஸ்நானம் எங்கு கொடுக்கிறார்கள் என்று தேடுகிறாயா? ஆம், அதோ அந்த இடத்தில் சகோதரனே இனியும் தாமதிக்க வேண்டாம். இந்த பக்கமாக வாருங்கள்). இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற அநேகராகிய ஆண்களும் பெண்களுமாக பாவங்களை அறிக்கையிட்டு வருகின்றீர்கள் (இந்தப் பக்கம் சகோதரனே) “பாவ மன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்... அப்பொழுது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவீர்கள்”. 159இப்பொழுது, இங்குள்ள கத்தோலிக்க ஜனங்களுக்கு, பாவ மன்னிப்புக்கென்று அதுதான் நாமம். சபையானது பாவத்தை மன்னிக்க வல்லமையுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒரு சபை பாவத்தை எப்படி மன்னிக்க முடியும்? இயேசு சபையைப் பார்த்து எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்பட்டிருக்கும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்“ என்றார். (யோ: 20:23). அவர்கள் ஆரம்ப சபையிலே முதலாவதாக எப்படி பாவத்தை மன்னித்தார்கள்? அவர்கள் அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைத்து பாவ மன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் (அப்: 2:38) அறிக்கையின் கூடாரத்திலல்ல; ஆம், ஆனால் அவர்கள் அங்கு நின்று கொண்டு இருதயத்தில் விசுவாசித்து தேவனுக்கு முன்பாக மனந்திரும்பினார்கள். ”வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்'' (அப்: 2:41) பின்பு அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். ஆமென். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். 160இப்பொழுது அநேகர் ஞானஸ்நானம் பெற விரும்பி காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராகிலும் இன்னும் வர விரும்புகிறீர்களா? யாராகிலும் விசுவாசித்திருக்கிறீர்களா? ஆண்கள் இடது பக்கமும், பெண்கள் வலது பக்கமும் வாருங்கள். கர்த்தாராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் முழு இருதயத்தாலும் விசுவாசியுங்கள். உங்களிலுள்ள எல்லாவற்றாலும் அவரை விசுவாசியுங்கள். இப்பொழுது நாமெல்லாரும் ஒன்றாக தலைகளை வணங்கி இந்த முன் மாதிரியான ஜெபத்தை திரும்பச் சொல்லுவோம். ஏனென்றால் இப்பொழுது நான் வினோதமாக இதை செய்வதற்காக நடத்தப்பட்டிருக்கிறேன். நம் தலைகள் குனிந்திருக்க நீங்கள் என்னோடு கூட ஜெபியுங்கள் (சகோ. பிரான்ஹாமும், சபையாரும் ஒருமிக்க ஜெபிக்கிறார்கள்) ...பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். 161இப்பொழுது நாம் அவ்விதமே தலைகளை வணங்கியிருப்போம். சகோ. நெவில் அவர்கள் இங்கு வந்து அவர் இருதயத்திலுள்ளதை கூறவும் முடிக்கவும் பின்பு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் ஞானஸ்நான ஆராதனைப் பற்றி அறிவிக்கவும் அழைக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என்பதே என் ஜெபமாயிருக்கிறது. நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நீங்களும் எங்களுக்காக ஜெபியுங்கள். உங்களுடைய ஜெபங்கள் மெய்யாக எனக்குத் தேவையாயிருக்கிறது.